இந்திய பங்கு சந்தையை மேம்படுத்த களமிறங்கும் டிசிஎஸ்!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: 2014ஆம் நிதியாண்டின் கடைசி காலாண்டை இலாபமுள்ளதாக உருவாக்கும் எண்ணத்துடன் ஒரு புதிய இணையவழி வர்த்தக முறையை தொடங்கவும், நிர்வகிக்கவும் வகை செய்யும் ஒரு 5 ஆண்டு ஒப்பந்தத்தை டாடா கன்சல்டன்சி நிறுவனத்திற்கு (TCS) யுனைடெட் ஸ்டாக் எக்ஸேஞ்ச் (United Stock Exchange) நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த ஒப்பதந்தத்தின் படி, நாணய பரிமாற்றங்களுக்காக முன் நடைமுறையில் இருந்த தொழில்நுட்பத்தை விட, அதிக அளவு சிக்கனமான ஒரு தளத்தை டாடா கன்சல்டன்சி நிறுவனம் நடைமுறைப்படுத்தும். ஆனால், அதன் எதிர்கால விரிவாக்க திட்டங்களையும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அளவிடக் கூடியதாக இந்த தளம் இருக்கும் என்று டிசிஎஸ்

இந்த தளம் பயன்பாட்டுக்கு வந்த பின்னர், USE நிறுவனம் அதன் செயல்பாட்டு செலவினங்கள் குறையும் என்று எதிர்பார்க்கிறது. அதன் மூலம் அடுத்த இந்நிறுவனத்தின் இருப்புநிலைக் குறிப்பு அடுத்த ஆண்டில் மீண்டும் இலாபத்தைக் காட்டலாம் என்றும் எதிர்பார்ப்பதாக ஒரு அலுவலர் தெரிவித்தார்.

TCS-ஐ பொறுத்த வரையில் இந்த முயற்சியில் என்ட்-டூ-என்ட் (End-to-End) வர்த்தக தளம் அமைக்க உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் உலகளவில் உள்ள பிற பங்கு நிறுவனங்களையும் குறி வைப்பதற்கு TCS பிள்ளையார் சுழி போட்டுள்ளது என்று ஒரு ஆய்வாளர் கருத்து தெரிவித்தார்.

ஒப்பந்தத்தின் செயல்பாடு

ஒப்பந்தத்தின் செயல்பாடு

நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான டாடா கன்சல்டன்சி நிறுவனம், இந்த என்ட்-டூ-என்ட் ஒப்பந்தம் வாயிலாக, USE நிறுவனத்திற்காக கணக்கை முடித்த வைத்தல், உடன்பாடுகள் செய்து வைத்தல், நிதர்சன அபாயங்களை மேலாண்மை செய்தல் மற்றும் கண்காணித்தல் போன்ற பிற சேவைகளிலும் உதவி செய்கிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்த ஒப்பந்தத்தை உறுதி செய்த USE நிறுவனத்தின் வர்த்தக வளர்ச்சி பிரிவின் இயக்குநர் அரிந்தம் சாகா கூறுகையில் : 'நிறுவனத்தின் செயல்திறன் மற்றும் வர்த்தக வசதிகளை மேம்படுத்துவதையே இந்த திட்டம் குறிக்கோளாக கொண்டுள்ளது. தொழில்நுட்ப மேம்பாடு என்பது எந்தவொரு சந்தையிலும் தொடர்ந்து நடக்கும் செயல்பாடு தான்' என்றார்.

லாபகரமான திட்டம்..
 

லாபகரமான திட்டம்..

இந்த தளத்தில் செய்யப்படும் ஒவ்வொரு வர்த்தகத்திற்கும் டாடா நிறுவனத்திற்கு ஊதியம் அளிக்கப்படும் என்பதால், இந்த ஒப்பந்தத்தின் சுருக்கமான நிதி விபரங்களை நிர்ணயிக்க முடியவில்லை.

டிசிஎஸ் நிறுவனம்

டிசிஎஸ் நிறுவனம்

USE-ன் இந்த தொழில்நுட்ப வழிமுறையை உருவாக்குவதில் TCS நிறுவனத்தின் கைதேர்ந்த ஒரு குழு செயல்பட்டு வருகிறது. இது மிகப்பெரிய முதலீட்டாளரான மும்பை பங்குச் சந்தையை கடந்த சில காலண்டுகளாக பெற்றுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செலவுகள் குறைவு...

செலவுகள் குறைவு...

எந்தவொரு சந்தையையும் மேம்படுத்தும் போது, அதற்கான செலவுகளில் மிகவும் அதிகமானதாக இருப்பது அதன் தொழில்நுட்ப செலவுகள் தான். ஆனால் 2014-15ஆம் ஆண்டின் 2-வது காலண்டில் புதிய தளத்திற்கு இந்த சந்தை மாற்றப்பட்டதும், அதனுடைய செயல்பாட்டு செலவினங்களில் 15 முதல் 20 சதவிகிதம் குறையும் என்று தொழில்துறை வல்லுநர்களின் கூறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TCS in 5-year deal with United Stock Exchange

The United Stock Exchange (USE) has dished out a five-year contract to Tata Consultancy Services for deploying and managing a new online trading system as part of its quest to turn profitable next fiscal.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X