சென்னை- மதுரை 'குளு குளு' துரந்தோ ரயில் சேவை இந்த மாதம் துவக்கம்

Posted By:
Subscribe to GoodReturns Tamil

சென்னை- மதுரை 'குளு குளு' துரந்தோ ரயில் சேவை இந்த மாதம் துவக்கம்
டெல்லி: சென்னையில் இருந்து மதுரை மற்றும் திருவனந்தபுரத்திற்கு ஏசி வசதியுடன் கூடிய துரந்தோ ரயில் சேவை இம்மாதம் துவங்கும் என்று ரயில்வேத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 4 புதிய ரயில்கள், நடப்பு நிதியாண்டில் அறிவிக்கப்பட்ட 12 புதிய ரயில்கள் என மொத்தம் 16 புதிய ரயில்களின் சேவை இன்னும் 10 நாட்களுக்குள் துவங்கும். கடந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சென்னை-மதுரை ஏசி வசதி கொண்ட துரந்தோ ரயில் (எண்-22205/22206), சென்னை-திருவனந்தபுரம் ஏசி வசதி கொண்ட துரந்தோ ரயில் (22207/22208) ஆகியவற்றின் சேவை இம்மாதம் துவங்கும். வாரம் இரு முறை இயக்கப்படும் இந்த ரயில்களின் துவக்கவிழா சம்பந்தப்பட்ட ரயில் நிலையங்களில் நடக்கும்

இது தவிர வாராந்திர ரயிலான விசாகப்பட்டினம்-சென்னை எக்ஸ்பிரஸ்(எண் 22870/22869) விரைவில் இயங்கத் துவங்கும். கொல்லம்-நாகர்கோவில் (எண்-66304/66305) மின்சார ரயிலின் சேவையும் விரைவில் துவங்கும். இந்த ரயில் வாரத்திற்கு 6 நாட்கள் இயக்கப்படும். ரயில் கட்டணத்தை நிர்ணயிக்க ரயில் கட்டண ஆணையம் ஒன்று அமைக்கப்படும். இப்போதைக்கு கட்டண உயர்வு இருக்காது என்று என்னால் உறுதியாகக் கூற முடியாது. எவ்வளவு விரைவில் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு வருகிறது என்பதை பார்க்கத் தானே போகிறீர்கள் என்றார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: madurai, மதுரை
English summary

Chennai-Madurai Duranto express service from this month: Bansal | சென்னை-மதுரை 'குளு குளு' துரந்தோ ரயில் சேவை இந்த மாதம் துவக்கம்

Railway Minister Pawan Kumar Bansal told that Chennai-Madurai and Chennai-Trivandrum Duranto express trains will start its service within this month.
Story first published: Thursday, November 22, 2012, 14:22 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns