கச்சா எண்ணெய் வரத்து அதிகரிப்பு!! பெட்ரோல் விலை ரூ. 2 குறையும்..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ஜனவரி 3 மற்றும் ஜனவரி 5 ஆகிய தினங்களில் நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து இரண்டு முறை பெட்ரோல் விலை ஏற்றப்பட்டதால், மும்பையில் மட்டும் லிட்டருக்கு ரூ.2.25 அளவிற்கு விலை பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலையை சமனப்படுத்தவும் மற்றும் அமெரிக்க டாலருக்கெதிரான இந்திய ரூபாயின் உயர்வினாலும் அரசிற்கு சொந்தமான எண்ணைய் விற்பனை நிறுவனங்கள் ரூ.1.50 முதல் ரூ.2 வரையிலும் பெட்ரோல் விலையை குறைக்க உள்ளன.

இது குறித்து முன்னணி பெட்ரோல் விற்பனை நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில் 'நாங்கள் பெட்ரோலில் சிறிதளவு இலாபத்தைப் பெறத் துவங்கியுள்ளோம், எண்ணைய் விற்பனை நிறுவனங்களுடன் ஆய்வுக்கான சந்திப்பு நிகழ்ந்தவுடன் இந்த பலன்களை நுகர்வோர்களுக்கும் கொண்டு செல்ல உள்ளோம்' என்று அவர் கூறினார். ஆனால், எந்த அளவிற்கு விலை குறையும் என்று அவர் குறிப்பிடவில்லை.

கச்சா எண்ணெய் வரத்து அதிகரிப்பு!! பெட்ரோல் விலை ரூ. 2  குறையும்..

பெட்ரோல் விற்கும் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC), இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (HPCL) மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (BPCL) ஆகிய நிறுவனங்கள் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை சந்தித்து பெட்ரோல் விலையை நிர்ணயிக்கின்றன.

மும்பையை மையமாக கொண்ட எண்ணைய் விற்பனை நிறுவனத்தின், போர்டு உறுப்பினராக இருக்கும் ஒருவர் இந்த விலை குறைப்பு நடவடிக்கையை உறுதிப்படுத்துகிறார். 'கடந்த சில நாட்களாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பையும் நாங்கள் கவனித்து வருகிறோம் மற்றும் அதற்கேற்ப பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்வோம்' என்று அவர் குறிப்பிட்டார்.

கச்சா எண்ணெய் வரத்து அதிகரிப்பு!! பெட்ரோல் விலை ரூ. 2  குறையும்..

இந்தியாவில், ஜனவரி 1-ம் நாள் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை108 டாலார்களாக இருந்தது, அதே வாரத்தில் வெள்ளிக்கிழமையன்று 104.77 டாலர்களாக குறைந்தது. ஜனவரி 20-ல் இருந்து டெஹ்ரானால் நடைமுறைப்படடுத்தப்பட்ட அணுசக்தி திட்டங்களுக்கான ஒப்பந்தங்களால் ஈரான் நாட்டிலிருந்து கச்சா எண்ணெயின் வருகை அதிகரித்ததே இதற்கு காரணமாகும். ரூபாய் மதிப்பிலும் கூட, இந்தியாவில் ஜனவரி 1-ல் ரூ.6,726 ஆக இருந்த கச்சா எண்ணெயின் விலை வெள்ளிக்கிழமையன்று ரூ.6489.45 ஆக குறைந்துள்ளது.

உள்ளூர் பொருட்கள் விற்பனை, ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகளின் டாலர் விற்பனைகளில், டிசம்பர் 11-ம் நாளில் இருந்த 61.25 அளவில் இருந்து ரூபாயின் மதிப்பை உயர்த்தியதால், டாலருக்கெதிரான ரூபாய் மதிப்பு கடந்த ஒரு மாதத்தில் மிக அதிக அளவாக 38 பைசா அதிகரித்து 61.52 ஆக திங்கள் கிழமையன்று அதிகரித்திருந்தது.

வரிகள் மற்றும் மாநிலங்களின் தீர்வைகள் உட்பட ரூ.1. முதல் ரூ.1.50 வரை எண்ணைய் நிறுவனங்கள் குறைத்தாலும் கூட, விற்பனை நிலையங்களில் இது ரூ.2 அளவிற்கு குறைவாகும் என்று ஒரு ஆய்வாளர் குறிப்பிடுகிறார். கச்சா எண்ணெயின் விலையில் குறையும் ஒவ்வொரு டாலருக்கும் 33 பைசா அளவிற்கு இந்திய ரூபாய் குறையும் என்பது நடைமுறை விதியாகும். அதே போல, டாலருக்கெதிரான இந்திய ரூபாயின் மதிப்பில் ஒரு ரூபாய் குறைந்தால், பெட்ரோல் விலை 77 பைசா அளவிற்கு உயரும்.

ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.81.31 ஆக இருக்கும் மும்பை, மாநிலங்களின் தலைநகரங்களில் மிகவும் அதிகமான விலையை கொண்டிருக்கும் நகரமாக உள்ளது. 'மாநில சிறப்பு' செலவினங்கள் என்ற அடிப்படையில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு, ஜனவரி 3-ம் தேதி 0.96 பைசாவையும், ஜனவரி 5-ம் தேதி ரூ.1.79 பைசாவையும் பெட்ரோல் விலையில் உயர்த்தி எண்ணைய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்திருந்தன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Petrol prices may come down by Rs 2 a litre this week

After two consecutive hikes in petrol prices in many parts of the country on January 3 and January 5, which led to an increase of Rs 2.25 per litre in Mumbai alone, the state-owned oil marketing firms may slash the prices by Rs 1.5-2 a litre
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X