இந்திய பங்கு சந்தையின் தந்தை என செல்லமாக அழைக்கப்படும்
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, பங்கு சந்தையில் ஒரு பங்கினை வாங்குகிறார் அல்லது விற்கிறார் என்றாலே அது உன்னிப்பாக கவனிக்கப்படும் பங்குகளாக உள்ளன.
அந்த வகையில் டாடா குழுமத்தினை சேர்ந்த ஒரு பங்கினை நிபுணர்கள் அதிகரிக்கலாம் என கணித்துள்ளனர்.
ரூ.6 லட்சம் கோடி அவுட்.. முதல் நாளே கஷ்ட காலம்.. ஏன்.. என்ன ஆச்சு..?
கொரோனாவினால் பெரும் சரிவினைக் கண்ட இந்த பங்கானது, தற்போது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.

கொரோனாவால் பாதிப்பு
கொரோனா காலகட்டத்தில் ஹாஸ்பிட்டாலிட்டி, ஹோட்டல்கள், சுற்றுலாத்துறை, போக்குவரத்து துறை என பலவும் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக சுகாதார நலன் கருதி ஹோட்டல்கள் மூடப்பட்டிருந்தன. சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. போக்குவரத்துகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆக மொத்தத்தில் 2020ன் ஆரம்பத்தில் இருந்து மேற்கண்ட அனைத்து துறைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன.

வளர்ச்சி காணத் தொடங்கிய பங்குகள்
இதன் காரணமாக ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனங்கள் பெரும் சரிவினைக் கண்டன. இதற்கிடையில் சமீப காலமாகத் தான் தடைகள் நீக்கப்பட்டுள்ளன. இதனால் தற்போது தான் மேற்கண்ட துறைகள் மீண்டு வரத் தொடங்கியுள்ளன. இதன் காரணமாக ஹாஸ்பிட்டாலிட்டி சார்ந்த நிறுவனங்களின் வருவாய் அதிகரிக்கலாம். இது, இத்துறை சார்ந்த பங்குகளுக்கும் ஆதரவளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாங்கி வைக்கலாம்
இதற்கிடையில் கடந்த சில வாரங்களாகவே உக்ரைன் ரஷ்யா இடையேயான பதற்றத்தின் மத்தியில், பல நல்ல நிறுவனங்களின் பங்குகள் கூட சரிவினைக் கண்டுள்ளன. இதனால் பல நிறுவனங்களும் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ராகேஷ் ஜுன் ஜுன்வாலா போர்ட்போலியோவில் உள்ள, இந்தியன் ஹோட்டல்ஸ் பங்கினை வாங்கி வைக்கலாம் என நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

இலக்கு விலை
இது தற்போது 201 ரூபாய் என்ற லெவலில் வர்த்தகமாகி வருகின்றது. இது பங்கின் விலையானது மீடியம் டெர்மில் 280 ரூபாயினையும், அடுத்ததாக 350 ரூபாய் என்ற லெவல் வரையிலும் செல்லலாம்.
ஹாஸ்பிட்டாலிட்டி துறை வரும் மாதங்களில் அதிக முதலீடுகளை ஈர்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக டாடா குழுமத்தினை சேர்ந்த இந்த பங்கினை வாங்கி வைக்கலாம். ஏனெனில் இந்த நிறுவனம் ஹோட்டல் வணிகத்தினை மேம்படுத்த மூலதனத்தினை உட்புகுத்த திட்டமிட்டுள்ளது.

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா வசம்
இதற்கிடையில் ராகேஷ் வசம் மூன்றாவது காலாண்டு நிலவரப்படி, 1,42,87,765 அல்லது 1.08% பங்குகளும், அவரின் மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலா வசம் 1,42,79,200 அல்லது 1.08% பங்குகளும் இருந்தது.
ஆக மொத்தத்தில் டாடா குழுமத்தின் இந்த பங்கில் மொத்தம் 2.16% ராகேஷ் வசம் உள்ளது.