பங்கு சந்தை முதலீட்டுக்கு சிம்பிள் போர்ட்ஃபோலியோ உருவாக்குவது எப்படி..?

By staff
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நம்மில் பலருக்கு பங்குசார் முதலீடுகள் செய்ய விருப்பம் இருந்தாலும் எங்கே தொடங்குவது, என்ன செய்வது, எப்படி, எவ்வளவுன்னு எதுவுமே புரியமாட்டேங்குது.

 

6 ஆண்டுகளில் 72,000 பணியிடங்களை நீக்கிய இந்தியன் ரயில்வே..! 6 ஆண்டுகளில் 72,000 பணியிடங்களை நீக்கிய இந்தியன் ரயில்வே..!

ஒண்ணுக்கும் உதவாத எண்டோமெண்ட் பாலிசிகளில் பணத்தைப் போட்டுட்டு முதலீடு செய்ததா நினைச்சிக்கறாங்க அல்லது ஒரேடியா அந்தப் பக்கம் போய் மாசத்துக்கு 7% வட்டி தர்றேன்னு சொல்ற டுபாக்கூர் ட்ரேடிங் ஆட்களிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்து போறாங்க.

 பங்குசார் முதலீடு

பங்குசார் முதலீடு

பங்குசார் முதலீடுன்னு வரும் போது நேரடியா பங்குகளில் முதலீடு செய்யலாம் அல்லது மியூச்சுவல் ஃபண்ட்கள் வழியா முதலீடு செய்யலாம். நேரடிப் பங்குன்னா நிறையப் படிக்கணும், தெரிஞ்சிக்கணும், தொடர்ந்து கண்காணிக்கணும் இதுக்கெல்லாம் மேல மாதா மாதம் சிறுதொகை முதலீடு செய்வது கடினம்.

 மியூச்சுவல் ஃபண்ட்-ல் இருக்கும் நன்மை

மியூச்சுவல் ஃபண்ட்-ல் இருக்கும் நன்மை

மியூச்சுவல் ஃபண்ட் வழி முதலீட்டுக்கும் அடிப்படைகள் தெரிஞ்சிக்கணும் என்றாலும் நேரடிப்பங்கு அளவுக்கு அறிவு தேவையில்லை. நிறையப் பங்குகளில் பிரித்து முதலீடு செய்யப்படுவதால் இவ்வழியில் ரிஸ்க் கொஞ்சம் கம்மி என்று சொல்லலாம்.

 ஒரு எளிய ரெசிப்பி
 

ஒரு எளிய ரெசிப்பி

சரி எதிர்கால வாழ்க்கைக்குச் சேமிக்கவும், முதலீடு செய்யவும் முடிவு பண்ணிட்டீங்க, எங்கேருந்து ஆரம்பிக்கறது? என்ன செய்யறது? ரொம்ப யோசிக்கத் தேவையில்லாத ஒரு ரெசிப்பி இது

 டெர்ம் பாலிசி

டெர்ம் பாலிசி

மொதல்ல உங்க ஆண்டு வருமானத்தின் 20 மடங்கு டெர்ம் பாலிசி எடுங்க. பாதுகாப்பை உறுதி செய்தப்புறம் சேமிப்பைப் பாக்கலாம். இந்தியாவில் இருக்கும் எந்த நிறுவனத்தில் வேணா எடுங்க அது உங்க இஷ்டம்.

 மெடிக்கல் இன்சூரன்ஸ்

மெடிக்கல் இன்சூரன்ஸ்

அடுத்து மெடிக்கல் இன்சூரன்ஸ் முழுக் குடும்பத்துக்கும் எடுங்க. இதையும் உங்களுக்குப் பிடித்த நிறுவனத்தில் நீங்க தேவை என்று நினைக்கும் தொகைக்கு எடுங்க.

 சேமிப்பு முக்கியம் அமைச்சரே

சேமிப்பு முக்கியம் அமைச்சரே

ரெண்டு இன்சூரன்ஸும் எடுத்திட்டீங்களா? அடுத்து எந்த மியூச்சுவல் பண்ட் என்றுதானே கேக்கறீங்க? காப்பீட்டுக்கும் முதலீட்டுக்கும் இடையில் சேமிப்புன்னு ஒரு ஸ்டெப் இருக்கு. உங்க குடும்பத்தின் மாதாந்திர செலவு எவ்வளவுன்னு பாருங்க.

 6 மாசம்

6 மாசம்

குறைந்தபட்சம் அதன் 6 மடங்கு பணம் கையிருப்பு வரும் வரை எங்கும் முதலீடு செய்யாமல் சேமிங்க. நாளைக்கே வேலை போனாலும் அடுத்த 6 மாசம் செலவுக்குப் பிரச்சனையே இல்லை என்று வரும் வரை பாலை அடுப்பில் ஏத்திட்டுக் காத்திருப்பது போல இருங்க.

 வருமான வரி

வருமான வரி

இப்ப முதலீட்டுக்கு வரலாம். நாலு நல்ல ஃபண்ட் சொல்லுங்கன்னு கேக்கறீங்களா? அதுக்கு முன்ன இன்னொரு விசயம் செய்யணும். நீங்க வருமானவரி செலுத்துபவராக இருந்தால் பிரிவு 80 c கீழ் கிடைக்கும் 1,50,000 ரூபாய் விலக்கை முழுமையா உபயோகிங்க.

 முக்கியத் திட்டங்களின் நன்மை

முக்கியத் திட்டங்களின் நன்மை

ஆயுள் காப்பீட்டு ப்ரீமியம், NPS, PF இன்ன பிற போக 1.5 லட்சத்தை எட்ட எவ்வளவு தொகை இருக்கோ அதை PPF, Sukanya Samriddhi போன்ற திட்டங்களில் முதலீடு செய்யுங்க. இவற்றில் இரண்டு சாதகங்கள் உள்ளன - வருமானவரி விலக்குக் கிடைக்கிறது, மேலும் போர்ட்ஃபோலியோவில் பங்குசார் முதலீடு தவிர ஸ்திரத்தன்மைக்கு வேண்டிய Bond / Fixed Income portion ஆக இவை செயல்படும்.

 மியூச்சுவல் பண்ட்

மியூச்சுவல் பண்ட்

இப்ப கடேசியா மியூச்சுவல் பண்ட் முதலீட்டுக்கு வரலாம். முதலீடு மாசத்துக்கு ஐந்தாயிரமோ ஐம்பதாயிரமோ ஐந்து லட்சமோ எவ்வளவாக இருந்தாலும் 10-20 ஃபண்ட்கள் தேவையில்லை. முதலீட்டில் மிக முக்கியப் பாடம் KISS - Keep it Simple Stupid என்பதே.

 4 திட்டங்கள் போதும்

4 திட்டங்கள் போதும்

நாலே நாலு ஃபண்ட்கள் பெரும்பாலானோருக்கு போதும். Fund Manager-கள் வழிநடத்தும் Actively Managed Fund களின் கட்டணம் அதிகம். Manager Bias வர வாய்ப்புகள் அதிகம். Index Fund களின் கட்டணம் மிகக் குறைவு, அவை பங்குச் சந்தை போகும் போக்கில் போகும். பங்குச்சந்தையின் வரலாற்றில் வீழ்ந்தாலும் சந்தை மீண்டும் மேலெழுந்தே வந்திருக்கிறது.

 நிஃப்டி 50 இன்டெக்ஸ் பண்ட்

நிஃப்டி 50 இன்டெக்ஸ் பண்ட்

25% - இந்தியாவின் ஆகப்பெரிய 50 நிறுவனங்களின் பங்குகளைக் கொண்ட இண்டெக்ஸ் ஃபண்ட் - யூடிஐ அல்லது ஹெச்டிஎப்சி அல்லது எஸ்பிஐ அல்லது ஐசிஐசிஐ அல்லது மோதிலால் ஓஸ்வால் ஏதேனும் ஒரு நிறுவன ஃபண்டில் முதலீடு செய்யலாம்

 நிஃப்டி நெக்ஸ் 50 இன்டெக்ஸ் பண்ட்

நிஃப்டி நெக்ஸ் 50 இன்டெக்ஸ் பண்ட்

25% - இந்தியாவின் ஆகப்பெரிய நிறுவனங்களின் பட்டியலில் 51 முதல் 100ம் இடத்தில் இருக்கும் நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யும் ஃபண்ட். இவை முதல் 50 இடங்களுக்குள் வர முயலும் நிறுவனங்கள்.யூடிஐ அல்லது எஸ்பிஐ அல்லது ஐசிஐசிஐ ஏதேனும் ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்யலாம்

 நிஃப்டி 150 மிட்கேப் இன்டெக்ஸ் பண்ட்

நிஃப்டி 150 மிட்கேப் இன்டெக்ஸ் பண்ட்

25%- மேலே சொன்ன இரண்டும் Large Cap வகையைச் சேர்ந்தவை. இது Midcap வகை. தற்போது கொஞ்சம் சிறிதாக இருந்தாலும் வரும் ஆண்டுகளில் வளர்ச்சி வாய்ப்பு அதிகம் இருக்கும் 150 நிறுவனப் பங்குகளின் தொகுப்பு. இதற்கு என் தெரிவு மோதிலால் ஓஸ்வால் நிறுவனம்

 S & P 500 இன்டெக்ஸ் பண்ட்

S & P 500 இன்டெக்ஸ் பண்ட்

25% - முதல் மூன்றும் இந்தியப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்பவை. Diversification க்காக அமெரிக்காவின் ஆகப்பெரிய 500 நிறுவனங்களில் முதலீடு செய்யும் இந்த ஃபண்டிலும் நம் பணம் இருப்பது நல்லது. இந்த ஃபண்ட் புது வாடிக்கையாளர்கள் ஏற்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. ஒரு சில மாதங்களில் மீண்டும் புது வாடிக்கையாளர்களை ஏற்கும் போது முதலீட்டைத் தொடங்கலாம்.

 இது ஆலோசனை அல்ல

இது ஆலோசனை அல்ல

மேலே சொன்னவை என் தெரிவுகள் மட்டுமே ஆலோசனை அல்ல. நன்கு கற்றறிந்து உங்க சுய முடிவின் படி மட்டுமே பங்குச் சந்தை முதலீடுகள் செய்யுங்க எனப் பேஸ்புக்கில் ஸ்ரீராம் என்பவர் தெரிவித்துள்ளார். மேலும் அம்முடிவின் சாதகபாதகங்கள் உங்களை மட்டுமே சேரும்.

 முதலீடு செய்யும் முறை

முதலீடு செய்யும் முறை

நேரடியா நிறுவனங்களின் இணையத் தளத்தில் கணக்கு ஆரம்பித்து முதலீடு செய்யுங்க, தேவைன்னா ஆலோசகருக்குக் கட்டணம் கொடுத்து அவர் துணையுடன் முதலீடு செய்யுங்க. Direct & Growth Mode இல் முதலீடு செய்யுங்க.

 SIP முறை

SIP முறை

மாதா மாதம் குறிப்பிட்ட தொகை SIP முறையில் முதலீடு செய்யுங்க. சந்தை வீழ்ந்தால் பயப்படாமல் அதை வாய்ப்பா கருதி தொடர்ந்து முதலீடு செய்யுங்க. அடுத்த 3 ஆண்டுகளுக்குள் தேவைப்படும் தொகையைப் பங்குசார் முதலீடுகளில் வைக்காதீங்க.

 எதிர்ப்பார்ப்பு

எதிர்ப்பார்ப்பு

வளர்ச்சி எதிர்ப்பார்ப்பை reasonable ஆக வைத்துக்கொள்ளுங்க. குறுகிய காலத்தில் 20-30% வளர்ச்சி இருக்கலாம். நீண்ட கால அடிப்படையில் 10%க்கு மேல் வளர்ச்சி இருந்தா சந்தோசப்படுங்க என்றும் பங்குச்சந்தையில் இருக்கும் சாதகபாதகங்களை விளக்கியுள்ளார்.

Disclaimer

Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to create a simple portfolio for Stock investment for beginners

How to create a simple portfolio for Stock investment for beginners பங்கு சந்தை முதலீட்டுக்கு சிம்பிள் போர்ட்ஃபோலியோ உருவாக்குவது எப்படி..?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X