ஓ.என்.ஜி.சியின் காலாண்டு நிகர லாபம் 48 விழுக்காடு

நடப்பு நிதி ஆண்டின் காலாண்டு நிதி நிலை குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 2012-2013 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் பெற்றுள்ள நிகர லாபம் ரூ. 6,077.70 கோடி. கடந்த நிதி ஆண்டில் ஏப்ரல்-ஜூன் கால அளவில் நிறுவனம் பெற்ற நிகர லாபம் ரூ. 4,094.90 கோடியாக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டு அளவில் ஓ.என்.ஜி.சி.யின் லாப வளர்ச்சி 48 விழுக்காடாகும். இந்தக் காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் ரூ. 21 ஆயிரத்து 216.24 கோடியாக உள்ளது. சென்ற நிதி ஆண்டில் இதே கால அளவில் ஓ.என்.ஜி.சி. பெற்ற மொத்த வருவாய் ரூ. 17 ஆயிரத்து 128.89 கோடி என்று அதில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications