பங்கு சந்தையில் புதிதாய் களம் இறங்கிய நிறுவனங்களின் பரிதாப நிலை!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த ஒரு வருட காலத்தில் பங்கு சந்தையில் புதிதாய் களம் இறங்கிய நிறுவனங்கள் மிக குறைவான இனிஷியல் பப்ளிக் ஆஃபரிங் (ஐபிஓ) காணபட்ட போதிலும், இவற்றில் பெரும்பாலானவை முதலீட்டாளர்களுக்கு இழப்புகளையே ஈட்டித்தந்துள்ளன. சிறப்பாக செயல்பட்ட மற்றும் செயல்பாடு குன்றிய சில ஐபிஓகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

கேர் (CARE)

கேர் (CARE)

கேர் நிறுவனம் ஒரு கிரெடிட்-ரேட்டிங் கம்பனியாகும், இது தனது ஐபிஓவை டிசம்பர் 2012 இல் வெளியிட்டது. குறைந்தபட்சம் 20 பங்குகள் மற்றும் குறைந்த பட்ச வழங்கல் விலை ரூ.700 என்ற இந்த ஐபிஓகள், ரூ.750 என்ற விலையில் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிறுவன பங்குகளின் குளோசிங் விலை ரூ.560ஆக இருந்ததால், இதன் வழங்கல் விலையில் -25.33% வீழ்ச்சி காணப்பட்டது.

பிசி ஜுவல்லர்

பிசி ஜுவல்லர்

பிசி ஜுவல்லர்ஸின் ஐபிஓவும், கேர் ஐபிஓ வெளியிடப்பட்ட சமயத்திலே சப்ஸ்கிரிப்ஷனுக்காக திறந்து வைக்கப்பட்டது. இது ரூ.135 விலையில் வழங்கப்பட்டது, இறுதி வணிகத்தின் போது இந்த பங்கின் விலை ரூ.103.85 ஆக சரிந்தது. ஆகவே, இதுவரை இந்த பங்குகள், முதலீட்டாளர்களுக்கு -23.07% எதிர்மறை ஈட்டத்தையே வழங்கியுள்ளது.

பாரதி இன்ஃப்ராடெல்

பாரதி இன்ஃப்ராடெல்

சில்லரை முதலீட்டாளர்கள் தவிர, ஏனைய முதலீட்டாளர்களுக்கு ரூ.220 என்ற விலையில் இந்த ஐபிஓ வழங்கப்பட்டது. பங்கு சந்தையில், பட்டியலிடப்பட்ட தேதியில், 9% தள்ளுபடியில் இந்த பங்கு பட்டியலிடப்பட்டது. இந்த பங்கின் குளோசிங் விலையாக ரூ.160.10 ஆக இருந்தது. ஆகவே இதுவரை இந்த ஐபிஓ முதலீடு -27.23% எதிர்மறை ஈட்டம் பெற்றுள்ளது.

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ்

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ்

ரெப்கோ வங்கியின் துணை நிறுவனமான ரெப்கோ ஹோம் பைனான்ஸ், டையர்(வரிசை) II மற்றும் டையர் III ஆகிய நகங்களில் வீட்டுகடன் மற்றும் சொத்து கடன்கள் வழங்குவதில் ஈடுபட்டுள்ளது. இது மார்ச் 2013இல் தனது ஐபிஓ சந்தையில் வெளியிட்டது. ரூ.10 முகவிலையுடன், பிரிமியத் தொகை ரூ.162 என்ற அடிப்டையில் இந்த பங்குகள் முதலீட்டாளர்களுக்கு வழங்கபட்டது. இந்த பங்கு 1ம் தேதி ஏப்ரல் 2013இல் பங்குசந்தையில் பட்டியலிடப்பட்டது. இதன் குளோசிங் விலை ரூ.241.15 ஆக இருந்தது. ஆகவே முந்தையநாள் வணிக முடிவு வரை, முதலீட்டாளர்கள் இந்த பங்குகள் மூலம் 40.2% வருவாய் ஈட்டியுள்ளனர்.

ஜிசிஎம் செக்யூரிடிஸ்

ஜிசிஎம் செக்யூரிடிஸ்

பங்கு வணிக நடவடிக்கையில், இந்த நிறுவனம் தனது பங்குகளை ரூ.20 என்ற விலையில் சப்ஸ்கிரைபர்களுக்கு வழங்கியது. இந்த பங்கு, ஏப்ரல் 5, 2013 இல் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டதிலிருந்து, அதிகளவில் லாபம் ஈட்டியுள்ளது, இதன் முந்தைய நாள் குளோசிங் விலை ரூ.139 ஆக இருந்தது. ஆகவே ஜிசிஎம் செக்யூரிடிஸ் பங்குகள் இதுவரை 595% என்ற விகிதத்தில் வருவாய் ஈட்டியுள்ளன.

ஜஸ்ட் டயல் (Just Dial)

ஜஸ்ட் டயல் (Just Dial)

தேடல் சேவை வழங்குநரான ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் ஐபிஓ, மே 20, 2013 இல் சப்ஸ்கிரிப்ஷனுக்காக திறந்துவிடப்பட்டது, கடந்த 4 மாத காலத்தில், 48.12% குறிப்பிடத்தக்க வருவாய் ஈட்டியுள்ளது. இந்த நிறுவனத்தின் பங்குகள் ரூ.530 விலையில் வழங்கப்பட்டது, கடந்த வணிக முடிவின் போது இதன் விலை ரூ.785.05 ஆக இருந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

A look at the performance of IPOs issued in last 1 year

The last one year has seen far fewer Initial Public Offerings (IPOs). As is the case in the past, most of the IPOs have left investors with losses.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X