உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் 'வருமான வரி' மிகவும் குறைவு!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: "வருமான வரி" இந்த வார்த்தையை கேட்டாலே நமக்கு கடுப்பாக இருக்கும், என்ன பாஸ் சரி தானே... இத்தகைய மனோபாவத்திற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்து பார்த்தோம், உண்மையான காரணம் கிடைத்தது. மத்திய அரசு அதிகமான வருமான வரி வசூல் செய்வதாக மக்கள் கூறுகின்றனர்.

ஆனால் இது உண்மையல்ல, மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்திய அரசு குறைந்த அளவான வரியை மட்டுமே வசூல் செய்கிறது. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா, தொடர்ந்து படியுங்கள் பல ஆச்சரியங்கள் உள்ளது.

வரி இல்லாத நாடுகள்

வரி இல்லாத நாடுகள்

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் குவைத் போன்ற நாடுகள் தனது குடிமக்களிடம் வரி சிறிதும் பெறப்படுவதில்லை. கேட்டகவே இனிமையாக இருக்கிறது!!!

ஆனால் ஸ்காண்டிநேவிய நாடுகளில் (Scandinavian nations) உலகிலேயே அதிகப்படியான வருமான வரி வசூல் செய்யபடுவது குறிப்பிடதக்கது.

 

இந்தியா!!

இந்தியா!!

நம் இந்தியாவில் அதிக பட்சமான வரி 30 சதவிதம் தான். உலக நாடுகளை ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு.

அரூபா (Aruba)

அரூபா (Aruba)

உலகலவில் அதிக வருமான வரி வசூல் செய்யும் நாடுகளில் முதல் இடம் பிடித்திருப்பது அரூபா நாடு தான். இங்கு தனிமனிதனுக்கு வருமான வரி 58.95 சதவிதமும், தருமனம் ஆனவர்களுக்கு 55.85 சதவிதமும் வசூல் செய்யப்படுகிறது.

ஸ்வீடன்

ஸ்வீடன்

ஸ்வீடன் நாடு இப்பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்நாட்டு குடிமக்களுக்கு 56.6 சதவிதம் வரி வசூல் செய்யப்படுகிறது.

டென்மார்க்

டென்மார்க்

டென்மார்கில் முன்பு 62.3 சதவித வரி வசூல் செய்து வந்தது, நடப்பு நிதியாடு துவக்கத்தில் 55.56 சதவிதமாக குறைத்து கொண்டது. டென்மார்க் இதில் முன்றாம் இடத்தை பிடித்திருக்கிறது.

நெதர்லாந்து

நெதர்லாந்து

நெதர்லாந்து நாட்டில் அதிகபட்சமாக 52 சதவிதம் வரி வசூல் செய்யப்படுகிறது.

ஸ்பெயின்

ஸ்பெயின்

ஸ்பெயின் நாட்டில் 52 சதவிதம் வரி வசூல் செய்யப்படுகிறது. இந்த நிதியாண்டில் தான் 6.35 சதவிதம் உயர்த்தியது.

பின்லாந்து

பின்லாந்து

பின்லாந்து நாட்டில் அதிகபட்சமாக 51.13 சதவிதம் வருமான வரி. இந்த பட்டியலில் ஆறாம் இடத்தை பிடித்துள்ளது.

ஸ்லோவேனியா (Slovenia)

ஸ்லோவேனியா (Slovenia)

ஸ்லோவேனியாவில் அதிக பட்ச வருமான வரி 50 சதவிதம்.

ஜப்பான்

ஜப்பான்

ஆசிய கண்டத்தின் சராசரி வருமான விகிதத்தை விட 23 சதவிதம் அதிகமாக ஜப்பான் நாடு வருமான வரி வசூல் செய்கிறது. எனவே இந்நாட்டில் அதிகபட்சமாக 50சதவிதம் வருமான வரி வசூல் செய்யப்படுகிறது.

இஸ்ரேல்

இஸ்ரேல்

இஸ்ரேல் நாட்டில் 50 சதவிதம் வருமான வரி வசூல் செய்யப்படுகிறது.

பெல்ஜியம்

பெல்ஜியம்

பெல்ஜியம் நாட்டிலும் இஸ்ரேல் நாடுகளை போன்று 50 சதவிதம் வரி வசூல் செய்யப்படுகிறது.

ஆஸ்திரியா

ஆஸ்திரியா

ஆஸ்திரியா நாட்டில் 49 சதவிதம் வருமான வரி வசூல் செய்யப்படுகிறது.

அயர்லாந்து

அயர்லாந்து

அயர்லாந்து நாட்டில் 48 சதவிதம் வருமான வரி வசூல் செய்யப்படுகிறது.

10% வரி மட்டுமே போதுமானது

10% வரி மட்டுமே போதுமானது

இந்தியாவில் இருக்கும் மக்கள் தொகைக்கு அதிகபட்சமாக 10 சதவீதம் வரி மட்டுமே போதுமானது என் ஒரு சர்வே கூறிகிறது. இந்த 10 சதவீதம் வரியை கொண்டு இந்தியாவை மிக அழகாக வழிநடத்த முடியும், ஒன்ற மட்டும் இல்லை என்றால். அது என்ன???

இதுக்கு கூடவா வரி...

இதுக்கு கூடவா வரி...

இப்படியும் ஒரு வரியா!.. நாடு தாங்காதுடா சாமி..இப்படியும் ஒரு வரியா!.. நாடு தாங்காதுடா சாமி..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

13 Countries with Highest Tax Rates in the World

While many Indians feel that a good portion of their money goes into paying taxes. The fact is that, India has the least income tax rates compared to other countries.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X