2013ஆம் ஆண்டில் பங்கு சந்தையை கலக்கிய பங்குகள்!!..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: 2013ஆம் ஆண்டு இந்திய பொருளாதாரத்திற்கு மிகவும் மோசமான ஆண்டாக அமைந்தது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு பிரச்சனைகள் பணவீக்கம், நிதி நெருக்கடி, பொருளாதார வீழ்ச்சி, அதிகப்படியான தங்க இறக்குமதி, இன்னும் பல.

 

இந்த சூழ்நிலையிலும் சில நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டது. இதனால் அந்நிறுவனத்தின் பங்குகள் சிறப்பாக செயல்பட்டது. குறிப்பாக ஐடி, பார்மா, எஃப்எம்ஜிசி துறை பங்குகள் மிகவும் சிறப்பாக செயல்பட்டது. 2013ஆம் ஆண்டில் பங்கு சந்தையில் கலக்கிய 5 நிறுவனங்களை இங்கு பார்ப்போம்.

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கு இந்த ஆண்டு மிகவும் நன்றாக அமைந்தது. இதன்படி இந்நிறுவன பங்குகள் சுமார் 103 சதவிதம் உயர்ந்தது. ரூபாய் மதிப்பு குறைவாலும், பொருளாதார மீட்சியாலும் இந்நிறுவன பங்குகள் இத்தகைய உயர்வை அடைந்தது.

டிசிஎஸ் நிறுவனம்

டிசிஎஸ் நிறுவனம்

டாடா குமுமத்தின் ஒரு பகுதியான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் பங்குகள் வருடத்தின் துவக்கத்தில் பெரிய அளவில் வளர்ச்சி இல்லை என்றாலும், ரூபாய் மதிப்பின் குறைவின் காரணமாக இந்நிறுவனத்தின் பங்குகள் சுமார் 71 சதவீதம் வளர்ந்துள்ளது.

விப்ரோ

விப்ரோ

இந்திய ஐடி துறையின், மென்பொருள் ஏற்றுமதியில் முன்னணி நிறுவனமாக திகழும் விப்ரோ நிறுவனம் 2013ஆம் வருடம் 57 சதவீத உயர்வை அடைந்தது.

சன் பார்மா நிறுவனம்
 

சன் பார்மா நிறுவனம்

மருந்து உற்பத்தி மற்றும் மருந்து ஏற்றுமதியில் இந்தியாவின் முதன்மை நிறுவனமாக திகழும் சன் பார்மா நிறுவனம் ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியால் அதிகப்படியான லாபத்தை இந்நிறுவனம் அடைந்தது. இதனால் இந்நிறுவன பங்குகள் 52 வார உயர்வை எட்டியது.

இன்போசிஸ்

இன்போசிஸ்

நாராயண மூர்த்தி வருகைக்கு பின்னர் இந்நிறுவனத்தின் செயல்பாடு முற்றிலுமாக மாறியது. 2ஆம் காலாண்டில் வல்லுனர்களின் கணிப்பிற்கும் அதிகமான லாபங்களை அடைந்தது. அத்துடன் இந்நிறுவன பங்குகள் 50 சதவீத வளர்ச்சியை அடைந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 stocks that were best performers from the Nifty in 2013

It is not surprising that out of the top five Nifty performers in 2013, four have come from the IT pack. Take a look at the returns generated by the top 5 stocks from the Nifty in 2013.
Story first published: Thursday, January 2, 2014, 13:02 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X