நெய்வேலி லிக்னைட் பங்கு விற்பனை-முடிவை கிடப்பில் போட்டது மத்திய அமைச்சரவை

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுமார் 6,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் நோக்கில், தமிழ்நாட்டில் அமைந்துள்ள நிலக்கரி சுரங்கத் தொழில் ஜாம்பவானாகிய நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில்(NLC) உள்ள சுமார் 5%பங்குகளை விற்பது குறித்து உருவாக்கப்பட்ட தீர்மானத்தின் மீதான முடிவை மத்திய அமைச்சரவை ஒத்தி வைத்துள்ளது.

தமிழ்நாட்டின் முதலமைச்சரான ஜெயலலிதா அவர்கள் கடந்த மாதம் பிரதமர் மன்மோஹன் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில், ஒருங்கிணைக்கப்பட்ட நிலக்கரி சுரங்கம் மற்றும் மின் உற்பத்தி நிறுவனமான, இதில் முதலீடு செய்யப்பட்டுள்ள பங்குகளை விற்பது தொடர்பான தனது ஆட்சேபணையைத் தெரிவித்துள்ளார்.

காபினெட் கமிட்டி ஆன் எகனாமிக் அஃபயர்ஸ் (சிசிஇஏ) -இன் பொதுக்கூட்டத்துக்குப் பின் மீடியாக்களிடம் பேசிய நிதியமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள், "தமிழ்நாட்டின் முதலமைச்சரிடமிருந்து பிரதமருக்கு ஒரு கடிதம் வந்துள்ளது. பிரதமர் இக்கடிதத்துக்கு முதலில் பதில் எழுதுவது பற்றி ஆலோசிப்பார் என்று நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

அரசு தனக்குச் சொந்தமான சுமார் 7.8 கோடிக்கும் அதிகமான பங்குகளை விற்பதன் மூலம் சுமார் 5,000 கோடியிலிருந்து 6,000 கோடி வரை வருமானம் ஈட்ட திட்டமிட்டுள்ளது.

தற்போது அரசு, நெய்வேலி லிக்னைட்டுக்குச் சொந்தமான சுமார் 93.56 சதவீத பங்குகளை, தன் வசம் வைத்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Cabinet puts off decision on Neyveli Lignite stake sale

The cabinet yesterday postponed the decision on proposal to divest 5 per cent stake in the Tamil Nadu based miner Neyveli Lignite Corp to raise up to Rs 6,000 crore through an offer for sale.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X