ஜப்பான் மக்கள் தொகை பெரும் வீழ்ச்சி!! பொருளாதாரம் சீர்குலைவு அபாயம்...

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: 2013-ஆம் ஆண்டு, ஜப்பான் நாட்டின் மக்கள் தொகை 2.44 லட்சம் குறைந்துள்ளது என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் மதிப்பிட்டு கடந்த வாரம் தெரிவித்தார். வளர்ந்து வரும் ஒய்வூதியர்களுக்கு ஆதரவாக விளங்கும் உதவி திட்டகளை கருத்தில் கொண்டு இத்தகவலை வெளியிட்டுள்ளனர்.

2013-ஆம் ஆண்டு தோராயமாக 1,031,000 குழந்தைகள் பிறந்துள்ளனர். சென்ற வருடத்தை விட இந்த வருடத்தின் எண்ணிக்கை 6000-மாக குறைந்துள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆனால் இன்னொருபுறம் பார்த்தால், தோராயமாக 1,275,000 மக்கள் இறந்துள்ளனர். சென்ற வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 19,000-மாக அதிகரித்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்கு பின்பு அதிக அளவிலான உயிர் இழப்பு இந்த வருடம் தான் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, அந்நாட்டின் மொத்த மக்கள் தொகை 2.44 லட்சம் குறைந்துள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. சென்ற வருடத்தின் மக்கள் தொகை 2.19 லட்சம் குறைந்துள்ளது. அதனால் சென்ற வருடத்தை விட இந்த வருடத்தில் இழப்புகள் அதிகம்.

0.21% மக்கள் தொகை சரிவு

0.21% மக்கள் தொகை சரிவு

31 மார்ச், 2013-ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் மக்கள் தொகை 126,393,679 ஆக கணக்கிடப்பட்டுள்ளது. சென்ற வருடத்தை விட இந்த எண்ணிக்கை 0.21% குறைந்துள்ளது என்று அந்நாட்டின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

2007 ஆண்டு முதல்..

2007 ஆண்டு முதல்..

2007-ஆம் ஆண்டு முதலே பிறப்பு இறப்புகளை கணக்கில் கொண்டு பார்த்தால், இங்கே மக்கள் தொகை குறைந்து கொண்டே தான் போகிறது.

ஜப்பான் நாட்டின் இன்னும் மோசம்!!

ஜப்பான் நாட்டின் இன்னும் மோசம்!!

ஜப்பான் நாடு வேகமாக நரைத்துக் கொண்டிருக்கிறது - அதன் மொத்த மக்கள் தொகையில் 20% பேர் 65 வயதிற்கு அதிகமாக உள்ளவர்களே. உலகத்தில் மூத்த குடிமக்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது.

முதியவர்களின் எண்ணிக்கை 40% எட்டும்..

முதியவர்களின் எண்ணிக்கை 40% எட்டும்..

2060-ஆம் ஆண்டுக்குள், 65 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதத்தை எட்டி விடும் என்று 2012-ஆம் ஆண்டின் அரசாங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Japan’s population logs record drop in 2013

Japan’s population fell by a record 244,000 in 2013, according to health ministry estimates, highlighting concerns over an ever-dwindling workforce supporting a growing number of pensioners.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X