Paytm IPO: பேடிஎம்மின் 28% வீழ்ச்சியால் ரூ.38,000 கோடி முதல் நாளே அவுட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: பங்கு சந்தை வரலாற்றிலேயே மிகப்பெரிய பங்கு வெளியீடாக இருக்கும் என்று பெருமிதமாக கூறப்பட்டு வந்த நிலையில், அதன் மதிப்பு ஒரே நாளில் 38,000 கோடி ரூபாய் வீழ்ச்சி கண்டுள்ளது.

 

இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது எனலாம். ஏனெனில் ஐபிஓ-வில் ஒரு பங்கினை வாங்குகினால், அது பங்கு சந்தையில் பட்டியலிடப்படும்போதே நல்ல லாபம் கொடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

ஆனால் முதல் நாளே 28% வீழ்ச்சியினை பதிவு பதிவு செய்துள்ளது. இதன் மூலம் அதன் மதிப்பானது ஒரே நாளில் 38,000 கோடி ரூபாய் வீழ்ச்சி கண்டுள்ளது.

பெருத்த நஷ்டமே

பெருத்த நஷ்டமே

இதில் ஐபிஓவில் பங்கினை வாங்கி வைத்த முதலீட்டாளர்களுக்கும் தற்போதைக்கு பெருத்த நஷ்டமே. இது பேப்பர் லெவலில் என்றாலும், மீண்டும் இந்த பங்கு விலையானது எப்போது அதிகரிக்கும். அல்லது வரவிருக்கும் அமர்வுகளில் மீண்டும் குறையுமா? அடுத்து என்ன செய்யலாம். கையில் இருக்கும் ஆர்டர்களை என்ன செய்வது என குழப்பத்தின் மத்தியில் உள்ளனர்.

முதலீட்டாளர்கள் அதிருப்தி

முதலீட்டாளர்கள் அதிருப்தி

பங்கு சந்தையில் ஏற்ற இறக்கம் என்பது சகஜமான விஷயமாக பார்க்கப்பட்டாலும், பங்கு சந்தையில் பட்டியிலிடப்ப முதல் நாளே இந்த வீழ்ச்சியானது கண்டுள்ள நிலையில், இது பெரும் அதிருப்தியையே ஏற்படுத்தியுள்ளது. இது அதிக மதிப்பீடு செய்யப்பட்டதே இதற்கு காரணம் என நிபுணர்கள் கூறும் நிலையில், இனி மீண்டும் வெளியீட்டு விலையை எப்போது எட்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

முதல் நாளே மிகப்பெரிய நஷ்டம்
 

முதல் நாளே மிகப்பெரிய நஷ்டம்

பங்கு வெளியீட்டு விலையானது 2150 ரூபாயில் இருந்து, தொடக்கத்திலே 9% சரிவினைக் கண்டது. அதோடு நில்லாமல் முடிவில் கிட்டதட்ட 28% சரிவினைக் கண்டு முடிவடைந்தது. இது வரையில் பங்கு சந்தையில் பொதுப்பங்கு வெளியீடு செய்த நிறுவனங்களில், 1000 கோடி ரூபாய்க்கு மேலான செய்யப்பட்ட நிறுவனங்களில், முதல் நாளே மிகப்பெரிய நஷ்டம் கண்ட முதல் நிறுவனமாக பேடிஎம் உள்ளது.

பட்டியல் இதோ?

பட்டியல் இதோ?

பட்டியலிடப்பட்ட முதல் நாளில் கண்ட நஷ்ட விகிதம்

One97 Communications - 27.40% - 18 நவம்பர் 2021
Coffee Day Enterprises - 17.6% - 2 நவம்பர் - 2015
Reliance Power - 17.2% - 11 பிப்ரவரி 2008
ICICI Securities - 14.4% - 4 ஏப்ரல் 2018
Cairn India - 14.1% - 9 ஜனவரி 2006
UTI Asset management - 14% - 12 அக்டோபர் 2020
Kalyan Jewellers india - 13.4% - 26 மார்ச் 2021
Bharti Infratel - 13.1% - 28 டிசம்பர் 2012
Indiabulls Power - 12.8% - 30 அக்டோபர் 2009
ICICI prudential LIC - 10.9% - 21 மே 2016

 

பிரீமிய விலையில் பட்டியல்

பிரீமிய விலையில் பட்டியல்

இதே சமீபத்தில் வெளியிடப்பட நிறுவனங்களான சோமேட்டோ 65% பிரீமியம் விலையிலும், பாலிசிபஜார் 17% பிரீமிய விலையிலும், நய்கா 79% பிரீமிய விலையும் பட்டியலிடப்பட்டது. இந்த வரிசையில் பட்டியலிடப்பட்ட பேடிஎம் நிறுவனம் மட்டும் 28% சரிவினைக் கண்டுள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Paytm IPO: paytm big fall wipes out Rs.38,000 crore

Paytm IPO: paytm big fall wipes out Rs.38,000 crore
Story first published: Friday, November 19, 2021, 14:37 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X