வேலைக்கு செல்லும் பலரின் கனவு சொந்தமாகத் தொழில் தொடங்கி நாமும் முதலாளியாக வேண்டும் என்பதாக இருக்கும்.
அப்படி இருந்தாலும் பலர் அதற்கு நிறைய முதலீடுகள் வேண்டும் அல்லது தங்களுக்கு ஒவ்வொரு மாதம் குறிப்பிட்ட அளவு பணம் தேவை என பிஸ்னஸ் கனவை ஓரம் வைத்துவிட்டு வேலைக்கு சென்று மாதம் சம்பளம் வாங்குவதையே குறிக்கோளாக வைத்து இருப்பார்கள்.
ஆனால் குறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய தொழில்களும் உள்ளன. அதுபற்றி இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

டிஜிட்டல் கல்வி
வேகமாக வளர்ந்து வரும் ஐடி உலகில் பலரும் வேலை செய்யும் இடங்களில் பல்வேறு மென்பொருளில் கை தேர்ந்தவர்களாக இருப்பார்கள். அதையே ஒரு படிப்பாக மாற்றி ஆன்லைனில் வீடியோவாக வெளியிடுவது, அல்லது ஆன்லைனில் கற்றுக்கொடுப்பதன் மூலம் பெரும் முதலீடு இல்லாமல் தொழில் தொடங்கலாம்.

கைவினை பொருட்கள்
உங்களுக்கு கைவினை பொருட்கள் செய்யும் திறன் உள்ளது என்றால், அதை உற்பத்தி செய்துவிட்டு ஆன்லைனில் விற்க பல்வேறு இணையதளங்கள் செயலிகள் உள்ளன. இதற்கும் பெரிய முதலீடு தேவை இருக்காது.

இன்ஃபுலியன்சர் மார்க்கெட்டிங்
சமூக வலைத்தளங்களில் நீங்கள் எப்போதும் ஆக்டிவாக இருப்பீர்களா? உங்களை லட்சம் கணக்கானவர்கள் பின்பற்றி வருகிறார்களா. அப்படியானால் இன்ஃபுலியன்சர் மார்க்கெட்டிங் உங்களுக்கு ஏற்ற தொழில் ஆகும். பல்வேறு நிறுவனங்கள் இப்போது தங்களது தயாரிப்புகளை விரைவாக வாடிக்கையாளர்களிடம் கொண்டு செல்ல இன்ஃபுலியன்சர் மார்க்கெட்டிங் செய்பவர்களைத் தான் தேடி வருகிறார்கள்.

பேக்கரி
உங்களுக்கு சமையல் செய்ய பிடிக்கும் என்றால் பேக்கரி, அல்லது சிறிய அளவில் உணவை வீட்டிலேயே தயாரித்து விற்கலாம். இது போன்றவர்களை ஊக்குவிக்கவும் ஆன்லைனில் பல்வேறு இணையதளங்கள் உள்ளன.

புத்தகம் எழுதுதல்
உங்களுக்கு நன்றாக எழுத வருமா? அப்படியானால் சொந்தமாகப் புத்தகம் எழுதி அதை அச்சிட்டு விற்பனை செய்வது எல்லாம் பழைய கதை. இப்போது புத்தகங்களை எழுதி நேரடியாக அமேசான் கிண்டல் உள்ளிட்ட செயலிகளில் பதிவேற்றி அவற்றை விற்கலாம்.

ஆன்லைன் காபி / டீ கடை
விவிதமக காபி, டீ போட தெரியுமா உங்களுக்கு. அப்படியானால் அதற்கான ஒரு மெனுவை உருவாக்குங்கள். ஆன்லைனில் விற்பனை செய்யுங்கள்.

ஆப் / இணையதளம் உருவாக்குதல்
ஆப் மூலம் வணிகம் செய்வது வேகமாக வளர்ந்து வரும் தொழிலாக உள்ளது. உங்களால் சொந்தமாக ஆப் அல்லது இணையதளம் உருவாக்க முடியும் என்றால் அதனை பல்வேறு நபர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

விளம்பரம் / டிஜிட்டல் மார்க்க்கெட்டிங்
எந்த ஒரு தொழில் செய்துவந்தாலும் அதை விளம்பரம் செய்ய வேண்டும் நிறைய மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பது முக்கிய பிரச்சனை. அது உங்களுக்கு தெரியும் என்றால் அதற்கான சேவையை நீங்கள் வழங்கலாம். பல்வேறு சிறு நிறுவனங்கள் தங்களது பொருட்களை சந்தையில் மக்களிடம் கொண்டு செல்ல டிஜிட்டல் மார்க்கெட்டிங் சேவையை நாடுகின்றனர்.

ஆன்லைன் பேஷன் ஸ்டோர்
நீங்கள் விதவிதமாக அடைகளை வடிவமைக்கும் திறன் படைத்தவர் என்றால் அதையே ஆன்லைனில் விற்பனை செய்து பணம் சம்பாதிக்கலாம். மேலும் ஷாப்பிஃபை உள்ளிட்ட சேவைகளை வைத்து சொந்தமாக இ-காமர்ஸ் இணையதளம் அல்லது செயலிகளையும் உருவாக்கி சொந்த பிராண்டையே நீங்கள் உருவாக்கலாம்.