வரும் வாரத்தில் சந்தையின் போக்கினை தீர்மானிக்க போகும் 10 காரணிகள்.. கவனிக்க வேண்டியது என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பங்கு சந்தையானது 2023ல் முதல் வாரத்திலேயே சரிவில் தொடங்கியுள்ளது. இது ஜனவரி 6வுடன் முடிவடைந்த வாரத்தில் 1.5% சரிவினைக் கண்டது. இது நிலவி வரும் சர்வதேச காரணிகளுக்கு மத்தியில், ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டம் என பல காரணிகளும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன.

 

நிபுணர்கள் தொடர்ந்து அமெரிக்க மத்திய வங்கியானது பணவீக்கத்தினை குறைக்க வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம். இது தொடர்ந்து சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த வாரத்தில் வங்கி துறை & நிதி சேவைகள் மற்றும் தொழில்நுட்ப துறையில் செல்லிங் அழுத்தம் காணப்பட்டது. மேலும் சென்செக்ஸ் 60,000 புள்ளிகளுக்கு கீழாக உடைத்துக் காட்டியுள்ளது. இதே நிஃப்டியும் 18000 புள்ளிகளை உடைத்து காட்டியுள்ளது.

ரூ1 லட்சம் டூ ரூ52 லட்சம்.. 1 வருடத்தில் மல்டிபேக்கர் பென்னி பங்கு கொடுத்த அட்டகாசமான வாய்ப்பு! ரூ1 லட்சம் டூ ரூ52 லட்சம்.. 1 வருடத்தில் மல்டிபேக்கர் பென்னி பங்கு கொடுத்த அட்டகாசமான வாய்ப்பு!

முக்கிய காரணிகள்

முக்கிய காரணிகள்

வரவிருக்கும் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், அது பல நிறுவனங்களை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர வரவிருக்கும் காலாண்டு முடிவுகள், மேக்ரோ எக்னாமிக் டேட்டா, பட்ஜெட் எதிர்பார்ப்பு என பலவும் வரவிருக்கும் வாரத்தில் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிறுவனங்களின் வருவாய்

நிறுவனங்களின் வருவாய்

ஐடி நிறுவனங்களின் வருவாய் விகிதமானது நடப்பு காலாண்டில் மேன்மடையத் தொடங்கியது. வரவிருக்கும் சந்தை அமர்வுகளில் இது தாக்கத்தினை ஏற்படுத்தலாம். 60க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வரவிருக்கும் நாட்களில் தங்களது காலாண்டு முடிவினை வெளியிடவுள்ளன.

குறிப்பாக டிசிஎஸ், இன்ஃபோசிஸ், ஹெச்.சி.எல் டெக்னாலஜி, விப்ரோ மற்றும் ஹெச்.டி.எஃப்.சி வங்கி உள்ளிட்ட வங்கிகள் தங்களது காலாண்டு முடிவினை வெளியிடவுள்ளன.

இது தவிர அவென்யூ சூப்பர்மார்ட்ஸ், 5பைசா கேப்பிட்டல், சியண்ட், டென் நெட்வொர்க்ஸ், ஆதித்யா பிர்லா மணி, எல் & டி பைனான்ஸ் ஹோல்டிங்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் காலாண்டு முடிவுகளை வெளியிடவுள்ளன. ஆக இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

சிபிஐ பணவீக்கம்
 

சிபிஐ பணவீக்கம்

டிசம்பர் மாதத்திற்கான சிபிஐ பணவீக்க தரவானது வெளியாகவுள்ளது. இந்த தரவானது சந்தை முதலீட்டாளர்களால் கவனிக்கப்பட்டு வருகின்றது. இது ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாமா? வேண்டாமா? என்பதை தீர்மானிக்கிறது. ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் கூட்டம் பிப்ரவரி 2023ல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து உணவு பொருட்கள் விலையானது சரிவினைக் கண்டு வரும் நிலையில், இது பணவீக்கம் குறைய காரணமாக அமையலாம். ஆக இதுவும் வரவிருக்கும் வாரத்தில் முதலீட்டாளார்கள் கவனிக்க கூடிய முக்கிய தரவாக உள்ளது.

அமெரிக்காவின் பணவீக்கம்

அமெரிக்காவின் பணவீக்கம்

உலகம் முழுக்க அமெரிக்காவின் பணவீக்கம் குறித்தான தரவு குறித்தானது எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு சந்தையில் இருந்து அன்னிய முதலீடுகள் வெளியேற்றம், இந்திய சந்தையில் முதலீடுகள் அதிகரித்தல் என பல முக்கிய மாற்றங்கள் இருக்கலாம். இது உலகின் முன்னணி பொருளாதார நாட்டின் அடுத்த கட்ட வளர்ச்சியினை திட்டமிட உதவும் முக்கிய காரணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் மத்திய வங்கியானது பணவீக்கம் 2% எட்டும் வரையில், சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

குளோபல் மேக்ரோஎக்னாமிக் தரவு

குளோபல் மேக்ரோஎக்னாமிக் தரவு

வரவிருக்கும் செவ்வாய்கிழமையன்று அமெரிக்காவின் மொத்த இருப்பு, கச்சா எண்ணெய் இருப்பு குறித்தான தரவு, வியாழக்கிழமையன்று பணவீக்கம், வேலையின்மை நலன் என பல தரவுகள் வெளியாகவுள்ளன.

ஐரோப்பாவின் வேலையின்மை விகிதம் குறித்தான தரவு திங்கட்கிழமையன்றும், வெள்ளியன்று தொழிற்துறை உற்பத்தி குறித்தான தரவு, வர்த்தக இருப்பு குறித்தான தரவு வெளியாகவுள்ளது.

சீனாவில் வியாழக்கிழமையன்று பணவீக்கம், பிபிஐ, வாகன விற்பனை, வர்த்தக இருப்பு குறித்தான தரவானது வியாழன் வெள்ளியன்று வெளியாகவுள்ளது.

அன்னிய முதலீடு

அன்னிய முதலீடு

2023ன் முதல் வாரத்தில் நிகர விற்பனையாளர்களாக அன்னிய முதலீட்டாளர்களாக இருந்தனர். இது உள்நாட்டு முதலீடுகள் அதிகரித்த நிலையில், இது சந்தைக்கு சாதகமாக அமைந்தது.

கடந்த வாரம் 7800 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து அன்னிய முதலீட்டாளார்கள் வெளியேறியுள்ளனர். டிசம்பர் 2022ல் 14,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து வெளியேறியுள்ளனர்.

பட்டியல்

பட்டியல்

சா பாலிமர்ஸ் நிறுவனம் வரும் வியாழக்கிழமையன்று பங்கு சந்தையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது 66 கோடி ரூபாயினை வெற்றிகரமான சந்தையில் திரட்டிய நிலையில், சில்லறை முதலீட்டாளர்கள் மத்தியில் மட்டும் 17.5 மடங்கு ஆதரவினை பெற்றது.

இது கிரே மார்கெட்டில் வெளியீட்டு விலையானது 65 ரூபாயில் இருந்து 4- 5% பீரிமிய விலையில், சந்தையில் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெக்னிக்கல் பேட்டர்ன்

டெக்னிக்கல் பேட்டர்ன்

நிஃப்டி 50 டெக்னிக்கலாக 18,000 புள்ளிகளை உடைத்துள்ள நிலையில், அடுத்த முக்கிய சப்போர்ட் லெவலாக 17,750 இருக்கலாம். இது கடந்த டிசம்பர் மாத குறைந்த மதிப்பாகும். இந்த முக்கிய லெவலை உடைக்கும்பட்சத்தில் 17,500 என்ற லெவலையும் எட்டலாம். இதே மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்தால் 18,000 - 18,200 என்ற லெவலுக்கு எட்டலாம். இது கடந்த வெள்ளிக்கிழமையன்று 17,859.50 என்ற லெவலில் முடிவடைந்தது.

இந்தியா விக்ஸ்

இந்தியா விக்ஸ்

இந்தியா விக்ஸ் குறியீடானது சற்றே மேன்மையடையத் தொடங்கியுள்ள நிலையில், இது வரவிருக்கும் நாட்களில் சந்தை மீண்டும் ஏற்ற மடைய வழிவகுக்கலாம். ஆக இது வரவிருக்கும் பட்ஜெட் எதிர்பார்ப்புகள் என பல காரணிகள் சந்தையில் கவனிக்க வேண்டிய காரணிகளில் ஒன்றாக உள்ளது. இது தவிர பற்பல கார்ப்பரேட் நிகழ்வுகளும் வரவிருக்கும் நாட்களில் வெளியாகவுள்ளன. இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Dalal street week ahead: 10 important factors that will keep traders busy

Dalal street week ahead: 10 important factors that will keep traders busy
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X