
கூடங்குளம் அணுமின் நிலைய அணு உலையில் யுரேனியம் நிரப்பும் பணிகள் நிறைவடைந்துவிட்டன. இதனால் இம்மாத இறுதியில் மின் உற்பத்தி தொடங்கும் என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருந்தார்.
அதே நேரத்தில் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டமும் தீவிரப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்றத்தில் அணுக் கழிவை எங்கு கொட்டுவது என்ற விவகாரத்தில் மத்திய அரசு வசமாக சிக்கியிருக்கிறது. இந்நிலையில் தற்போது அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் கூடங்குளம் அணு உலையை மேற்பார்வையிட்டு வருகிறது.
இதனால் இந்த மாதத்தின் இறுதியில் கூடங்குளத்தில் மின் உற்பத்தி தொடங்காது என்றே கூறப்பட்டு வருகிறது. அனேகமாக ஜனவரி மாதத்தில் மின் உற்பத்தி தொடங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பிக்கத்தின் புஷ்பராயனும், ஜனவரி மாதத்தில்தான் கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கும் என்று தகவல்கள் கிடைத்திருக்கின்றன என்றார்.
இதற்கு முன்பும் இப்படித்தான் 15 நாட்களில் மின் உற்பத்தி தொடங்கும் என்று கூறிக்கொண்டே இருந்தார் அமைச்சர் நாராயணசாமி என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications