கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் MSME-களுக்கு ரூ.1.14 லட்சம் கோடி ஒப்புதல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த செவ்வாய்கிழமையன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் மூலம் 1.14 லட்சம் கோடி ரூபாய் கடன் உத்தரவாத திட்டத்தின் மூலம் கடனுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

மத்திய அரசின் இந்த 100 சதவீத கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் 1.14 லட்சம் கோடி ரூபாய் கடனுக்கு ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், ஏற்கனவே இதில் 56,091 கோடி ரூபாய் நிதியானது ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் MSME-களுக்கு ரூ.1.14 லட்சம் கோடி ஒப்புதல்..!

ஆத்மா நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் பொதுத்துறை வங்கிகள் 65,863.63 கோடி ரூபாய் நிதியினை, 32,00,430 கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அனுமதித்துள்ளன. இதில் 35,575.48 கோடி ரூபாய் நிதியினை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

இதே தனியார் வங்கிகள் 4,28,014 வங்கி கணக்குகள் மூலம் 48,638.96 கோடி ரூபாய் மதிப்புள்ள கடன்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 20,515.7 கோடி ரூபாய் கடன் மட்டும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் எஸ்பிஐ, ஹெஸ்டிஎஃப்சி வங்கி, பேங்க் ஆப் பரோடா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் கனரா வங்கி உள்ளிட்ட வங்கிகள் அதிகளவில் கடன் வழங்கியுள்ளன.

ஆக அரசின் இந்த அதிரடியான திட்டமானது கொரோனாவின் மத்தியில் மிக அழுத்தத்தில் இருக்கும் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இது உதவும் என்றும், குறிப்பாக 19 லட்சம் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இது உதவும் என்றும் கூறப்படுகிறது.

அரசின் இந்த திட்டமானது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது. உண்மையில் கொரோனாவின் மத்தியில் பல பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் எம் எஸ் எம் இ நிறுவனங்களுக்கு மத்தியில், இது புத்துயிர் கொடுக்கும் விதமாக உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மத்திய அரசு 3 லட்சம் கோடி ரூபாய் கடனை வழங்கும் திட்டத்தினை அறிவித்திருந்தது நினைவு கூறக்தக்கது.

 

இது கொரோனா லாக்டவுனுக்கு பிறகு எம்எஸ்எம்இ-க்கள் இயல்பு நிலைக்கு திரும்ப வழி வகுக்கும் என்றும் நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Banks approved Rs.1.14 lakh crore loan under credit guarantee scheme for MSME

MSME gurantee scheme.. Public sector Banks and private banks approved Rs.1.14 lakh crore loans under credit guarantee scheme for MSMEs.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X