எகிறிய ரிலையன்ஸ் இன்ஃப்ரா & ரிலையன்ஸ் பவர் பங்குகள்! காரணம் என்ன?

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அண்ணன் முகேஷ் அம்பானி, கடந்த 2 மாத காலத்துக்குள், ரிலையன்ஸ் ஜியோ கம்பெனியின் கணிசமான பகுதி பங்குகளை விற்று, பல கோடி ரூபாயை திரட்டி எல்லோரையும் மிரள வைத்துவிட்டார்.

எகிறிய ரிலையன்ஸ் இன்ஃப்ரா & ரிலையன்ஸ் பவர் பங்குகள்! காரணம் என்ன?

 

அது போக, தான் சொன்ன படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கம்பெனியை, மார்ச் 2021-ம் ஆண்டுக்குள் கடன் இல்லாத கம்பெனியாக மாற்றுவேன் எனச் சொல்லி இருந்தார். அதையும் சுமாராக 9 மாத காலத்துக்கு முன்பே, ரிலயன்ஸ் கம்பெனியை நிகர கடன் இல்லாத கம்பெனியாக மாற்றியும் காட்டிவிட்டார்.

இதனால் அண்ணன் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் விலை மீண்டும் 1,800 ரூபாய் வரைத் தொட்டு வர்த்தகமானது. இன்று 1,719 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.

ஆனால் தம்பி அனில் அம்பானியின் வாழ்கை அப்படி இல்லை. தம்பி அம்பானி கடன் அடைத்தே வாழ்கையை ஓட்டிக் கொண்டு இருக்கிறார். இத்தனை சிரமமான் அகாலத்துக்கு மத்தியிலும், அனில் அம்பானி ஒரு நல்ல செய்தி சொன்னதால், அனில் அம்பானி நிர்வகிக்கும், ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மற்றும் ரிலையன்ஸ் பவர் போன்ற கம்பெனி பங்குகள் விலை நல்ல ஏற்றத்தைக் கண்டு இருக்கிறது.

ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ரக்சர் மற்றும் ரிலையன்ஸ் பவர் போன்ற நிறுவனங்களில், மெல்ல ப்ரோமோட்டர்கள், தங்கள் பங்குகளை அதிகரித்துக் கொள்ள இருக்கிறார்களாம். இந்த செய்தியை, அனில் அம்பானி, ஆண்டு இறுதிக் கூட்டத்தில் (Annual General Meeting) சொல்லி இருக்கிறார்.

எனவே கடந்த சில தினங்களாக ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ரக்சர் கம்பெனியின் பங்கு விலை நல்ல ஏற்றம் கண்டு இருக்கின்றன. கடந்த 17 ஜுன் 2020 அன்று 21.85 ரூபாய்க்கு வர்த்தகமானது. ஆனால் இன்று 33.50 ரூபாயைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.

அதே போல ரிலையன்ஸ் பவர் கம்பெனி பங்குகள் விலையும், கடந்த 15 ஜூன் 2020 அன்று 2.70 ரூபாய்க்கு வர்த்தகமானது. ஆனால் இன்று 3.60 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.

எப்படியோ அனில் அம்பானி நல்ல படியாக வியாபாரம் செய்து, ஒழுங்காக கடன்களை எல்லாம் திருப்பிச் செலுத்திவிட்டு, நல்ல வாழ்கை வாழ்ந்தால் சரி தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

reliance power and reliance infra shares zoomed in last few days

Anil ambani managing reliance power and reliance infra shares zoomed
Story first published: Thursday, June 25, 2020, 16:46 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X