ஒரு போன் காலில் மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைப்பது எப்படி...?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2018 புதுவருடத்தின் தொடக்கத்தில் தொலைத்தொடர்பு துறை, மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைக்கும் எளிய வழியை அறிமுகப்படுத்தியுள்ளது. 31 மார்ச் 2018-குள் அனைத்து தொலைத்தொடர்பு சந்தாதார்களும் ஆதாரை மொபைல் எண்ணோடு இணைப்பது கட்டாயம் என்பதால், மத்திய அரசு ஊடாட்ட குரல்வழி செயல்முறைக்கான (IVR - Interactive Voice Response) உதவி எண்ணை அறிவித்துள்ளது.

ஐவிஆர் முறையில் மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைக்கும் படிப்படியான செயல்முறையை இங்கே காணலாம்.

இலவச அழைப்பு எண்
 

இலவச அழைப்பு எண்

முதலாவதாக, ஐ.வி.ஆர் முறைக்காக அறிமுகப்படுத்தியுள்ள இலவச எண்ணை தொடர்புகொள்ள வேண்டும். எ.கா. 14546

இந்தியர்களா, வெளிநாட்டவரா?

இந்தியர்களா, வெளிநாட்டவரா?

பின்பு, இந்தியாவில் வசிப்பவர் அல்லது இந்தியாவில் வசிக்காத இந்தியர் என்பதில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும்.

இந்தியர்கள்

இந்தியர்கள்

நீங்கள் இந்தியாவில் வசிப்பவர் என்றால், 1 ஐ தேர்வு செய்து மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைக்கலாம்.

ஆதார் எண்

ஆதார் எண்

நான்காவது படியில், உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளீடு செய்து, பின் 1 ஐ அழுத்தி உறுதி செய்ய வேண்டும்.

ஒரு முறை கடவுச் சொல்
 

ஒரு முறை கடவுச் சொல்

உடனே, 30 நிமிடத்தில் காலாவதியாகும் ஒரு முறை கடவுச் சொல் (OTP) எண் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்.

மொபைல் எண் உறுதி

மொபைல் எண் உறுதி

அடுத்து, மொபைல் எண்ணை உறுதிப்படுத்தியவுடன் , பயனர்கள் தங்கள் மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.

 சேவை மையம்

சேவை மையம்

பின்னர், சேவை மைய அதிகாரி ஆதார் தகவல்களஞ்சியத்தில் இருந்து உங்கள் பெயர், புகைப்படம், பிறந்த தேதி போன்ற விவரங்களைப் பெறுவார்.

மொபைல் எண்ணை மீண்டும் உறுதி செய்தல்

மொபைல் எண்ணை மீண்டும் உறுதி செய்தல்

ஐவிஆர் மூலம் கடைசி 4 இலக்கங்களைக் குறிப்பிட்டு, உங்கள் மொபைல் எண்ணை மீண்டும் உறுதிப்படுத்தவேண்டும். இந்நிலையில் தான், ஒரு முறை கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும். மொபைல் எண் - ஆதார் எண் இணைப்பை மீண்டும் உறுதி செய்ய நீங்கள் எண் 1 ஐ அழுத்த வேண்டும்.

ஜியோ

ஜியோ

மீண்டும் உறுதிசெய்யும் முறையானது, பெருநிறுவன திட்டத்தின் படி அனைத்து சந்தாதார்களுக்கும் நீக்கப்பட்டது என்பதை நினைவிற்கொள்க. மேலும், ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இந்த ஐவிஆர் முறை தேவையற்றது. ஏனெனில், ஆதார் எண்ணை பெற்றுக்கொண்ட பிறகு தான், சிம் கார்டு தரப்படும்.

ஏர்டெல் மற்றும் வோடாபோன்

ஏர்டெல் மற்றும் வோடாபோன்

ஏர்டெல் மற்றும் வோடாபோன் வாடிக்கையாளர்களுக்கு மேலும் ஒரு சலுகையாக, எந்த மாநில ஆதார் எண்ணையும் இந்தியா முழுவதும் வாங்கும் மொபைல் எண்ணோடு இணைக்க முடியும். ஆனால், ஐடியா வாடிக்கையாளர் அந்தக் குறிப்பிட்ட தொலைதொடர்வட்டத்திற்குள் மட்டுமே இணைக்க முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mobile Number, Aadhaar Linking Made Easy With IVR Number 14546

Mobile Number, Aadhaar Linking Made Easy With IVR Number 14546
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X