ரஜத் குப்தா பணிபுரிந்த கோல்ட்மேன் சேக்ஸ் என்ற நிறுவனத்தின் வர்த்தக விவரங்களை ஈழத் தமிழரான ராஜரத்தினத்துக்கு அளித்தார் என்பது ரஜத் குப்தா மீதான புகார்.
இந்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் ரஜத் குப்தா குற்றவாளி என மன்ஹட்டன் நீதிமன்றம் அறிவித்திருந்தது. ரஜத் குப்தாவிற்கு குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு ஐ,நா சபையின் முன்னாள் செயலாளர் கோஃபி அன்னான், பில்கேட்ஸ் உள்ளிட்ட 400 பேர் நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தனர். இந்நிலையில் அவருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் 5 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ஈழத் தமிழரான ராஜரத்னத்துக்கு அமெரிக்க நீதிமன்றம் ஏற்கனவே 11 ஆண்டு சிறைத் தண்டனை அளித்திருக்கிறது.