ஆப்பிள் வரி கட்டவில்லையா? சிஇஒ பதில்!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆப்பிள் வரி கட்டவில்லையா? சிஇஒ பதில்!!!
சென்னை: உலக அளவில் மிகப் பெரிய அளவில் தனது வர்த்தகத்தை செயல்படுத்தி வரும் அமெரிக்க நிறுவனமான ஆப்பிள், தனது நாட்டிற்கு சேரவேண்டிய வரியைக் கட்டவில்லை என்று குற்றச்சாட்டு தற்போது எழுந்திருக்கிறது.

எல்லை தாண்டிய உலகளாவிய வர்த்தகத்தில் ஈடுபடும் மிகப் பெரிய பல அமெரிக்க நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு முறையாக வரி செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டை கடந்த சில ஆண்டுகளாகவே அமெரிக்காவின் அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்து வருகிறார்.

குறிப்பாக அமெரிக்காவைக் கடந்து வெளிநாடுகளுக்கு அவுட்சோர்சிங் செய்து அதன் மூலம் வரும் வருமானத்திற்கு அமெரிக்க நிறுவனங்கள் வரி செலுத்துவதில்லை என்பதை ஒபாமா உன்னிப்பாகக் கவனித்து வருகிறார். இது சம்பந்தமாக அமெரிக்க செனட் உறுப்பினர்களான கார்ல் லெவின் மற்றும் ஜான் மெக்கெய்ன் போன்றோர் கேள்வி எழுப்பியதாக வெள்ளை மாளிகையின் பத்திரிக்கை செயலாளர் ஜெய கார்னே பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது, தங்கள் நிறுவனத்திற்கு எதிராக செனட் உறுப்பினர்களான லெவின் மற்றும் மெக்கேயன் ஆகியோர் எழுப்பியிருக்கும் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டை, ஆப்பிளின் சிஇஒ, அமெரிக்க காங்கிரஸ் கமிட்டி முன்பு மறுத்ததாக அவர் தெரிவித்திருக்கிறார்.

மேலும் அவர் தெரிவிக்கும் போது, லெவின் மற்றும் மெக்கேயன் ஆகியோர் மிகச் சிறப்பான பணிகளைச் செய்திருக்கின்றனர். இந்த குற்றச்சாட்டுகளை அவர்கள் முன்வைத்ததன் மூலம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கின்றனர். இதன் மூலம் வரி ஏய்ப்பைத் தடுக்க முடியும் என்று தெரிவித்திருக்கிறார்.

அதுபோல் அமெரிக்காவில் தொழில்களைத் தொடங்க நினைக்கும் நிறுவனங்களுக்கு எதிராக, ஆனால் அமெரிக்காவைத் தவிர்த்த வெளிநாடுகளுக்கு அவுட்சோர்ஸிங் செய்து வரும் நிறுவனங்களுக்கு சார்பாக இருக்கும் வரிக் கோட்பாடுகளை சில ஆண்டுகளாக அமெரிக்க அதிபர் கடுமையாக விமர்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இறுதியாக இந்த பிரச்சினைக்கு முடிவு காண்பதற்காக, அவுட்சோர்ஸிங் செய்யும் நிறுவனங்கள், வெளிநாடுகளில் பெறும் வருமானங்களுக்கு வரி செலுத்தும் வகையில் புதிய பரிந்துரைகளை ஒபாமா கொண்டு வந்திருப்பதாகவும் கார்னய் தெரிவித்திருக்கிறார்.

தற்போது தாம் செனட் உறுப்பினர்களான மெக்கேயன் மற்றும் லெவின் ஆகியோரோடு இணைந்து புதிய வரிவிதிப்புக் கொள்கையை கொண்டு வருவதில் தீவிரமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறது. அதன் மூலம் அமெரிக்காவில் இன்னும் ஏராளமான அளவில் புதிய புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு வெகுமதி அளிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

புதிய வரிக் கொள்கைகளை மிக விரைவில் அமல்படுத்துவதில் அமெரிக்க அதிபர் மிகவும் முனைப்புடன் இருப்பதாக கார்னய் தெரிவித்திருக்கிறார். ஏனெனில் பழைய வரிக் கொள்கைகள் அமெரிக்காவைக் கடந்து அவுட்சோர்ஸிங் செய்யும் நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கின்றன என்று ஒபாமா நினப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். புதிய வரிக் கொள்கைகள் மூலம் அமெரிக்காவில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் அமெரிக்க நிறுவனங்கள் கடுமையாக முயற்சிக்கும் என்று ஒபாமா நம்புவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையில் ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஒ டிம் குக், ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிரான வரி ஏய்ப்பு குற்றச்சாட்டை மிகவும் உறுதியாக மறுத்திருக்கிறார்.

"நாங்கள் செலுத்த ஒவ்வொரு டாலர் வரியையும் முறையாக உரிய நேரத்தில் செலுத்தி இருக்கிறோம். நாங்கள் சட்டத்திற்கு மட்டும் கீழ்படிவதில்லை மாறாக சட்டத்தின் நோக்கத்திற்கும் கீழ்படிகிறோம்!!!. அதுபோல் நாங்கள் வரி கட்டுவதிலிருந்து தப்பித்துவிடலாம் என்று நினைப்பதில்லை" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

US raises concern over American firms evading taxes - ஆப்பிள் வரி கட்டவில்லையா?

Apple is evading US taxes through overseas shell companies, the White House said this raises the broader question of American companies that ship profits and jobs overseas, a issues often raised by US President Barack Obama in the last few years.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X