இந்த உண்மையை நான் உங்களுக்கு சொல்லியே ஆகனும்..!

By: கிருஷ்ணமூர்த்தி
Subscribe to GoodReturns Tamil

ஆமாங்க கண்டிப்பாக உண்மைய உங்கிட்ட சொல்லியே ஆகனும், அதற்கு முன் உங்களிடம் ஒரு கேள்வி. மகிழ்ச்சியான, வெற்றிகரமான வாழ்க்கை உங்களுக்குப் பிடிக்குமா..?

அட, யாருக்கு தான் பிடிக்காது என்று நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது. இன்றைய வாழ்க்கை முறையில் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடிப்படை தேவையாக நிதி நிலைமை முக்கியமாக உள்ளது. இந்த முக்கியமான நிதி மற்றும் நிதியியல் பற்றி நீங்கள் கண்டிப்பாத தெரிந்துக்கொள்ள வேண்டிய சில உண்மைகளையே நாம் இப்போது பார்க்கப்போகிறோம். (இதை பிரதமர் மோடி சொல்லவில்லை)

#1 உண்மை

நடுத்தர மக்கள் அனைவருக்கும் இருக்கும் ஓரே குறிக்கோள், வாழ்க்கை லட்சியம் என்றால் பணக்காரனாக ஆவது. இந்த லட்சியம் உங்களிடமும் இருந்தால் முதலில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது இதுதான்.

9 முதல் 5 மணி வரையிலான வேலை செய்தால், தலைகீழாக நின்றால் கூட உங்களால் பணக்காரனாக முடியாது.

 

#2 உண்மை

எப்போது 2வது வருமானத்தைக் கையில் வைத்திருக்க வேண்டும், இல்லையெனில் பெரிய அளவில் பணத்தைச் சேர்க்க முடியாது.

#3 உண்மை

வங்கிகள் எப்போது பணம் இருக்கும் ஒருவனுக்கே பணத்தைக் கொடுக்கும். ஆகவே வங்கிகள் உங்களுக்குத் தினமும் அழைத்துக் கிரேடிட் கார்டு, பர்சனல் லோன் கொடுக்கிறது என்று கூறினால். முதலில் நீங்கள் செய்ய வேண்டியது உங்களிடம் இருக்கும் பணத்தை (சொத்து அல்லது திறன்) மேம்படுத்தி வேகமாக முன்னேற திட்டமிடுங்கள்.

#4 உண்மை

நீங்கள் தூங்கும்போதும் உங்கள் பணம் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இல்லையெனில் நீங்கள் இறக்கும் வரை உழைத்துக்கொண்டே தான் இருக்க வேண்டும்.

#5 உண்மை

கடனில் இருக்கும் வீடு சொத்து இல்லை. இதை முதலில் நீங்கள் புரிந்துகொண்டாலே அவரசப்பட்டுப் பெரிய கடன் நெருக்கடியில் இருந்து நீங்கள் தப்பிக்கலாம்.

அல்லது நீங்கள் வாங்கிக் கட்டிய வீட்டின் மூலம் கடனுக்கான ஈஎம்ஐ-யில் 50 சதவீத தொகையாவது வருமானமாகக் கிடைக்க வேண்டும். இல்லையெனில் நீங்கள் வாங்கிய வீடு சொத்துக்கிடையாது.

 

#6 உண்மை

பணக்காரர்கள் எப்போது புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டு வளர்வார்கள், ஆனால் சாமானியர்கள் தங்களுக்கு அது ஏற்கனவே தெரியும் என்று நினைத்துக்கொள்வார்கள்.

#7 உண்மை

திட்டமிடல், பொறுமை, நிலைபேறு ஆகியவையே வெற்றிக்கு அடிப்படை ஆகும்.

#8 உண்மை

உங்களுக்குத் தேவையற்றது அல்லது அதிகளவில் பயன்படுத்தாத பொருட்களை நீங்கள் தொடர்ந்து வாங்கினால், கூடிய விரைவில் உங்களுக்குத் தேவையான ஒன்றை இழக்க நேரிடும்.

#9 உண்மை

பங்குச்சந்தை சூதாட்டமில்லை, இதில் இறக்குவது சற்றுப் பயமாக இருந்தாலும் சிறு தொகையை முதலீடு செய்து துவங்குகள் கண்டிப்பாக லாபத்தை எடுக்கலாம்.

ஆனால் பலர் ஆர்வகோளாறு காரணமாகக் கடன் வாங்கி முதலீடு செய்வது, முழுமையாகத் தெரிந்துக்கொள்ளாமல் அதிகளவில் முதலீடு செய்வது எனப் பணத்தைப் பங்குச்சந்தையில் இழக்கின்றனர்.

 

#10 உண்மை

நீங்கள் பெறும் வருமானத்தில் கண்டிப்பாக ஒரு பகுதியை சேமிப்புச் செய்ய வேண்டும்.

இப்படிச் சேமிக்கும் பணத்தில் 40 சதவீதத்தை முதலீடாகவும், 40 சதவீதம் வங்கி சேமிப்பிலும், 20 சதவீதத்தை அவசர கால நிதியாகவும் பரித்து வகைப்படுத்த வேண்டும். இந்தப் பழக்கும் சில வருடங்களில் உங்கள் சேமிப்பில் பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தும்.

 

#11 உண்மை

எப்போதும் அதிக ஆபத்து இருக்கும் இடத்திலேயே அதிக லாபமும் இருக்கும். ஆனால் ஆழம் தெரியாமல் காலை விடா கூடாது என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

உதாரணமாக நேரடி பங்கு முதலீட்டில் அதிக ஆபத்து இருக்கிறது, ஆனால் மியூச்சுவல் பண்டில் அப்படியில்லை. லாப அடைப்படையில் பார்த்தால் நேரடி முதலீட்டிலேயே அதிகம் லாபம் உள்ளது.

 

#12 உண்மை

சந்தையில் தற்போது பல புதிய முதலீட்டுத் திட்டங்கள் வருகிறது. ஆகவே சரியான புரிதல்களுடன் நீங்கள் புதிய முதலீட்டில் முதலீடு செய்தால் கண்டிப்பாகத் தற்போது இருக்கும் சந்தை அளவுகளை விடவும் அதிகமான லாபத்தைப் பெற்றலாம்.

உதாரணமாக: பிட்காயின் முதலீடு, எஸ்பிஐ திட்டங்கள் போன்றவை சமீபத்தில் அதிகளவிலான லாபத்தை அளித்த முதலீடுகளாகும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Something that needs to be said?

Something that needs to be said?
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns