உங்கள் பிபிஎப் கணக்கை டிரான்ஸ்ஃபர் செய்வது எப்படி?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொது வருங்கால வைப்பு நிதி திட்டமானது இந்தியர்களிடையே மிகவும் பிரபலமாகி வரும் சேமிப்புத் திட்டமாக உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் பாதுகாப்பான முதலீடு மற்றும் வரி விலக்குகள் உண்டு என்பது ஆகும்.

சில நேரங்களில் வங்கிகளில் பிபிஎப் கணக்கை வைத்துள்ளவர்களும் வேறு இடங்களுக்கு இடம் பெயரும் போது அல்லது வங்கியின் சேவையில் திருப்தி அடையாத போது டிரான்ஸ்பர் செய்ய விரும்புவார்கள்.

வங்கி மற்றும் தபால் நிலையம் என இரண்டில் வைத்துள்ள பிபிஎப் கணக்குகளையும் வங்கியிலிருந்து தபால் நிலையம், தபால் நிலையம் டூ வங்கி, அல்லது ஒரு கிளையில் இருந்து வேறு கிளைகளுக்கு டிரான்ஸ்ஃபர் செய்ய அனுமதிகள் அளிக்கப்படுகிறது.

பிபிஎப் கணக்கை டிரான்ஸ்பர் செய்வதற்கான முக்கியக் காரணங்கள்
 

பிபிஎப் கணக்கை டிரான்ஸ்பர் செய்வதற்கான முக்கியக் காரணங்கள்

பொது வருங்கால வைப்பு நிதி எனப்படும் பிபிஎப் கணக்கில் வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்கள் மூலம் முதலீடு செய்ய முடியும். வங்கிகளில் பிபிஎப் கணக்கை துவங்கினால் ஆன்லைன் மூலம் பணத்தினை டெபாசிட் அனுமதி அளிக்கின்றன. ஆனால் தபால் நிலையத்தில் அது போன்ற ஆன்லைன் மூலம் கணக்கில் பணத்தினை டெபாசிட் செய்ய முடியாது. ஒவ்வொரு முறையும் தபால் நிலையம் சென்று பணத்தினைக் கணக்கில் செலுத்த வேண்டும். இதுவே பலரும் பிபிஎப் கணக்கை பலரும் தபால் நிலையத்தில் இருந்து வங்கிக்கு மாற்ற நினைப்பதற்கான காரணம் ஆகும். எனவே எப்படி டிரான்ஸ்ஃபர் செய்வது என்று இங்குப் பார்க்கலாம்.

 வங்கி கிளைகள் அல்லது தபால் நிலைய கிளைகளுக்கு இடையே டிரான்ஸ்பர் செய்வது எப்படி?

வங்கி கிளைகள் அல்லது தபால் நிலைய கிளைகளுக்கு இடையே டிரான்ஸ்பர் செய்வது எப்படி?

உங்கள் பிபிஎப் கணக்கை ஒரு வங்கியின் கிளைகளுக்கு இடையில் அல்லது தபால் அலுவலகக் கிளைகளுக்கு இடையில் மாற்ற விரும்பினால் நீங்கள் பிபிஎப் கணக்கை துவங்கிய அருகில் உள்ள வங்கி கிளைக்குச் சென்று டிரான்ஸ்பர் செய்வதற்கான விண்ணப்பத்தினைப் பூரித்தி செய்து அளிக்க வேண்டும். இதற்கான பணிகள் முடிவடையக் குறைந்தது 1 முதல் 7 நாட்கள் வரை கால அவகாசம் தேவைப்படும். அது நீங்கள் பிபிஎப் கணக்கு வைத்துள்ள வங்கி அல்லது தபால் நிலையத்தினைப் பொருத்தத்து.

பிபிஎப் கணக்கை தபால் நிலையத்தில் இருந்து வங்கிகளுக்கும், வங்கிகளில் இருந்து தபால் நிலையங்களுக்கும் டிரான்ஸ்ஃபர் செய்வது எப்படி என்று இங்குப் பார்ப்போம்.

படிகள்
 

படிகள்

படி 1: உங்கள் பிபிஎப் கணக்கு உள்ள வங்கி கிளை அல்லது தபால் அலுவலகத்திற்குப் பிபிஎப் பாஸ்புக்குடன் செல்ல வேண்டும்.

படி2: பின்னர்ப் பிபிஎப் கணக்கை டிரான்ஸ்ஃபர் செய்வதற்கான விண்ணப்பத்தினைப் பூர்த்திச் செய்து எந்த வங்கி மற்றும் கிளை அல்லது தபால் அலுவலகக் கிளைக்கு மாற்ற இருக்கிறீகள் என்ற விவரங்களை முகவரியுடன் அளிக்க வேண்டும்.

படி 3: பிபிஎப் கணக்கு டிரான்ஸ்ஃபர் விண்ணப்பத்தினைப் பூரித்தி செய்து அளித்த பிறகு வங்கி அல்லது தபால் அலுவலகமானது அதற்கான பணிகளைத் துவங்கி ரசீது ஒன்றையும் அளிக்கும். பின்னம் புதிய கிளைக்கு அல்லது வங்கிக்கும் ஆவணங்கள் அனுப்பப்படும்.

அ) கணக்கின் சான்றிதழ் நகல்

ஆ) அசல் பிபிஎப் கணக்கை திறந்ததற்கான விண்ணப்பம்

இ) நாமினேஷன் படிவம்

ஈ) உங்கள் கையெழுத்து மாதிரி

உ) நிலுவையில் உள்ள தொகைக்கான செக் அல்லது டிமாட்ண்ட் டிராப்ட்

ஊ) பயன்பாட்டில் உள்ள பிபிஎப் பாஸ்புக்

படி 4: புதிய வங்கி அல்லது தபால் அலுவலகம் உங்கள் ஆவணங்களை முந்தைய கிளைகளில் இருந்து பெற்ற உடன் உங்களுக்குத் தகவல் அளிக்கும்.

படி 5: பின்னர்ப் பிபிஎப் கணக்கை தொடர உள்ள புதிய கிளையில் மீண்டும் பிபிஎப் கணக்கை துவங்குவதற்கான விண்ணப்பம், நாமினேஷன் படிவம் மற்றும் அசல் பாஸ்புக்கினை சமர்ப்பிக்க வேண்டும்.

படி 6: உங்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், பான் கார்டு, ஆதார் போன்ற முகவரி சான்று, வாக்காளர் அடையாள அட்டை போன்ற KYC ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு ஒரு மாதம் வரை நேரம் எடுத்துக்கொள்ளும்.

நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை

நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை

பிபிஎப் கணக்கை டிரான்ஸ்ஃபர் செய்யும் போதும் நீங்கள் மீண்டும் கணக்கை துவங்குவதற்கான படிவம் மற்றும் ஆவணங்களைப் புதிதாகச் சமர்ப்பித்தாலும் இடையில் வெளியேறுவது மற்றும் கடன் பெறுவது போன்ற நன்மைகளில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

டிரான்ஸ்ஃபர் செய்ததால் புதிய பாஸ்புக் அளிக்கப்படும். பழைய பாஸ்புக்கின் நகலைப் பாதுகாப்பாக எடுத்து வைத்துக்கொள்வது நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to transfer your PPF account

How to transfer your PPF account
Story first published: Thursday, May 31, 2018, 15:23 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X