வீடியோகான் - ஓஎன்ஜிசி நிறுவனங்களின் 2.47 பில்லியன் டாலர் ஒப்பந்தம்.. எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பு..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ஆப்பிரிக்காவில் உள்ள மொஸாம்பிக் நாட்டின் மிகப்பெரிய எரிவாயு தளத்தில் 10% பங்குகளை வாங்கியதற்காக, நாட்டின் பொதுத்துறை நிறுவனமான இந்திய எண்ணைய் மற்றும் எரிவாயு நிறுவனம் (ஒஎன்ஜிசி) 2.47 பில்லியன் டாலர்களை வீடியோகான் குழும நிறுவனத்திற்கு கொடுத்துள்ளது.

 

இந்த எண்ணைய் மற்றும் இயற்கை எரிவாயு குழுமத்தின் வெளிநாட்டு கிளையான ஓஎன்ஜிசி விதேஸ் லிமிடெட் (ONGC Vidhesh Limited - OVL) நிறுவனமும், இந்திய எண்ணைய் நிறுவனமும் (Oil India Limited) சேர்ந்து ரோவுமா பகுதி-1இல் உள்ள வீடியோகான் நிறுவனத்தின் 10 சதவிகித பங்குகளை 2.475 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியுள்ளன.

மேலும், இதே பகுதியில் 2.64 பில்லியன் டாலர்கள் செலவில், அமெரிக்காவின் மிகபெரிய எரிசக்தி நிறுவனமான அனடார்கோ பெட்ரோலியத்தின் (Anadarko Petroleum) 10% பங்குகளையும் ஓஎன்ஜிசி விதேஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

வீடியோகான் - ஓஎன்ஜிசி நிறுவனங்களின் 2.47 பில்லியன் டாலர் ஒப்பந்தம்.. எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பு..

வீடியோகான் நிறுவனத்திற்கு பணம் செலுத்த அன்னிய நிறுவனங்களிடம் சுமார் 1.5 பில்லியன் டாலர்களை ஒரு ஆண்டு காலத்திற்கு ஓ.வி.எல் நிறுவனம் கடனாக பெற்றுள்ளது. இதே காரணத்திற்காக இந்திய எண்ணைய் நிறுவனம் தனது பங்குகளின் மேலலாக 900 மில்லியன் டாலர்களை பெற்றுள்ளது.

அனடார்கோவிற்கு பணம் தருவதற்காக ஓ.வி.எல் மேலும் 2.6 பில்லியன் டாலர்களை தயார் செய்ய வேண்டியுள்ளது என்றும் ஒரு தகவல் குறிப்பிடுகிறது.

உண்மையில், 35 டிரில்லியன் கன அடி (Trillion Cubic Feet - TCF) அளவிற்கான எரிவாயு வளங்களை கொண்டிருக்கும் இந்த 10% பங்குகளுக்காக நாங்கள் 2.8 பில்லியன் டாலர்களை கேட்டோம் என்று வீடியோகான் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 'கடினமான பேரங்களைத் தொடர்ந்து, நாங்கள் 2.47 பில்லியன் டாலர்களாக விலையைக் குறைத்தோம்' என்றும் வீடியோகான் நிறுவனத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பகுதியில் பாரத் பெட்ரோலியன் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் (BPCL) 10% பங்குகள் ஏற்கனவே உள்ளன. 65 டிரில்லியன் கன அடி அளவிற்கான எரிவாயு வளங்களைக் கொண்டிருக்கும் இந்த பகுதி, ரிலையன் இன்டஸ்ட்ரீஸின் KG-D6 பகுதியில் தற்போது உற்பத்தி செய்து வரும் தளங்களை விடவும் 13 மடங்கு பெரியதாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

 

20% அளவிற்கு இப்பொழுது வாங்கப்பட்டுள்ள இந்த 10 டிரில்லியன் கன அடி எரிவாயு, இந்தியாவில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள எரிவாயுக்களின் அளவில் 5-ல் ஒரு பங்காக உள்ளன. 'இந்த எரிவாயு தளங்களில் உள்ள எரிவாயுவானது திரவ இயற்கை எரிவாயுவாக மாற்றப்பட்டு இந்திய சந்தைகளில் விற்கப்பட இருப்பதால், நமக்கான சக்தி வளங்களை அடைய இந்த விஷயம் உதவும்' என்று தகவல் கிடைத்துள்ளது.

வீடியோகான் - ஓஎன்ஜிசி நிறுவனங்களின் 2.47 பில்லியன் டாலர் ஒப்பந்தம்.. எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பு..

இந்த இரண்டு வர்த்தக செயல்பாடுகளும் பிப்ரவரி 2014-ல் முடிவடைந்து விடும். சுமார் 2.6 மில்லியன் ஏக்ககர்கள் பரப்பளவில் ரோவுமா பேஸினின் (Rovuma Basin) ஆழமான கடற்பகுதிகளில் இருக்கும் இந்த ஏரியா 1 பகுதியை வாங்கியதன் மூலம் ஓ.வி.எல் மற்றும் இந்திய எண்ணைய் நிறுவனம் ஆகியவை கிழக்கு ஆப்ரிக்க கடற்கரையில் மிகப்பெரிய அளவில் எரிவாயுவை கண்டு பிடிக்கத்த தொடங்குகின்றன.

இவற்றை வாங்கியதன் மூலம் வெளிநாடுகளில் சக்தி வளங்களை வாங்க, இந்திய நிறுவனங்கள் எவ்வளவு தீவிரமாக இறங்கியுள்ளன என்பது வெளிப்படுகிறது. உலகின் மிகப்பெரிய திரவ இயற்கை எரிவாயு உற்பத்தி மையங்களில் ஒன்றாக உருவாகும் திறன்களை ஏரியா 1 பெற்றிருக்கிறது.

'மேலும், இந்தியாவிற்கு போட்டியிடும் விலையில் திரவ இயற்கை எரிவாயுவை வழங்க மிகவும் ஏற்றதாக இது உள்ளது', என்றும் தகவல் கிடைத்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

ONGC-OIL pay $2.47 bn to Videocon Group

State-owned Oil and Natural Gas Corp and Oil India Ltd today paid $2.475 billion to Videocon Group for acquiring 10% stake in a giant gas field off Mozambique.
Story first published: Thursday, January 9, 2014, 6:02 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X