கடன் பத்திரங்கள் என்றால் என்ன..?

Written By:
Subscribe to GoodReturns Tamil

கடன் பத்திரம் (debt instrument) என்பது ஒரு காகிதம் அல்லது மின்னணு சட்டப்பூர்வ கடமையாகும். அது கடனைத் திருப்பிக் கொடுப்பவர் (அல்லது கடனை வழங்குபவர்), கடன் வழங்குபவர் (அல்லது கடன் கொடுப்பவர்) க்கு கடன் வாங்கிய தொகையை வட்டியுடன் சேர்த்து திருப்பியளிக்க உத்திரவாதம் அளிப்பதன் மூலம் நேரடியாக நிதியைத் திரட்ட வழிவகுக்கிறது.

கடன் கொடுப்பவர் (அல்லது வழங்குபவர்) அசல் மட்டுமல்லாமல் வட்டியுடன் சேர்த்து ஈட்டுவதற்கு அனுமதிக்கிறது. கடன் பத்திரங்களின் வகைகள் கடனீட்டுப் பத்திரங்கள், குத்தகைகள், சான்றிதழ்கள், பரிமாற்ற ரசீதுகள், உறுதிமொழிக் குறிப்புகள் முதலியன ஆகும்.

மாற்றம்

இந்தக் கருவிகள் சந்தைப் பங்கேற்பாளர்களுக்குக் கடன் உடைமைக்கான உரிமையை ஒரு தரப்பிலிருந்து மற்றொரு தரப்பிற்கு எளிதாக மாற்றுவதற்குத் தேர்வுகளை வழங்குகிறது.

கருவியின் வாழ்நாள் காலத்தில் கடன் கொடுப்பவர் அசலுடன் ஒரு நிலையான வட்டித் தொகையைப் பெறுகிறார். இது வழங்குபவர் மற்றும் பெறுபவருக்கு இடையேயான ஒரு வகை ஐஓயூ (நான் உங்களுக்குக் கடன் பட்டுள்ளேன்) என்பதாகும்.

 

கடன் பத்திரம் முக்கியமானது ஏனென்றால்

1) இது கடன் திருப்பிச் செலுத்துதலை சட்டப்பூர்வமாக அமல்படுத்துகிறது.

2) இது கடன்பாட்டின் இடமாற்ற வசதியை அதிகரிக்கிறது.

கால அளவைப் பொறுத்து, கடன் கருவிகள் நீண்ட காலக் கடன்பாடுகள் அல்லது குறுகிய காலக் கடன்பாடுகள் என்று வகைப்படுத்தப்படுகிறது.

 

குறுகிய காலக் கடன் பத்திரங்கள்

குறுகிய காலக் கடன் பத்திரங்கள் அது தனிப்பட்டதாக இருந்தாலும், பலருடையது ஒன்றிணைந்ததாக இருந்தாலும் ஒரு வருடத்திற்குள் திருப்பிச் செலுத்த வேண்டுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

உதாரணமாகக் கிரெடிட் கார்ட் கட்டணங்கள், தினக்கூலிக் கடன்கள் அல்லது கருவூலக் குறிப்புகள். நீண்ட காலக் கடன் பத்திரங்கள் ஒரு வருடம் அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்களில் திருப்பிச் செலுத்தப்படுகிறது.

மேலும் குறிப்பிட்டக் கால இடைவெளிகளில் மாதாந்திர தவணைக் கட்டண வழியாகத் திருப்பிச் செலுத்தப்படுகிறது. உதாரணமாக, நீண்ட காலக் கடன்கள் அல்லது அடமானங்கள்.

 

கடன் கருவிகள்

கடன்கள், பத்திரங்கள் மற்றும் கடனீட்டுப் பத்திரங்கள் போன்ற கடன் கருவிகள் தனி நபர்கள், வியாபாரிகள் மற்றும் அரசாங்கத்தால் முதலீட்டை உயர்த்த அல்லது முதலீட்டு வருமானத்தை உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது. இங்குச் சில பொதுவான கடன் கருவிகளைப் பற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது:

கருவூல மசோதா

கருவூல மசோதாக்கள் என்பவை குறுகிய காலக் கடன்களுக்கான கடப்பாடுகள் ஆகும். இது ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்திற்கு வழங்கப்படுகிறது. இதை முதிரவடைந்த பிறகே பெற முடியும். இவை ரசீதுகள் மற்றும் செலவுகளில் ஏற்படும் குறுகிய கால முரண்பாடுகளை எதிர்கொள்ள வழங்கப்படுகிறது. நீண்ட முதிர்வு காலத்தைக் கொண்ட பத்திரங்கள் தேதியிடப்பட்ட முனைமப் பத்திரங்கள் எனப்படுகின்றன.

கடன் பத்திரங்களுக்குச் சொத்து ஆதரவு இல்லை. இவை பொதுவாக நிறுவனங்களால் சில குறிப்பிட்ட நிதித் திட்டங்களுக்காக நடுத்தர அல்லது குறுகிய கால மூலதனத்திற்கு வழங்கப்படுகின்றன. கடன் அளித்தவர்களின் பணம் திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட வருவாயுடன் திருப்பிச் செலுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

அடமானம்

அடமானம் என்பது ஒரு குடியிருப்புச் சொத்துக்கு எதிராகத் தரப்படும் கடனாகும். மேலும் இதனுடன் தொடர்புடைய சொத்தினால் பாதுகாக்கப்படுகிறது. ஒரு வேளை பணம் திருப்பிச் செலுத்துவதில் தவறுதல் ஏற்பட்டால் கடன் தொகையைத் திரும்பப் பெறுவதற்குச் சொத்து பறிமுதல் செய்யப்பட்டு விற்கப்படும்.

பத்திரங்கள்

பத்திரங்கள் பொதுவாக அரசாங்கம், மைய வங்கி அல்லது வியாபார நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன. மேலும் கடன் வழங்கும் நிறுவனத்தின் சொத்துக்களால் ஆதரிக்கப்படுகின்றன. ஒரு நிறுவனத்தால் கடன் மூலதனத்தை உயர்த்துவற்கு பத்திரங்கள் வழங்கப்பட்டு அதன் தொடர்ச்சியாகத் திவால் நிலை அறிவிக்கப்பட்டால், பத்திரதாரர்கள் நிறுவனத்தின் சொத்துக்களிலிருந்து தங்கள் முதலீட்டைத் திரும்பப் பெறும் உரிமையைக் கொண்டுள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

What is a debt instrument?

What is a debt instrument?
Story first published: Wednesday, August 9, 2017, 15:19 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns