கடந்த வாரத்தில் பங்கு சந்தையானது பலத்த சரிவினைக் கண்ட நிலையில் 10ல் 9 நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பானது,1,03,532.08 கோடி ரூபாய் இழப்பினைக் கண்டுள்ளது.
இதில் டிசிஎஸ் டாப் லூசராகவும் உள்ளது. எனினும் வழக்கம்போல சந்தை மதிப்பில் முதலிடத்தில் உள்ள நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தான்.
இதற்கிடையில் பிஎஸ்இ சென்செக்ஸ் 491.90 புள்ளிகள் சரிவினைக் கண்டுள்ளது. அரசியல் பதற்றம், அன்னிய முதலீடுகள், சர்வதேச அளவிலான காரணிகள் என பலவும் கவனிக்க வேண்டியவையாக உள்ளது.
டாப் 10 நிறுவனங்கள்
இந்த டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், ஹெச்.டி.எஃப்.சி வங்கி, இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி, பஜாஜ் பைனான்ஸ் மற்றும் பார்தி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் உள்ளன.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனமானது 30,474.79 கோடி ரூபாய் அதிகரித்து, 16,07,857.69 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் சற்று குறைந்து, 2376.40 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
டிசிஎஸ்
டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 44,037.2 கோடி ரூபாய் குறைந்து, 13,67,021.43 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதற்கிடையில் டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 2% குறைந்து, 3694.95 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஹெச்.டி.எஃப்.சி
இதே ஹெச்.டி.எஃப்.சி-யின் சந்தை மூலதனம் 13,772.72 கோடி ரூபாய் குறைந்து, 4,39,459.25 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதற்கிடையில் ஹெச்.டி.எஃப்.சி நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த அமர்வில் 2.03% அதிகரித்து, 2426.35 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஹிந்துஸ்தான் யூனிலீவர்
இதே ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது, 11,818.45 கோடி ரூபாய் குறைந்து, 5,30,443.72 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதற்கிடையில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் பங்கு விலையானது 1.10% குறைந்து, 2258 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கி
ஐசிஐசிஐ வங்கி வங்கியின் சந்தை மதிப்பானது 9,574.95 கோடி ரூபாய் குறைந்து, 5,49,434.46 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கியின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 1.82% குறைந்து, 790.80 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
பஜாஜ் பைனான்ஸ்
பஜாஜ் பைனான்ஸ் சந்தை மூலதனமானது,8,987.52 கோடி ரூபாய் குறைந்து, 4,22,938.56 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 1.76% குறைந்து, 7011.60 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
இன்ஃபோசிஸ்
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனமானது 8,987.52 கோடி ரூபாய் குறைந்து, 7,23,790.27 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 2.73% குறைந்து,1721.35 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் சந்தை மூலதனம் 6113.36 கோடி ரூபாய் அதிகரித்து, 4,73,182.90 ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 2.03% குறைந்து, 529.60 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
பார்தி ஏர்டெல்
பார்தி ஏர்டெல்-ன் சந்தை மூலதனமானது 3,157.91 கோடி ரூபாய் குறைந்து, 3,92,377.89 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 1.23% குறைந்து, 715.15 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஹெச்.டி.எஃப்.சி வங்கி
இதே ஹெச்.டி.எஃப்.சி-வங்கி யின் சந்தை மூலதனம் 2993.33 கோடி ரூபாய் குறைந்து, 8,41,929.20 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதற்கிடையில் ஹெச்.டி.எஃப்.சி வங்கி நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த அமர்வில் 0.41% குறைந்து, 1518.85 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

இந்தியாவுக்கு குட் நியூஸ் சொன்ன ஈரான்!! சாமர்த்தியமாக பேசி காரியத்தை சாதித்த மத்திய அரசு!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?



Click it and Unblock the Notifications