
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனின் சன் குழுமம் ரூ549 கோடி லஞ்சமாகப் பெற்றது என்பது சிபிஐ குற்றச்சாட்டு. இது தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தயாநிதி, கலாநிதி ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பும் தயாநிதியிடம் சிபிஐ விசாரணை நடத்தியதாக நேற்று தகவல் வெளியானது.
இதையடுத்து இன்று பங்குச் சந்தையின் தொடக்கத்தில் சன் டிவியின் பங்குகள் 40 விழுக்காடு சரிவைத் தொட்டது. இன்றைய பங்குவர்த்தகத்தின்போது சன் டிவியின் பங்குகள் மதிப்பு ரூ295 ஆக இருந்தது. அதன் பின்னர் சட்டென ரூ176.75க்கு குறைந்தது. பங்கு வர்த்தகத்தின் முடிவில் ரூ261.65 ஆக இருந்தது. இது 11.17 விழுக்காடு சரிவாகும்.
இதேபோல் சன் குழுமத்தின் மற்றொரு நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பங்குகளும் சரிவை சந்தித்தது. இன்றைய பங்குவர்த்தகத்தின் தொடக்கத்தில் ரூ28.85 ஆக இருந்த ஸ்பைஸ்ஜெட்டின் மதிப்பு சட்டென ரூ24.50க்கு குறைந்தது. பங்கு வர்த்தகத்தின் முடிவில் ரூ25.20 ஆக இருந்தது. இது 10.64 விழுக்காடு சரிவாகும்.


Click it and Unblock the Notifications