சிங்கப்பூர்-மதுரை விமான சேவை நிராகரிப்பால் தென் மாவட்ட வளர்ச்சி பாதிக்கும்: தொழில் வர்த்தக சங்கம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிங்கப்பூர்-மதுரை விமான சேவை நிராகரிப்பால் தென் மாவட்ட வளர்ச்சி பாதிக்கும்: தொழில் வர்த்தக சங்கம்
மதுரை: சிங்கப்பூர்-மதுரை விமான சேவையை மத்திய அரசு நிராகரித்து இருப்பது தென்மாவட்ட வளர்ச்சியில் அக்கறை இல்லாததையே காட்டுகிறதுஎன தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பாகசங்கத்தலைவர் என்.ஜெகதீசன் மற்றும் முதுநிலைத் தலைவர் எஸ்.ரத்தினவேல் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:

இந்தியாவுக்கும்,சிங்க்பூர்,மலேசியா, ஐக்கிய அரபு குடியரசு மற்றும் வளைகுடா நாடுகளுக்கு்ம இடையேயான விமான நிலைய இருவழி ஒப்பந்தங்களில் மதுரை விமானநிலையத்தை சேர்த்து அந்தந்த நாடுகளில் இருந்து மதுரைக்கு நேரடி விமான சேவையை துவக்க வாய்ப்பு அளிக்க வேண்டும் என பலமுறை மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சரிடம் தொடர்ந்து வலியறுத்தி வந்துள்ளோம்.

கடந்த பிப்ரவரி மாதம் புதுதில்லியில் சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜீத்சிங்கை, சங்கபிரதிநிதிகள் நேரில் சந்தித்து பேசிய போது இந்த ஒப்பந்தங்கள் மறு ஆய்வு செய்கிற போது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்த மாதம் முதல்வாரத்தில் சிங்கப்பூருடன் உள்ள ஒப்பநதம் மறு ஆய்வு செயய்ப்பட இருக்கிறது என்பதை அறிந்து உடனடியாக மத்திய அமைச்சர் அஜீத்சிங்கை தொடர்பு கொண்டு மதுரை விமானநிலையத்தை ஒப்பந்தத்தில் சேர்த்து விடுங்கள் என நினைவு படுத்தினோம்.

ஆனால் சிங்கப்பூரில் நடந்த கூட்டத்தில் சிங்கப்பூர் அரசே மதுரைக்கு நேரடி விமான சேவை துவக்க வேண்டும் என வலியுறுத்தியும் கூட மத்திய அமைச்சர் அதை ஏற்றுக் கொள்ளாதது, 9 மாவட்டங்கள் அடங்கிய தென் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லாததையே காட்டுகிறது' என அதில் கூறியுள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

flight transportation cuts between Madurai and Singapore will affect southern district | சிங்கப்பூர்-மதுரை விமான சேவை நிராகரிப்பால் தென் மாவட்ட வளர்ச்சி பாதிக்கும்: தொழில் வர்த்தக சங்கம்

The Indian government cancelled the flight transportation between Madurai and Singapore. Tamilnadu industrial and trade association said that This action of Indian government will affect the development of southern districts of Tamilnadu.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?