சிறப்பு முதலீட்டு முறையில் இந்தியாவுக்கு வந்த 10.1 பில்லியன் டாலர் அந்நிய முதலீடு!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: அந்நிய முதலீட்டை ஈர்க்கும் பொருட்டாக கடந்த மாதம் வெளியிடப்பட்ட இரு சிறப்பு திட்டங்களின் கீழ் 10.1 பில்லியன் டாலர்களை பெற்றுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

 

"வெளிநாடு வாழ் இந்தியர்களின் வெளிநாட்டு நிதி (வங்கி) இருப்புகள் மற்றும் வெளிநாடுகளின் அந்நிய பண பறிமாற்றம் ஆகியவற்றின் சிறப்பு சலுகை முறையில் இந்திய ரிசர்வ் வங்கி 10.1 பில்லியன் டாலர்களை பெற்றுள்ளது" என்று ஒரு குறிப்பில் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. மேலும் இத்திட்டம் நவம்பர் 30 வரையில் நீடித்திருக்கும்.

 

2012-13-ம் ஆண்டின் மொத்த தேசிய உற்பத்தியில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 4.8 சதவீதமாக உயாந்து நின்று, இது வரலாற்றிலேயே மிக மோசமான சரிவு என்பது குறிப்பிடதக்கது. ரூபாயின் மதிப்பு வீழ்ந்து கொண்டிருந்ததை தடுத்து நிறுத்தும் பொருட்டாக இந்திய ரிசர்வ் வங்கி பிரத்யோகமான சில நடவடிக்கைகளை எடுத்தது.

சிறப்பு முதலீட்டு முறையில் இந்தியாவுக்கு வந்த 10.1 பில்லியன் டாலர் அந்நிய முதலீடு!!

செப்டம்பர் 4-ம் நாள், திரு.ரகுராம் ராஜன், இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவிக்கு வந்தவுடன், வெளிநாடு வாழ் இந்தியர்களின் நிதிகளை ஈர்க்கும் வகையில் இந்த மாற்று முறை வசதியை அமைத்தார்.

இந்த வசதியின் கீழ், ஆண்டுக்கு 3.5 சதவீதம் என்ற அளவில் குறைந்தது 3 ஆண்டுகளுக்குள் சேகரித்து வைத்திருக்கும் புதிய FCN(B) டாலர் நிதிகளை வங்கிகள் மாற்றுவதற்கு அனுமதிக்கப்பட்டன,

மேலும், இந்திய ரிசர்வ் வங்கியின் விதிகளை தளர்த்தியதுடன், அவற்றின் முதல் சுற்று வெளிநாட்டு மூலதனத்தை 100 சதவீதத்திற்கு உயர்த்த முடிவு செய்தார்.

ஆகஸ்ட் 28-ம் நாளன்று யாரும் எதிர்பாராத வகையில் ஒரு டாலருக்கு ரூ.68.85-ஆக ரூபாயின் மதிப்பு குறைந்திருந்தாலும், அதே வேகத்தில் வேகமாக மீண்டு வந்தது. இப்பொழுது ரூ.61.58 டாலராக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI receives $10.1 b under forex swap window

The Reserve Bank of India (RBI) today said it has received $10.1 billion under two schemes which were announced last month to attract foreign funds.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X