MSME புதிய வரையறை ஜூலை முதல் அமல்! ரூ.50 கோடி வரை முதலீடு செய்தவர்களுக்கும் பலன்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதுவரை ஒரு நிறுவனம், இயந்திரங்கள் மற்றும் உற்பத்தி சாதனங்களில் முதலீடு செய்யும் தொகையைப் பொறுத்து தான் MSME வரையறை செய்து கொண்டு இருந்தார்கள்.

 

ஆனால் வரும் ஜூலை 01 முதல் வேறு வகையில் சிறு குறு தொழில்முனைவோர்களைப் பிரிக்க இருக்கிறது மத்திய அரசு. அதற்கு முன் தற்போது எப்படி பிரிக்கிறார்கள் என்று பார்ப்போம்.

இப்போது வரை ஒரு உற்பத்தி நிறுவனம் 25 லட்சம் ரூபாய்க்குள் இயந்திரங்கள் மற்றும் உற்பத்தி சாதனங்களில் முதலீடு செய்து இருந்தால் அது மைக்ரோ நிறுவனம் (Micro Enterprise).

உற்பத்தி நிறுவனம்

உற்பத்தி நிறுவனம்

ஒரு உற்பத்தி நிறுவனம் 5 கோடி ரூபாய்க்குள் இயந்திரங்கள் மற்றும் உற்பத்தி சாதனங்களில் முதலீடு செய்து இருந்தால் அது சிறு நிறுவனம் (Small Enterprise).
ஒரு உற்பத்தி நிறுவனம் 10 கோடி ரூபாய்க்குள் இயந்திரங்கள் மற்றும் உற்பத்தி சாதனங்களில் முதலீடு செய்து இருந்தால் அது நடுத்தர நிறுவனம் (Medium Enterprise).

எம் எஸ் எம் இ சேவை நிறுவனம்

எம் எஸ் எம் இ சேவை நிறுவனம்

உற்பத்தி நிறுவனத்தைப் போல, சேவை சார்ந்த தொழில் செய்யும் நிறுவனங்கள் இயந்திரங்கள் மற்றும் சாதனங்களில் செய்யும் முதலீடுகளைப் பொறுத்து பிரிக்கிறார்கள். இப்போது ஒரு சேவை நிறுவனம் 10 லட்சம் ரூபாய்க்குள் இயந்திரங்கள் மற்றும் சாதனங்களில் முதலீடு செய்து இருந்தால் அது மைக்ரோ நிறுவனம் (Micro Enterprise).

சேவை மற்றவைகள்
 

சேவை மற்றவைகள்

ஒரு சேவை நிறுவனம் 2 கோடி ரூபாய்க்குள் இயந்திரங்கள் மற்றும் சாதனங்களில் முதலீடு செய்து இருந்தால் அது சிறு நிறுவனம் (Small Enterprise).
ஒரு சேவை நிறுவனம் 5 கோடி ரூபாய்க்குள் இயந்திரங்கள் மற்றும் சாதனங்களில் முதலீடு செய்து இருந்தால் அது நடுத்தர நிறுவனம் (Medium Enterprise).

புதிய விளக்கம் - 1

புதிய விளக்கம் - 1

இப்போது புதிய விளக்கத்தின் படி, சிறு குறு தொழில்முனைவோர் அமைச்சகத்தின் அறிவிப்புப் படி, ஒரு நிறுவனத்தின் மொத்த முதலீடு மற்றும் டேர்ன் ஓவர் பொறுத்து அவர்கள் எந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் என மாறுபடுமாம். இந்த வரம்பு உற்பத்தி & சேவை இரண்டு தரப்பினருக்குமே பொருந்துமாம்.

புதிய விளக்கம் 2

புதிய விளக்கம் 2

1. 1 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5 கோடி ரூபாய் ஆண்டு டேர்ன் ஓவர் - மைக்ரோ நிறுவனம் (Micro Enterprise).
2. 10 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 50 கோடி ரூபாய் டேர்ன் ஓவர் - சிறு நிறுவனம் (Small Enterprise).
3. 50 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 250 கோடி ரூபாய் டேர்ன் ஓவர் - நடுத்தர நிறுவனம் (Medium Enterprise) எனச் சொல்லி இருக்கிறார்கள்.

இந்த புதிய வரையறை தான் வரும் 01 ஜூலை 2020 முதல் அமலுக்கு வரும் எனவும் சொல்லி இருக்கிறது சிறு குறு தொழில்முனைவோர் அமைச்சகம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

MSME new definition will be applicable from 01 july 2020

MSME new definition will be applicable from 01 July 2020. This will benefit around 6 crore MSME in India.
Story first published: Tuesday, June 16, 2020, 22:36 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X