வங்கி பிக்சட் டெபாசிட் Vs ஆர்பிட்ரேஜ் மியூச்சுவல் ஃபண்டு குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டியவை?

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

வங்கி நிரந்தர வைப்பு நிதி என்பது மிகவும் பிரபலமான சேமிப்புத் திட்டங்களில் ஒன்றாக இருக்கின்றது. நடுத்தர மக்களின் சேமிக்கும் பழக்கம், இந்தத் திட்டத்தை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றது. ஆனால் இந்த வங்கி பிக்சட் டெபாசிட்களின் வட்டி விகிதம் தொடர்ச்சியாகச் சரிந்து வருகின்றது.

உதாரணமாக, ஒரு வருட நிரந்தர வங்கி வைப்பு நிதியின் மீதான வட்டி விகிதம் தற்போது 6.25 சதவீதமாக உள்ளது. அதைவிட ஒரு முக்கியமான விஷயம், இந்த வருமானத்திற்கு வரி விதிக்கப்படுகின்றது. எனவே நாம் அதிக வருவாய் தரக்கூடிய வேறு வகையான முதலீடு திட்டங்களை நாட வேண்டிய நிலையில் உள்ளோம். அத்தையை ஒன்றுதான் ஆர்பிட்ரேஜ் மியூச்சுவல் ஃபண்டுகள் ஆகும்.

ஒரு ஆர்பிட்ரேஜ் பரஸ்பர நிதி என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பங்குச் சந்தைகள் அல்லது சந்தைப் பிரிவுகளுக்கு இடையில் நிலவும் விலை வேறுபாடுகளைப் (அதே சொத்தின்) பயன்படுத்தி வருவாய் ஈட்ட முயற்சிக்கும் ஒரு பங்கு சார்ந்த பரஸ்பர நிதி ஆகும். எனினும் ஆர்பிட்ரேஜ் பரஸ்பர நிதி ஆபத்து இல்லாதவை. இதில் கவனிக்கத்தக்க முக்கிய அம்சம் என்னெவெனில் இதில் வருவாய்க்கு உத்திரவாதம் கிடையாது.

ஆர்பிட்ரேஜ் மியூச்சுவல் ஃபண்டு எப்படி இயங்குகிறது?

ஆர்பிட்ரேஜ் மியூச்சுவல் ஃபண்டு பொதுவாகப் பங்குச் சந்தையில் டெரிவேடிவ் (எதிர்கால) மற்றும் ரொக்கச் சந்தைக்கு இடையே நிலவும் வேறுபாடுகளைப் பயன்படுத்துகின்றது. அதிக மூலதனங்களை உடைய மற்றும் அதிக அளவு வரி செலுத்தும் முதலீட்டாளர்களுக்கு இந்த நிதி ஒரு சிறந்த வாய்ப்பாகத் திகழ்கின்றது, எனத் திரு மனோஜ் நாக்பால், தலைமை நிர்வாக அதிகாரி அவுட்லுக் ஆசியா தெரிவிக்கின்றார்.

வேறுபாடுகள்

ஆர்பிட்ரேஜ் மியூச்சுவல் ஃபண்டு பங்குச் சந்தையில் உள்ள எதிர்காலச் சந்தை மற்றும் ரொக்கச் பணச் சந்தைக்கு இடையே நிலவும் வேறுபாடுகள், மற்றும் பல்வேறு பங்குச் சந்தைகளுக்கு இடையே உதாரணமாகப் பி.எஸ். இ மற்றும் என்எஸ்இ போன்ற சந்தைகளுக்கு இடையே நிலவும் வேறுபாடுகளைப் பயன்படுத்துகின்றது. உதாரணமாக, ரொக்கச் சந்தையில் ஒரு பங்கின் விலை ரூ. 100, மற்றும் எதிர்காலச் சந்தையில் ரூ. 102, எனில் நிதி மேலாளர் ரொக்க சந்தையில் அந்தப் பங்கை வாங்கி அதே நேரத்தில் டெரிவேட்டிவ் சந்தையில் விற்று ஒரு பங்கிற்கு ரூ.2 லாபம் ஈட்டுவார்.

எங்கு லாபம் கிடைக்கும்?

மியூச்சுவல் ஃபண்டுகள் நிலையில்லா சந்தையில் நன்றாக லாபம் ஈட்டும். அத்தகைய சந்தர்ப்பங்களில் நிதி மேலாளர்கள் ரொக்க சந்தை மற்றும் எதிர்காலச் சந்தைகளுக்கு இடையே உள்ள ஒரு பங்குகளின் விலை வேறுபாடுகளில் முதலீடு செய்து லாபம் ஈட்ட முடியும். இந்தப் பரஸ்பர நிதி மேலாளர்கள் பங்குகளில் வரும் ஆபத்துக்களை, டெரிவேடிவ்களைப் பயன்படுத்துவதன் மூலம் குறைக்கிறார்கள்.

ஆர்பிட்ரேஜ் வாய்ப்பு

ஆர்பிட்ரேஜ் பரஸ்பர நிதிகளுக்கு ஆர்பிட்ரேஜ் வாய்ப்பு இல்லாத பொழுது, குறுகிய காலக் கடன் மற்றும் லிக்விட் சந்தைகளைப் பயன்படுத்திக் கொள்கின்றன.

இந்த நிதியின் வருவாய் மீதான வரி?

இத்தகைய நிதிகள், வரி விதிப்பிற்காகப் பங்கு நிதிகளாக வகைப்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாக நீண்டகால ஆதாயங்கள் (ஒரு வருடத்திற்கும் மேலாக வைத்திருக்கும் காலம்) மீது பூஜ்ஜிய வரிகளின் நன்மைகளை இது பெறுகின்றது. முதலீட்டுக் காலம் ஒரு வருடத்திற்கும் குறைவாக இருந்தால், மூலதன ஆதாய வரி (குறுகிய காலங்கள்) 15 சதவீதமாக விதிக்கப்படுகின்றது.

பிக்சட் டெபாசிட் வட்டி

வங்கி பிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்கள் குறையத் தொடங்கி உள்ளதால் முதலீட்டாளர்களால் ஆர்பிட்ரேஜ் பரஸ்பர நிதி பெரிதும் விரும்பப்படுகின்றது. உண்மையில் ஆர்பிட்ரேஜ் பரஸ்பர நிதிகளுக்கு நிலையான வருமானம் இருக்காது மற்றும் இதன் வருவாய் மாறுபடும்.இதனால், இந்தத் தாக்கங்களைப் புரிந்து கொள்ளும் ஆர்வலராக உள்ள முதலீட்டாளர்களுக்கு மட்டுமே இது உகந்தது எனத் திரு நாக்பால் தெரிவிக்கின்றார்.

யாரெல்லாம் ஆர்பிட்ரேஜ் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்?

அதிக வருவாய் உள்ள முதலீட்டாளர்களுக்கு அதிக வரி விதிக்கப்படுகின்றது. அத்தகைய முதலீட்டாளர்கள் வங்கி நிரந்தர வைப்பு நிதியில் முதலீடு செய்யும் பொழுது, அந்த வட்டி வருவாயும் அவர்களின் வருமானத்துடன் இணைக்கப்பட்டு, அதிக வரி விதிக்கப்படும் எனவே அத்தகைய முதலீட்டாளர்களுக்கு வங்கி நிரந்தர வைப்பு நிதியினால் அதிக வருவாய் கிடைக்காது. அவர்களுக்கு ஆர்பிட்ரேஜ் பரஸ்பர நிதி ஒரு நல்ல வாய்ப்பு வழங்குகின்றது. எனத் திரு நாக்பால் தெரிவிக்கின்றர்.

வரி விலக்குகள்

ஆர்பிட்ரேஜ் பரஸ்பர நிதி பங்கு நிதிகளாக வகைப்படுத்தப்படுவதால், முதலீட்டாளர்களுக்கு வரி விலக்குகள் கிடைக்கின்றன.

வருவாய்

ஆர்பிட்ரேஜ் பரஸ்பர நிதி ஒரு வருட, மூன்று வருட, மற்றும் ஐந்து வருட கால இடைவெளியில், சுமார் 5.9%, 6.9% மற்றும் 7.3% வருவாய் அளித்ததாகப் பரள்பர நிதி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது.

பாதியில் வெளியேறினால் என்ன ஆகும்?

ஆர்பிட்ரேஜ் பரஸ்பர நிதி மீதான முதலீடுகள் 30 நாட்களுக்குள் விலக்கிக் கொள்ளப்பட்டால், 0.25 சதவீத வெளியேறும் கட்டணம் விதிக்கப்படுகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Bank Fixed Deposits Vs Arbitrage Mutual Funds: 10 Things You Should Know

Bank Fixed Deposits Vs Arbitrage Mutual Funds: 10 Things You Should Know
Story first published: Thursday, December 7, 2017, 16:46 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns