ஜஸ்ட் டயல் ஐபிஓ: விண்ணப்பிக்க வேண்டுமா?

Posted By: Super
Subscribe to GoodReturns Tamil

இந்திய தொலைபேசி தேடல் ஜாம்பவானான ஜஸ்ட் டயல்(Just Dial) நிறுவனம், மிகப்பெரிய அளவாக 950 கோடி ரூபாய்க்கு பங்குகளை வெளியிட உள்ளது. இந்த ஐபிஓ வருகிற மே மாதம் 20ம் தேதி தொடங்கி 22ம் தேதி முடிவடைகிறது. ஐபிஓ சந்தையில் நிழவிய நீண்ட வறட்சிக்கு பின்னர் வரும் இந்த வெளியீடு, பங்கு சந்தையில் மீண்டும் வசந்தத்தை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜஸ்ட் டயல் ஐபிஓ: விண்ணப்பிக்க வேண்டுமா?

நீங்கள் விண்ணப்பிக்க வேண்டுமா?

முதலீட்டாளர்கள் ஒரு நேர்மறையான எண்ணத்துடன் இந்த ஐபிஓ வை எதிர் நோக்கலாம். என்பதற்குரிய காரணங்கள்:

வலிமையான சந்தை இருப்பு: ஜஸ்ட் டயல் சேவைகள் எளிதான இலவச விசாரணையை மையங்கள் கொண்டே நடப்பதால், குரல் தேடல் களத்தில் ஒரு வலுவான மற்றும் முன்னிலையில் உள்ள நிறுவனமாக கருதப்படுகிறது. இந்த நிறுவனமே நம் நாட்டில் முதல் முறையாக தொலைபேசியில் தேடல் சேவையை தொடங்கியது, எனவே இந்த வணிக பிரிவில் முதன்மையான நிறுவனமாக விளங்குகிறது.

மிகப் பெரிய விரிவாக்கத் திட்டம்: இந் நிறுவனம் புதிய பகுதிகளில் துணிச்சலுடன் அதன் வணிகத்தை விரிவாக்க திட்டமிட்டுள்ளது. இந் நிறுவனத்தின் அனுபவம் மற்றும் வலிமை இந்த திட்டத்திற்கு கண்டிப்பாக உதவி புரியும்.

அசாதாரணமான மதிப்பீடு: ஜஸ்ட் டயல் நிறுவனம் விளம்பரதாரர்கள் மூலம் மிக அதிக வருவாய் பெறுகிறது. அந்த விளம்பரக் கட்டணமும் முன் கூட்டியே பெறப்படுகிறது. எனவே, மூலதனம் சுழற்சி கிட்டத்தட்ட எதிர்மறை ஆகும். இந் நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை அதன் அதிகப்படியான ரொக்க கையிருப்பு மற்றும் கடன் இல்லா நிலைமை போன்றவற்றால் மிகவும் கவர்ச்சிகரமாக காணப்படுகிறது. இந்நிறுவனம் இதன் ஒரு பகுதி பங்குகளை விற்று மூலதனத்தை அதிகரிக்க திட்டமிடுகிறது. அந்த நிதியை எதிர்காலத்தில் நிறுவனத்தின் விரிவாக்கத்திற்கு பயன் படுத்த திட்டமிட்டுள்ளது. அத்தகைய எதிர்கால விரிவாக்கம் இந்த கம்பெனியின் எதிர்கால நிதி நிலையை மேலும் அதிகப்படுத்தும்.

இதைத் தவிர சில குறைகளும் ஜஸ்ட் டயல் நிறுவனத்தில் உள்ளன. இந்த நிறுவனத்தின் அதிகபட்ச வணிக வருவாய் கூகுள் நிறுவனத்தின் தேடல் பொறி மூலம் வருகிறது. தற்போது, கூகுள் நிறுவனம் தொலைபேசி வாயிலான தேடல் சேவையை தருவதில்லை. ஆனால், எதிர்காலத்தில் இது போன்ற சேவைகளில் அடியெடுத்து வைக்க கூகுள் திட்டமிட்டு இருந்தால், அது ஜஸ்ட் டயல் நிறுவனத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உருவெடுக்கும். முதலீட்டை தகுந்த முறையில் பயன் படுத்துவது முக்கியம் தான் ஆனால், வெவ்வேறு வணிகப்பொருட்களில் முதலீடு செய்து ஆபத்தை குறைப்பது அதைவிடமுக்கியம்.

இறுதியாக: முக்கியமாக ஜஸ்ட் டயலின் வணிகம், நல்ல மதிப்பீடு மற்றும் மிகப் பெரிய விரிவாக்க திட்டத்தை வைத்து பார்க்கும் பொழுது, முதலீட்டாளர்கள் இந்த ஐபிஓ வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுக்கு பங்குகள் கிடைக்கும் வாய்ப்பை அதிகப்படுத்த உங்களுடைய உறவினர் மற்றும் மனைவியின் டீமேட் கணக்குகளில் இருந்தும் விண்ணப்பிக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Just Dial IPO: Should you subscribe? | ஜஸ்ட் டயல் ஐபிஓ: விண்ணப்பிக்க வேண்டுமா?

The Indian telephonic search giant is sizzling to go ahead with its Rs 950 Cr. IPO offer opening on 20th May 2013 and ending on 22nd May 2013. After a long drought in the IPO market, this issue is expected to bring in some charm back into the primary market.
Story first published: Tuesday, May 28, 2013, 16:59 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns