Jack Ma Business செய்யக் காரணம் இந்த 10 கேள்விகள் தானாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபா-வின் தலைவர், ஜாக் மா சொல்கிறார் "ஒரு குழந்தைக்கு முன்னால் ஒரு ஐஸ்க்ரீமையும், 2000 ரூபாய் நோட்டையும் காட்டினால், அது ஐஸ்க்ரீமைத் தான் எடுத்துக் கொள்ளும். அந்தக் குழந்தைக்கு 2,000 ரூபாயில் எத்தனை ஐஸ்க்ரீம்களை வாங்க முடியும் எனத் தெரியாது".

 

"அது போலவே, இன்றைய உலகில் இருக்கும் இளைஞர்களிடம் ஒரு நல்ல வேலைக்கான அப்பாயிண்ட்மென்ட் லெட்டர் அல்லது ஒரு நல்ல Business-க்கான ஐடியாவைக் கொடுத்தால், அவர்கள் நல்ல வேலையைத் தான் தேர்வு செய்கிறார்கள், அந்த பச்சைக் குழந்தயைப் போல" என்கிறார் ஜாக் மா.

உண்மை தானே... பாதுகாப்பு, என்ன ஆனாலும் மாதம் பிறந்தால் சம்பளம் வந்து விடும் என்கிற ஒரு சின்ன செண்டிமெண்டில் லாக் ஆகிவிடுகிறோம் தானே. Business என்றாலே ரிஸ்க் அதிகம் என பயந்து நடுங்கி விடுகிறோம். சரி இந்த விஷயத்தை விரிவாகப் பார்ப்போம்.

இனி கேபிள் பிரச்சனை இருக்காது.. விரைவில் அரசின் டி.டி.ஹெச் சேவை.. TACTV திட்டம்

1. நாம் ஒரு செலவுக் கணக்கு

1. நாம் ஒரு செலவுக் கணக்கு

நாம் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறோம். கடந்த 2017 - 18 நிதி ஆண்டை விட சமீபத்தைய 2018 - 19 நிதி ஆண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் எத்தனை மடங்கு உயர்ந்திருக்கிறது என்று தானே கேட்கிறார்கள். எந்த நிறுவனமாவது இந்த 2018 - 19-ம் ஆண்டில் 2017 - 18 நிதி ஆண்டை விட குறைவான லாபம் ஈட்டி இருக்கிறோம் என பெருமையாகச் சொல்கிறார்களா..? இல்லை.

அவர்களுக்கு சம்பளம் செலவு தானே

அவர்களுக்கு சம்பளம் செலவு தானே

ஆக அனைத்து வியாபாரிகளின் நோக்கமும் லாபம் தான். அந்த லாபத்தை ஈட்ட ஊழியர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தை செலவுக் கணக்கில் தானே வைத்துக் கொள்கிறார்கள். நம்மை மேம்படுத்தும் கணக்கில் இல்லையே..? பிறகு எதற்கு நாம் இன்னொருவனை வளர்த்து விட விஸ்வாசத்தோடு, உயிரைக் கொடுத்து வேலை பார்க்கிறோம்...? என்ன பலன்..? ஆதலால் Business செய்வீர் ப்ரோ.

2. சம்பளம் Vs லாபம்
 

2. சம்பளம் Vs லாபம்

நாம் வேலை பார்க்கும் நிறுவனத்தின் ஆண்டு வருமானத்தில் 10% வருமானம், நம் மூலம் கூடுதலாக வருகிறது என்றால், நமக்கு கிடைக்கும் சம்பளமும் அதே அளவுக்கு அதிகரிக்க வேண்டும் இல்லையா அது தானே லாஜிக். ஆனால் வழக்கம் போல எந்த நிறுவனமும் நமக்கான சம்பள உயர்வை ஒழுங்காகக் கொடுப்பதில்லை. ‛அன்பே சிவம்' பாணியில் இன்க்ரிமென்ட்கள் 910 ரூபாயிலேயே தேங்கி விடுகின்றன.

இரட்டை இலக்கம்

இரட்டை இலக்கம்

100 ஊழியர்கள் இருக்கிறார்கள் என்றால் அதில் சுமாராக 10 பேருக்குத் தான் இரட்டை இலக்கங்களில் இன்க்ரிமெண்டுகள் கிடைக்கின்றன, பாக்கி உள்ளவர்களுக்கு எல்லாம் 5,6,7,8, என முடித்து விடுகிறார்கள். நம் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில்லை. புலம்பல்கள் அதிகமாகி, நம் ரத்தக் கொதிப்பு தான் அதிகரிக்கின்றன. இதையே கமிஷன் அடிப்படையில் பேசி நாமே அவ்வளவு பொருட்களையோ, சேவைகளையோ பிசினஸ் செய்து கமிஷன் வாங்கி இருந்தால், எவ்வளவு சம்பாதித்திருப்போம். இனியாவது சம்பளம் விடுத்து அந்த 2% கமிஷனில் கோடீஸ்வரனாகும் பிசினஸை செய்வோம் சார். ஆதலால் Business செய்வீர் ப்ரோ.

3. அடுத்த தலைமுறைக்கு

3. அடுத்த தலைமுறைக்கு

இன்று ஒரு நிறுவனத்தில் நீங்கள் வேலை பார்க்கிறீர்கள். அந்த நிறுவனத்தின் முதலாளி தன் மகனிடம் அதே நிறுவனத்தை ஒப்படைப்பார். அவர் மகன் உங்களை வேலை வாங்குவார். நீங்கள் பார்க்கும் வேலையை, உங்கள் மகளுக்கோ, மகனுக்கோ ஒப்படைக்க முடியுமா...? உங்கள் முதலாளி மகன் பல கேள்விகள் கேட்டு வெளியே தான் அனுப்பப் பார்ப்பார். இப்போது சொல்லுங்கள் நீங்கள் நிறுவனம் தொடங்கினால் தானே உங்கள் குழந்தைகளிடம் உங்கள் நிறுவனத்தை கெத்தாக ஒப்படைக்க முடியும். ஆதலால் Business செய்வீர் ப்ரோ.

4. புகழ்

4. புகழ்

"சார், உங்க ப்ராடெக்ட் எல்லாம் செம. நீங்கதான் அருமையான ப்ராடெக்ட் எல்லாம் சப்ளை பண்றீங்க" என யாராவது உங்களை புகழ்கிறார்கள் என்றால், அது நிறுவனத்துக்கானது என்பதை மறந்து, நம்மை புகழ்வதாகவே நினைத்து மெய் சிலிர்த்துப் போவோம். இல்லையா? வாழ்க்கை முழுவதும், ‛நான் நல்ல பொருளை சப்ளை செய்கிறேன்' என ஒரு வெட்டி இருமாப்பு வேறு இருக்கும். நன்றாக கவனித்து பாருங்கள். அந்த புகழ் நம்மால், நம் நிறுவனத்துக்கு கொடுக்கப்படுகிறது. நமக்கு என்ன புகழ் கிடைக்கும்..?

புகழ் 1

புகழ் 1

அந்த புகழுக்கு நாமும் உரிமையானவர்தான், ஆனால் சேனல்களில், பத்திரிகைகளில், மக்களுக்கு மத்தியில் நம்மை எத்தனை பேருக்கு தெரியும். உதாரணமாக ரிலையன்ஸ் ஜியோ சிம்மில் ஓசியில் மற்றவர்களுக்கு Wifi hotspot போட்டுக் கொடுக்கும் போது கூட, ஆட்டொமெட்டிக்காக அம்பானி பெயர் தானே நினைவுக்கு வருகிறது. அதில் வேலை பார்க்கும் நபரில் ஒருவரின் பெயராவது நமக்குத் தெரியுமா...? இப்ப சொல்லுங்க பாஸ், விரல் வீங்க வேலை பாக்குறது நாம.. பேரும், புகழும் ஓனருக்கா? ஆதலால் Business செய்வீர் ப்ரோ.

5. அந்தஸ்து

5. அந்தஸ்து

"சார் நான் இந்த கம்பெனில இருந்து வர்றேன்" என்றால் கிடைக்கும் மரியாதைக்கும், "சார் இவர் இந்த கம்பெனியோட ஓனர் "என்று வேறு ஒருவர் நம்மை அறிமுகம் செய்துவைப்பதில் கிடைக்கும் மரியாதைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது தானே? அந்த அந்தஸ்து நாமாக நமக்கு என்று ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்காத வரை கிடைக்காது. ரோட்டில் போகும் போது கூட ‛இந்த கம்பெனிகாரனுங்க எல்லாம் எப்படி வாழ்றாங்க பாரேன்' என்று எத்தனை முறை வியந்திருப்பீர்கள். அதாங்க அந்தஸ்து. அந்த அந்தஸ்தை நீங்கள் தனியாக ஒரு பிசினஸ் சாம்ராஜ்ய தொடங்கி நடத்தினாலோ அல்லது அரசியல்வாதியாக அதிகாரத்தைக் கைப்பற்றினால் தான் வரும்..? ஆதலால் Business செய்வீர் ப்ரோ.

6. பயம்

6. பயம்

ஒரே ஒரு நாள் நிர்ணயித்த டார்கெட்டை விட 50 சதவிகிதம் குறைவாக வேலை செய்து பாருங்கள். அடுத்த நாள் காலையிலேயே "தம்பி உன் வேலை ஊசலில் இருக்கு, மரியாதையா வீக் எண்ட் லீவ் எடுக்காம வந்து டார்கெட்ட கம்ளீட் பண்ணுங்க" என அழகான வார்த்தைகளில், அதிகாரிகளிடம் இருந்து மிரட்டல் வரும். ஒருவேளை அதையும் கண்டு கொள்ளாமல் நீங்கள் கொஞ்சம் விட்டு விட்டீர்கள் என்றால் கான்ஃபிரன்ஸ் கால் போட்டு திட்டுவார்கள். உங்கள் சக ஊழியர்கள் (குறிப்பாக பெண்கள்) மத்தியில் கூப்பிட்டு வைத்து திட்டுவது, மொத்த அலுவலகத்துக்கும் மெயிலில் சிசி வைத்து நம்மை அசிங்கப்படுத்துவார்கள்.

நம்மிடம் கேட்டது உண்டா..?

நம்மிடம் கேட்டது உண்டா..?

எந்த ஒரு முதலாளியாவது, சரியாக டார்கெட்டை நிறைவு செய்யாத நபரிடம் என்ன பிரச்னை என்று கேட்டிருக்கிறார்களா..? ஒரு பத்து நிமிடம் ஊழியர்களோடு ஊழியர்களாக இருந்து உளமாற அட்வைஸ் கொடுத்திருக்கிறார்களா..? நம்மைப் பற்றி மேலாளர்களிடம் கேட்காமல் நம்மிடம் நமக்கான Assessment-களை போலித் தனம் இல்லாமல், உண்மையாகக் கேட்டிருக்கிறார்களா..? நாம் செய்யும் சின்ன சின்ன வேலைகளுக்கு எப்போதாவது ஒரு சின்ன பாராட்டுக்கள், நன்றிகள் வந்ததுண்டா..? இந்த மொத்த கேள்விகளுக்கு ஒற்றை பதில் இல்லை...! ஒரு மாதம் உங்களுக்கான டார்கெட்டை மிஸ் செய்து பாருங்கள், உங்களை வேலையில் இருந்தே தூக்கி எரிந்து விடுவார்கள். அப்படி அவர்கள் நம்மை 51-வது வயதில் வீட்டுக் கடனுக்கான இ எம் ஐ கட்டிக் கொண்டிருக்குப் போது, அன்றைய இளைஞர்களுடன் போட்டி போட்டு ஓட முடியவில்லை என நம்மை நிறுவனங்கள் விரட்டி அடிப்பதற்குள் பிசினஸ் செய்வோம். சுயமாய் வாழ்வோம். ஆதலால் Business செய்வீர் ப்ரோ.

7. குற்றம்

7. குற்றம்

ஒரு பிசினஸ் என்றால் பெரும்பாலானவர்கள் எதாவது ஒரு வொயிட் காலர் க்ரைமைச் செய்திருப்பார்கள் என்கிறார் பிரபல எழுத்தாளர் அரவிந்த் அடிகா. நம் நிறுவனத்தின் வொயிட் காலர் க்ரைமில் நமக்கே தெரியாமல் நாமும் பங்கு எடுத்திருப்போம். நம் நிறுவனத்தின் லாப வெறிக்கு நமக்கே தெரியாமல் நாமும் ஒத்து ஓதிக் கொண்டிருக்கிறோம். உதாரணமாக நம் டார்கெட்டை கம்ப்ளீட் செய்ய, வாய்க்கு வந்ததைச் சொல்லி பொருளை விற்று இருப்போம், இல்லாத பிரச்னையை பிரச்னை போலக் காட்டி நம் நிறுவனத்துக்கு ஆர்டர் பிடித்திருப்போம். இதை நான் பட்டியலிடுவதை விட நீங்களே, உங்களை ஒரு சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். நிச்சயமாக ஒரு இடத்திலாவது நம் சம்பளத்தைக் காப்பாற்றிக் கொள்ள, நமக்கே பிடிக்காத, நம் மனசாட்சிக்கு விரோதமான ஒரு வேலையை நம் நிறுவனத்துக்காக கட்டாயம் செய்திருப்போம்.

நேர்மையாக வாழ்வோம்

நேர்மையாக வாழ்வோம்

அப்படிப்பட்ட குற்றச் செயல்களில் இருந்து விடுபட, நாமே சுதந்திரமாக வாழ, நமக்கென ஒரு பிசினஸைத் தொடங்குவோம். இன்றும் கூட வியாபாரத்துக்காக தன் நேர்மையை விட்டுக் கொடுக்காத எத்தனையோ நல்லவர்களை நாம் தினமும் கடக்கிறோம். என் வீட்டருகில் எப்போதும் மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்டும் ரஹீம் பாயிடம் அதைக் காண்கிறேன். "செட்டா இன்னு இவ்விடத்த பிரட்டு கேடாயிப் போயி (இன்று என் கடை பிரட் காலாவதியாகிவிட்டது)" என நேர்மையாகச் சொல்லும் உன்னி மேனன் சேட்டனைப் பார்க்கிறேன். அந்த நேர்மையின் தொடர்ச்சியாக நாமும் இருப்போம். இந்த உலகுக்கு தரமான பொருட்கள் மற்றும் சேவைகளைக் கொடுப்போம். ஆதலால் Business செய்வீர் ப்ரோ.

8. ஆண்டான் அடிமை

8. ஆண்டான் அடிமை

இன்றைய தேதிக்கு ஒரு நிறுவனத்தில் வேலை பார்ப்பவர், அந்த நிறுவனத்தின் கொள்கைகளோடும், விருப்பு, வெறுப்புக்களோடும் ஒத்துப் போக வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டிருக்கிறோம். ஒரு நிறுவனத்தின் முதலாளி சைவமாக இருந்தால், அந்த நிறுவனத்தில் எப்போதுமே அசைவ உணவு கொண்டு வரக் கூடாது என்கிற அளவுக்கு கெடுபிடி நடந்திருக்கிறது. நம் உணவைக் கூட தீர்மானிக்க முடியாத, நம் அடிப்படை உரிமைகளைக் கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் நாம் எதைச் சாதிக்கப் போகிறோம்..? இந்த நூதன அடிமைத் தனம் அணியும் ஆடைகளில் தொடங்கி, நம் வார இறுதி விடுப்பு நாட்கள் வரைத் தொடர்கிறது. இந்த அடிமைத் தனம் ஒவ்வொரு நிறுவனங்களிலும் ஒவ்வொரு விதத்தில் இன்று பரிணமித்துக் கொண்டிருக்கிறது. இந்த நவீன அடிமைச் சங்கிலையை உடைக்க பிசினஸ் செய்வோம். ஆதலால் Business செய்வீர் ப்ரோ.

9. என்னங்க வருது

9. என்னங்க வருது

பொதுவாக பிசினஸ் செய்பவர்களிடம் "பிசினஸ் எப்படிப் போகுது" எனக் கேட்டிருக்கிறீர்களா..? உடனே அவர்களும் ஏதோ போகுதுங்க, கைக்கும் வாய்க்குமே எல்லாம் சரியாப் போய்டுது என அழுத்துக் கொள்வார்கள். நாமும் ஐயோ பாவம் என அவர்கள் மீது கரிசனப்படுவோம். அந்த வியாபாரியிடம் எத்தனை வருடமாக வியாபாரம் பார்க்கிறீர்கள் எனக் கேட்டுப் பாருங்கள். 20 வருடம் 30 வருடம் எனச் சொல்வார்கள். ஆக அந்த ஒரு கடையை வைத்துக் கொண்டு திருமணங்கள், குழந்தைகள் வளர்ப்பு, அவர்களுக்கான கல்விச் செலவுகள், சொந்தபந்தங்களின் நல்லது கெட்டது, கோவில் திருவிழாக்களுக்கான நிதி, என அனைத்தையும் சமாளித்திருப்பார். நிச்சயமாக சில தியாகங்களையும் செய்திருப்பார். ஆனால் நாமோ எல்லாவற்றுக்கும் கடன் வாங்கி கடன் வாங்கி திருப்பிச் செலுத்திக் கொண்டிருப்போம். ஒரு வியாபாரியாவது வியாபாரத்தில் எப்போதும் மார்ஜின் அதே தான் கிடைக்கும். ஆகையால் நாங்கள் எப்படியும் பிழைத்துவிடுவோம், நீங்களும் வேண்டுமானால் பிசினஸ் செய்யுங்களேன் எனச் சொல்லிப் பார்த்திருக்கிறீர்களா..? லாபம் பார்க்காத வியாபாரத்தையா 30 வருடங்களாக பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என ஒரு முறையாவது, ஒரு வியாபாரியையாவது பார்த்து நாம் கேள்வி கேட்டது உண்டா..? பிசினஸ் என்றால் லாபம். ஆதலால் Business செய்வீர் ப்ரோ.

10. வித்தியாசம் இல்லை

10. வித்தியாசம் இல்லை

இதை எல்லாம் கூட விடுங்கள். வாழ்கைன்னா ஒரு கிக் இருக்கணும்னு சொல்லுவாங்கல்ல. அது பிசினஸ் செய்யும் போது நிச்சயமாக கிடைக்கும். ஒரு நிறுவனத்தில் முதலாளி தன் பணத்தை முதலீடு செய்து, மேலதிகாரிகளிடம் தனக்கான தேவைகளைச் சொல்கிறார். அந்த மேலதிகாரி, முதலாளியின் தேவைகளைப் புரிந்து கொண்டு திட்டமிட்டு தன்னால் முடிந்தவரை நிறுவனத்தை வளர்த்து எடுக்கிறார். ஆக பிசினஸுக்காகவும் தன் வேலையை தக்க வைத்துக் கொள்வதற்காக ஓடும் ஓட்டமும், ஒன்றாகத் தான் இருக்கிறது. எதிர் கொள்ளும் சவால்களின் அளவும் ஒன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் எடுக்கும் ரிஸ்கில் தான் கொஞ்சம் வித்தியாசப்படுகிறது. முதலாளி முதல் போடுகிறார். நாம் முதல் போடுவதில்லை.

அந்த ஓட்டத்தை நாமே முதல் போட்டு நமக்காக ஓடிக் கொள்வோமே..? உங்கள் கேள்வி சரி தான் முதல் திரட்டுவது எவ்வளவ் சிரமம் என்று... ஆனால் நம் சொந்தக் காலில் நிர்க கொஞ்சம் கூடுதல் ரிஸ்க் எடுத்துத் தான் பார்ப்போமே...! இப்படி பிரியாணிக் கடை வைத்து பிழைத்த வெங்கி எனும் ஐடி ஊழியரின் கதையைப் பாருங்களேன்..!

ஒரு கூடுதல் ரிஸ்க் எடுத்து நாம் நமக்காக ஓடத் தொடங்குவோமே...? ஒரு நிறுவனத்தை உயரத்துக்கு கொண்டு செல்லத் தெரிந்த நமக்கு, நம் நிறுவனம் எனும் போது மட்டும் அந்த ரிஸ்க் எடுக்க பயம் வந்துவிடுகிறது. அந்த பயத்தை வெல்ல, பிசினஸ் செய்வோம். நம் உயர்வுக்காக பிசினஸ் செய்வோம். ஆதலால் Business செய்வீர் ப்ரோ. உங்கள் புதிய பிசினஸ் சிறப்பாக அமைய, லாபம் கொழிக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள் ப்ரோ..!

குறிப்பு: ப்ரோ என்கிற வார்த்தை பாலின பாகுபாடு இல்லாமல் அனைத்து நண்பர்களையும் குறிக்கும்.

சரியாகத் தான் சொல்லி இருக்கிறார்

சரியாகத் தான் சொல்லி இருக்கிறார்

ஆம் ஜாக் மா கேட்டுக் கொண்ட கேள்விகளும், அவர் சொன்ன வார்த்தைகளும் உண்மை தான். அவருடைய புகழ் பெற்ற வார்த்தைகளில் “I don't want to be liked, i want to be respected" என தெளிவாகச் சொல்லி இருக்கிறார். அந்த மரிதையப் பெற நாமும் ஜாக் மா வழியில் பிசினஸ் செய்வோம்..! ஆதலால் Business செய்வீர் ப்ரோ..!

குறிப்பு: ப்ரோ என்கிற வார்த்தை பாலின பாகுபாடு இல்லாமல் அனைத்து நண்பர்களையும் குறிக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

why should we have to do business the question and answer is in 10 points

why should we have to do business the question and answer is in 10 points
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X