வங்கிப் பங்குகளின் உண்மை நிலை!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வங்கிப் பங்குகளின் உண்மை நிலை!!!
சென்னை: ரூபாய் மதிப்பின் சரிவை தடுக்கும் பொருட்டு லிக்விடிட்டியை இறுக்குவதற்கான நடவடிக்கைகளை ஆர்பிஐ அறிவித்ததற்குப் பின், வங்கிப் பங்குகள் பெரும் ஆட்டம் கண்டுள்ளன.

ரூபாய் மதிப்பின் சரிவு மற்றும் பாண்டுகளின் ஈட்டங்களின் உயர்வு போன்ற காரணங்களினால் இந்த வாரம் பெரும்பாலான வங்கிப் பங்குகள் தங்களின் 52-வார தாழ்வு நிலையை அடைந்தது. பாண்ட் ஈட்டங்களின் அதிகரிப்பு, பாண்ட்கள் குறைவான விலைகளில் விற்பதையே காட்டுகிறது. இது வங்கிகளின் லாப வாய்ப்பின் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடியதாகும்.

 

ரூபாய் மதிப்பில் வெள்ளிக்கிழமை இருந்த திட்டவட்டமான மதிப்பேற்றம், ஒரு குறியீடாக இருக்கும் பட்சத்தில், ரூபாயின் மதிப்பு உயர்ந்து, ஒரு நிலையான இடத்தை அடையும். வெள்ளிக்கிழமையன்று, பாண்ட்கள் 2009 ஆம் ஆண்டிற்குப் பின் மிகப்பெரும் வாராந்திர லாபங்களை பதிவு செய்துள்ளதாகரீயுடர்ஸ் தகவலறிக்கை தெரிவிக்கிறது.

 

லிக்விடிட்டியை இறுக்குவதற்காக சமீபத்தில் ஆர்பிஐ எடுத்த நடவடிக்கைகள் வங்கிப் பங்குகளை கடுமையாக பாதித்தது, ரூபாய் மதிப்பு வலுவான நிலையை எட்டும் பட்சத்தில் இத்தகைய நடவடிக்கைகளை ஆர்பிஐ விலக்கிக் கொள்ளும் சாத்தியக்கூறு உள்ளது. அவ்வாறு வங்கி கடுமையான நடவடிக்கைகளை விலக்கிக்கொள்ளும் பட்சத்தில் வங்கி பங்குகள் புத்துணர்வு பெறும்.

தற்போது வங்கிப் பங்குகள் கவர்ச்சியாக மதிப்பிடப்பட்டுள்ளன. இதற்கு யெஸ் வங்கியை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். இது இந்தியாவின் நான்காவது பெரிய தனியார் வங்கி. அதன் ஒரு வருட முன்னோக்கிய வருவாயைக் காட்டிலும் சுமார் 6 மடங்கு மட்டுமே வர்த்தகம் செய்கிறது.

இதன் பங்குகள் மூன்று மாதங்களுக்கு முன்பிருந்த அதன் 52-வார உயர்வு நிலையான 547 ரூபாயிலிருந்து தற்போதைய அளவான 257 ரூபாய்க்கு மூன்றே மாதங்களில் வீழ்ச்சியடைந்துள்ளது.

பிஎஸ்யூ வங்கிகள் மோசமான பாதிப்புக்குள்ளாகி, அவற்றின் பதிவு செய்யப்பட்ட மதிப்புகளைக் காட்டிலும் குறைவான அளவுகளைக் கொண்டுள்ளன. பெரும்பாலான வங்கிகளில், 0.5 மடங்கிற்கும் குறைவான மதிப்பில் புக் செய்ய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. என்பிஏ பிரச்சனைகளும் உள்ளன. ஆனால், பொருளாதாரம் சீரடைய ஆரம்பித்து விட்டால், இவை அனைத்தும் கட்டாயம் மேன்மையடையும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Why banking stocks could be a good contrarian bet?

Banking stocks have been battered after the RBI announced liquidity tightening measures to prevent the rupee from sliding.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X