உங்கள் செலவுகளை குறைத்து நிறைய சேமிக்க எளிமையான 8 வழிகள்..!

By: Bala latha
Subscribe to GoodReturns Tamil

நீங்கள் ஒரு புதிய குடியிருப்பை இணைந்து கடனில் வாங்கியிருந்தால் உங்கள் வாழ்க்கைத் துணைவர் வீட்டுக் கடனை உங்களுடன் இணைந்து கட்டுகிறார் என்றால் நீங்கள் இருவரும் தனித்தனியாக 2,00,000 முதல் 2.5 லட்சம் வரை தள்ளுபடியைப் பெறும் அதிகாரத்தைப் பெற்றுள்ளீர்கள் என்று உங்கள் வாழ்க்கைத் துணைவரிடம் சொல்லுங்கள்.

ஒரு வேலை உங்களுக்கு வேலைக்குச் செல்லும் மகனோ அல்லது மகளோ இருந்தால் வங்கி உங்கள் கடனை மூன்று வழிகளில் பிரித்துக் கொடுக்க விரும்பும், அந்த அனைத்து மூன்று வழிகளுக்கும் தள்ளுபடி கிடைக்கப் பெறலாம்.

இடை ஆதாயம்

நீங்கள் பணி மாற்றம் காரணமாக ஒரு புதிய நகரத்திற்குச் சென்றால் உங்கள் முதலாளியால் அளிக்கப்படும் ஓட்டல் தங்குமிட வசதி முதல் 15 நாட்களுக்கு வரிக்குச் சிறப்பு அதிகாரம் பெற்றதல்ல.

பயணம்

ஒரு ஊதியம் பெறும் பணியாளராக விடுமுறை பயணச் சலுகை விதிவிலக்கு உங்களுக்கு 4 கட்ட வருடங்களுக்கு ஒருமுறை 2 உள்ளூர் பயணங்களை மேற்கொள்ளும் போது அனுமதிக்கப்படுகிறது. தற்போதைய 4 வருடக் கட்டம் ஜனவரி 1 2014 இல் தொடங்கியது.

எனவே நீங்கள் கடந்த வருடத்தில் உங்களுக்கு அந்த அளவு தேவையான இடைவெளி எடுக்கப்படவில்லையென்றால், அதை இப்போது செய்யுங்கள். முறையான ரசீதுகள், தொடர்பான பயணச் சீட்டுகள் ஆகியவற்றைத் தொடர்ந்து வைத்திருந்து உங்கள் விடுமுறை பயணச் சலுகைக்குத் தாக்கல் செய்யுங்கள்

 

போக்குவரத்து

போக்குவரத்துப் படிச்சலுகை விலக்கைத் தாக்கல் செய்ய நீங்கள் செலவுச் சான்றை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் நீங்கள் அலுவலக நிமித்தமாகப் பயணம் செய்து செலவுகளுக்கு ஆட்பட்டிருந்தால், உங்கள் முதலாளியிடம் ரசீதை சமர்ப்பித்து அடிப்படையாகக் கொண்டு செலவுகளைத் திரும்பப் பெறலாம். மற்றும் இதற்கு வரிகள் இல்லை.

வருங்கால வைப்பு நிதி

பொது வருங்கால வைப்பு நிதியை திரும்பப் பெறுவதற்கு 5 வருட தடைக் காலம் ஆனால் சேர்ந்துள்ள நிலுவைத் தொகை மீது கடன் பெறலாம் (தொடக்க வைப்பு நிதி செய்யப்பட்ட நிதி ஆண்டின் இறுதியில் காலாவதியான ஒரு வருடத்திற்குப் பிறகு) சில காரணங்களுக்காகப் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு வழங்கப்படும்.

வீட்டு வாடகை

ஒரு தனிமனிதர் பிரிவு 80 GG யின் கீழ், முதலாளி விட்ட வாடகை படித் தொகையைத் தரவில்லையென்றால் கழித்தல் சலுகைகளுக்குத் தாக்கல் செய்யலாம். இதில் ஒரு நிபந்தனை என்னவென்றால் அவர்களுக்குச் சொந்த வீடு இருக்கக் கூடாது. வாழ்க்கைத் துணைவருக்கோ அல்லது உங்கள் குழந்தைகளுக்கோ சொந்த வீடு இருக்கக் கூடாது. இந்தக் கழித்தல் உச்ச வரம்பாக ஒரு மாதத்திற்கு ரூ 5,000 க்கு உட்பட்டது.

பணியாளர் பங்கு உரிமைத் திட்டம்

ஒரு பணியாளர் பங்கு தேர்வுத் திட்டத்தின் கீழ் உங்கள் முதலாளியால் அனுமதி வழங்கப்பட்டிருந்தால் வரிகட்ட வேண்டிய அவசியமில்லை. வரிவிதிப்பு உண்மையான ஒதுக்கப்பட்ட பங்குகளின் மீது எழுப்பப்படுகிறது மற்றும் நன்கொடை அல்லது நிலையான வட்டி ஆகியவற்றின் மீது அல்ல. அத்தகைய வருமானம் வழக்கமான ஊதிய வருமானமாக வரி விதிக்கப்படுகிறது. மற்றும் முதலாளியால் வரிப்பிடிப்புக்கு உட்பட்டது.

வீட்டு வாடகை படித்தொகை மற்றும் கடன்

உங்கள் பணியிடத்திலிருந்து வேறு ஒரு நகரத்தில் வீட்டுக் கடனில் வீடு வாங்கப்பட்டிருந்தால், தினசரி பயணம் சாத்தியமில்லை என்பதால் நீங்கள் வாடகைக்கு ஒரு வீட்டை எடுத்திருந்தால் வீட்டு வாடகைப் படித்தொகை விலக்கு மற்றும் வீட்டுக் கடன் மீது வட்டிக் கழிவு ஒரே சமயத்தில் கிடைக்கப்பெறும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Here's how these 8 hot tips can lead to cool savings

Here's how these 8 hot tips can lead to cool savings
Story first published: Saturday, March 18, 2017, 18:33 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns