பங்குச் சந்தையில் தொடர் சரிவை சந்திக்கும் இன்போசிஸ்

By Mathi
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: பங்குச் சந்தையில் கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு ரூ.2,145 ஆக இன்று குறைந்தது. பங்குச் சந்தையில் இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில் இன்போசிஸ் நிறுவன பங்கு மதிப்பு ரூ.2,167 ஆக இருந்தது. வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ரூ.2,147ஆகக் குறைந்தது. அதன் பின்னர் மேலும் சரிவை சந்தித்து ரூ.2,145 ஆகக் குறைந்தது. கடந்த 52 வாரங்களில் இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு முதல் முறையாக இப்படி சரிவை சந்தித்திருக்கிறது.

நடப்பு நிதி ஆண்டின் முதலாவது காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் லாபம் ரூ.2,450 கோடியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களிடம் இருந்தது. ஆனால் எதிர்பார்ப்பைவிட குறைவாக ரூ.2,289 கோடி லாபம் என்று இன்போசிஸ் நிறுவனம் அறிவித்தது. இதுதான் முதலீட்டாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது என்கின்றனர் சந்தை வல்லுநர்கள்.

 

இதனால் தங்கு முதலீட்டை மற்ற தொழில்நுட்ப நிறுவனங்களான ஹெச்.சி.எல். மற்றும் டி.சி.எஸ். ஆகியவற்றின் பக்கம் திருப்பவும் முதலீட்டாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Unabated selling in Infosys; stock hits fresh 52-week low | பங்குச் சந்தையில் தொடர் சரிவை சந்திக்கும் இன்போசிஸ்

Selling pressure in Shares of Infosys Technologies saw the stock hit another 52-week low on the bourses. Infosys Technologies was trading at Rs 2147 at 9.55 am IST, breaching Thursday's low of Rs 2150.
Story first published: Thursday, July 26, 2012, 11:26 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X