திருச்சி: டெல்டா பகுதிகளான திருச்சி, தஞ்சை, நாகை ஆகிய மாவட்டங்களில் அரிசி விலை திடீரென உயர்ந்துள்ளது. இதனால் கடைகளில் அரிசி வாங்க செல்லும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைகின்றனர்.

பொன்னி அரிசி, கர்நாடக அரிசி மற்றும் பச்சரிசி ஆகியவை 25 கிலோ மூட்டை, கடந்த மாதத்தை விட தற்போது ரூ.100 அதிகமாக விற்கப்படுகிறது. இதேபோல ஐ.ஆர், பி.பி.டி. வகை அரிசியும், பச்சிரியும் விலை உயர்வை சந்தித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் சத்தமின்றி விலை உயர்ந்துள்ளது. இதனால் அரிசி கடைககளுக்கு சென்று அரிசி வாங்கும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.
இது குறித்து மக்கள் சிலரிடம் கேட்ட போது,
அரிசி விலை திடீரென உயர்ந்துள்ளது. இது குறித்து வியாரிகளிடம் கேட்டால், டீசல் விலை, லாரி வாடகை உயர்ந்துவிட்டது. அதனால் அரிசி விலையையும் உயர்ந்துள்ளதாக கூறுகின்றனர் என்று புலம்புகின்றனர்.
டெல்டா மாவட்டங்களை போலவே, மதுரை, சேலம், கோவை, நெல்லை ஆகிய மாவட்டங்களிலும், தலைநகர் சென்னையிலும் அரிசி விலை உயர வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த திடீர் விலை உயர்வு குறித்து தமிழக அரசு கவனத்திறக்கு அரசு உயர் அதிகாரிகள் கொண்டு சென்றார்களா என்பது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications