அடுத்த 2-3 வாரங்களில் எந்தெந்த பங்குகள் நல்ல லாபம் தரும்.. நிபுணர்கள் வெளியிட்ட லிஸ்ட்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: பங்கு சந்தை நிபுணர்களின் கணிப்பின் படி அடுத்த 2-3 வாரங்களில் திடமான வருமானத்தை வழங்கக்கூடிய தேர்ந்தெடுக்கப்பட்ட சில பங்குகளின் தொகுப்புகளை இப்போது பார்க்கலாம்

பங்குச்சந்தை ஆலோசனை தொழில்நுட்ப ஆய்வாளரும் ஜெம்ஸ்டோன் ஈக்விட்டி ரிசர்ச் நிறுவனருமான மிலன் வைஷ்ணவ் கூறும் போது. அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வருவதால், பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிஃப்டி ஏற்கனவே 12,000 புள்ளிகளில் இருந்து குறைந்துவிட்டது தற்போதைய நிலையில் "12,000-12,025 என்ற ரேஞ்சில் இருந்தால் மட்டும் லாபத்தை ஈட்ட முடியும். இல்லாவிட்டால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்றார்.

எனினும் இந்த நிச்சயமற்ற சந்தையில், அடுத்த 2-3 வாரங்களில் திடமான வருமானத்தை வழங்கக்கூடிய தேர்ந்தெடுக்கப்பட்ட சில பங்குகளின் தொகுப்புகளை Chartviewindia.in நிறுவனத்தின் பங்குச்சந்தை ஆலோசனை நிபுணர் மஜார் முகமது மற்றும் ஜெம்ஸ்டோன் ஈக்விட்டி ரிசர்ச் நிறுவனருமான மிலன் வைஷ்ணவ் ஆகியோர் வெளியிட்டுள்ளார்கள். அவற்றை இப்போது பார்ப்போம்.

இரு மடங்கு லாபத்தில் எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ்.. எகிறிய பிரீமிய வருவாய் தான் காரணம்..!இரு மடங்கு லாபத்தில் எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ்.. எகிறிய பிரீமிய வருவாய் தான் காரணம்..!

ஐ.டி.சி | ஸ்டாப் லாஸ் ரூ 165

ஐ.டி.சி | ஸ்டாப் லாஸ் ரூ 165

ஐ.டி.சி நிறுவனத்தின் சமீபத்திய குறைந்த பட்ச மதிப்பு ரூ .163 ஆக இருந்தது. , ஐ.டி.சி பங்குசந்தையில் ரூ .134 முதல் ரூ .207 வரை சென்றது. சுமார் 163 ரூபாய். அந்த சூழ்நிலையில், ரூ. 163 க்கு மேல் மெல்ல நகர்ந்து 200யை தொட்டு இறங்க வாய்ப்பு உள்ளது. சராசரியை சுமார் 190 ரூபாயாக இருக்க வாய்ப்பு உள்ளது. ரிஸ்க் மற்றும் லாப விகிதங்கள் ஐடிசியை பொறுத்தவரை கவர்ச்சிகரமானதாக இருப்பதால், ஐ.டி.சி யின் பங்குகளை வாங்க பரிந்துரைக்கிறார். 190 ரூபாயில் வாங்கலாம். அதேநேரம் ஸ்டாப் லாஸ் (stop loss ) 165க்கு சரிந்தால் விற்றுவிடலாம்.

பவர் கிரிட் ஸ்டாப் லாஸ் ரூ 157

பவர் கிரிட் ஸ்டாப் லாஸ் ரூ 157

அண்மையில் 190 ரூபாயிலிருந்து 154 ரூபாய்க்கு அருகில் வந்திருக்கிறது பகர் கிரிட் பங்குகள். கடந்த மூன்று நாட்களின் விலை பின்னோக்கி சென்றுவிட்டதை இது உறுதிப்படுத்துகிறது. எனினும் பங்குகள் விரைவாக உயர்வதால் இப்போது வாங்குவது சிறந்த யுக்தியாகும். ரூ .182 வரை டார்கெட் வைத்து வாங்கலாம். பங்குகள் இறங்கினால் ஸ்டாப் லாஸ் (stop loss ) . ரூ .157க்கு கீழ் போவதற்குள் விற்றுவிட வேண்டும்.

என்சிசி ஸ்டாப் லாஸ் ரூ 33

என்சிசி ஸ்டாப் லாஸ் ரூ 33

என்சிசி பங்குகள் அதன் 200 நாளில் சராசரிக்கு மேலான ஒரு பிரேக்அவுட்டை பதிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதன் மீது பங்குச்சந்தை ஆய்வாளர் நேர்மறையான பார்வையை வைத்திருக்கிறார், ரூ .33 க்கு மேல் வரும் என்று நம்பும் அவர், ஒரு கட்டத்தில் , ரூ .50க்கு மேல் பெரிய வளர்ச்சியை இறுதியில் எதிர்பார்க்கலாம். எனவே, ஆய்வாளர் பங்கு வர்த்தகர்களை ரூ .47 க்கு டார்கெட் செய்து வாங்க பந்துரைக்கிறார். ஸ்டாப் லாஸ் (stop loss ) ரூ .33க்கு கீழ் வந்தால் விற்றுவிட வலியுறுத்துகிறார்.

மஹிந்திரா & மஹிந்திரா ஸ்டாப் லாஸ் ரூ. 585

மஹிந்திரா & மஹிந்திரா ஸ்டாப் லாஸ் ரூ. 585

மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் பங்கு சமீபத்தில் ரூ .590 க்கு வந்தது. இது ஒரளவு நிலையான வேகத்தில் வளர்ச்சியை கண்டது. மேலும் தலைகீழான மாற்றம் எதிர்வரும் நாட்களில் எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.680க்கு வரும்போது வாங்கலாம். அதே நேரத்தில் ஸ்டாப் லாஸ் (stop loss ) 585க்கு கீழ் போவதற்குள் விற்றுவிட வேண்டும்.

மதர்சன் சுமி ஸ்டாப் லாஸ் ரூ.100

மதர்சன் சுமி ஸ்டாப் லாஸ் ரூ.100

மதர்சன் சுமி நிறுவனத்தின் பங்கு ரூ .102 என்ற அடிப்படையில் நிலையாக உள்ளது. இதன் பங்குகளை வாங்குவது குறித்த விளக்க வரைபடங்கள் கவர்ச்சிகரமானதாகவும் இருப்பதால், ஆய்வாளர்கள், பங்கு வர்த்தகர்களை ரூ .130-135 என்று வரும் போது வாங்குமாறு அறிவுறுத்துகின்றனர், அதே நேரத்தில் ஸ்டாப் லாஸ் (stop loss ) ரூ .100 க்கு கீழ் செல்லகூடாது என்றார்கள்.

பஜாஜ் ஆட்டோ ஸ்டாப் லாஸ் ரூ. 2975

பஜாஜ் ஆட்டோ ஸ்டாப் லாஸ் ரூ. 2975

பஜாஜ் ஆட்டோ பங்குகள் விலைகள் அ சராசரிகளுக்கும் மேலாக வர்த்தகம் ஆகின்றன. இது கவுண்டரில் ஒட்டுமொத்த நேர்மறையைக் குறிக்கிறது.. எனவே வரும் வாரங்களில் .3,270 இலக்குக்கு வாங்கலாம் என நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். அதேநேரம் ஸ்டாப் லாஸ் . ரூ .2,975க்கு கீழ் போகக்கூடாது என்றும் பரிந்துரைக்கிறார்கள். மேற்கண்டவை அனைத்தும் பங்குசந்தை நிபுணர்களின் பரிந்துரைகள் மட்டுமே. இது குறித்து தீர ஆய்வு செய்து பங்குகள் வாங்குபவர்கள் முடிவெடுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

6 stocks that analysts say can deliver impressive returns in next 2-3 weeks

In this uncertain market, here is a collection of 6 hand-picked stocks that can offer solid returns in the next 2-3 weeks:
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X