பட்டையை கிளப்பும் பார்மா பங்குகள்.. இப்போது வாங்கி வைக்கலாமா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் அதன் பீதியும் மக்களை தொற்றிக் கொள்ள ஆரம்பித்துள்ளது.

இது தான் இப்படி எனில் இது பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

எப்படி என்று கேட்கிறீர்களா? கொரோனாவின் தாக்கத்தினால் ஒரு புறம் அலண்டு போயுள்ள மக்கள், அடுத்ததாக சென்று தங்களை பாதுக்காத்துக் கொள்ள குவியும் இடம் மருத்துவமனை தான். தங்களை பாதுகாத்துக் கொள்ள அவசியமான ஒன்றாக கருதப்படுவதாக மருத்துவ துறை தான்.

விலை அதிகரிக்கலாம்

விலை அதிகரிக்கலாம்

இந்த நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இந்த தாக்கத்தினால் நிச்சயம் அதிகளவிலான மருந்துகள தேவைப்படலாம். அதிலும் சீனாவில் இருந்து சரியான மூலதன பொருட்கள் கிடைக்காததால் நமது மருந்து உற்பத்தியே பாதிக்கப்படலாம். இதனால் இருக்கும் மருந்துகள் விலை அதிகரிக்கலாம் என்றும் இதற்கு முன்னபாகவே சில கட்டுரைகளில் படித்தோம்.

எழுச்சி காணலாம்

எழுச்சி காணலாம்

மேலும் கொரோனா காரணமாக முதலீட்டாளர்கள் மத்தியில் பார்மா துறை சார்ந்த பங்குகள் நிச்சயம் எழுச்சி காணும் என்ற எண்ணம் நிலவி வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் தற்போது இதில் கவனம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக சொல்லவேண்டுமானால் பார்மா துறை பங்குகள் பட்டையை கிளப்பி வருகின்றன என்றே கூறலாம். குறிப்பாக சன் பார்மா பங்குகள் கடந்த செவ்வாய்கிழமையன்று 3.8% ஏற்றம் கண்டுள்ளது. இன்றும் அதன் தொடர்ச்சியாக பல பங்குகள் ஏற்றம் கண்டு வருகின்றது.

இன்று பார்மா பங்குகள் பிஎஸ்இ விலை

இன்று பார்மா பங்குகள் பிஎஸ்இ விலை

சன்பார்மா- Rs.400.75 (1.78%)
மெட்ரோபொலிஸ் ஹெல்த்கேர் (Metropolis Healthcare Ltd) - Rs.1,879 ( - 5.59%)

பிளிஸ் ஜிவிஎஸ் பார்மா (Bliss GVS Pharma) - Rs.109 (-1.71%)
ஆர்பிஜி லைஃப் சயின்ஸ் (RPG Life Sciences) - Rs.227.20 (-3.17 )
டாக்டர் லால் பாத்லேப்ஸ் (Dr. Lal PathLabs) - Rs.1688.90 (0.76%)
பயோகான் (Biocon) - Rs.298.85 (-1.73%)
ஆல்பர்ட் டேவிட் (Albert David) - Rs.412 (0.18%)
FDC limited - Rs.226 (-1.57%)
டாக்டர் ரெட்டி லெபாரட்டீஸ் (dr reddy laboratories) - Rs. 3,139.05 (3.13%)
சிப்லா (Cipla) - Rs.441.55 (3.82%)
அஜந்தா பார்மா (Ajanta pharma) - Rs.1,474.20 (0.07%)
அப்பல்லோ ஹாஸ்பிட்டல் (Apollo hospital) - Rs1735.35 (0.66%)
கேப்லின் லேப்ஸ் (Caplin labs) - Rs294.35 (0.77%)

 

பார்மா இண்டெக்ஸ் ஏற்றம்

பார்மா இண்டெக்ஸ் ஏற்றம்

பார்மா துறையை சேர்ந்த பல பங்குகள் ஏற்றம் கண்டுள்ள நிலையில் பார்மா இண்டெக்ஸ்களும் கிரீன் சிக்னல் காட்டியுள்ளன. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் பிஎஸ்இ ஹெல்த்கேர் இண்டெக்ஸ் 0.05% ஏற்றம் கண்டு 13,929.13 ஆக வர்த்தகமாகி வருகிறது. இதே நிஃப்டி ஹெல்த்கேர் இண்டெக்ஸ் 1.25% ஏற்றம் கண்டு 8,016.05 ஆக வர்த்தகமாகி வருகிறது.

இந்த பங்குகளை வாங்கலாமா?

இந்த பங்குகளை வாங்கலாமா?

இந்த பார்மா பங்குகள் நிச்சயம் குறுகிய கால நோக்கில் ஏற்றம் காணலாம் என்றாலும், அது நீண்டகால நோக்கில் பெரிய அளவில் லாபம் கொடுக்குமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆக முதலீட்டாளர்கள் இந்த பங்குகளை வாங்க வல்லுனர்களின் ஆலோசனையுடன் வாங்கி வைப்பது நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Pharma shares gains were in the green signals on last trading day

Pharma indexes were in green color. Also many Pharma shares are increased.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X