10 வயதான பேஸ்புக் நிறுவன பங்குகள் உச்சத்தை தொட்டது!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நியூயார்க்: உலகம் முழுவதும் 120 கோடி வாடிக்கையாளர்களை கொண்ட ஃபேஸ்புக் இணையதளம் அதனையொத்த பிற போட்டி இணைய தளங்களுக்கிடையே தன்னுடைய இளம் உபயோகிப்பாளர்கள் எண்ணிக்கையை தக்க வைத்துக்கொள்ள வேண்டிய கடுமையான சூழ்நிலையில் பத்தாவது பிறந்தநாளைக் நேற்று கொண்டாடியது.

 

இந்நிறுவனம் தனது பத்தாவது பிறந்தநாளைக் உலகம் முழுவதிலலும் உள்ள தனது நிறுவனங்களில் வெகு விமர்சியாக கொண்டாடியது. இந்நாளையொட்டி பேஸ்புக் இணையதளம் ஒரு பிரத்தியேக விடியோவை வெளியிட்டுள்ளது.

நேற்றைய கொண்டாட்டங்களுடன் நியூயார்க் பங்கு சந்தையில் பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் 2.7 சதவீதம் உயர்ந்து இதனால் இந்நிறுவனத்தின் பங்கு விலை 62.75 டாலராக உயர்ந்தது.

120 கோடி

120 கோடி

அந்நிறுவனத் தகவல்களின் படி இந்த சமூக இணையதத்தை உலக மக்களின் ஒரு பெரும் பகுதியினர், அதாவது சுமார் 120 கோடி பேர் ஒவ்வொரு மாதமும் உபயோகிக்கின்றனர்.

 அனைத்தும் ஒரு கனவு

அனைத்தும் ஒரு கனவு

முப்பதே வயதாகும் ஜுகெர்பர்க் சிலிகான் வாலி மாநாட்டில் இந்த 10 ஆண்டு நிறைவையொட்டி பேசுகையில், தான் தன்னை உலகின் மிகப்பெரும் பணக்காரர்களுள் ஒருவராக மாற்றிய இந்த தளத்தை துவங்குகையில் இந்த இணைய தளம் இவ்வளவு பெரியதாகவும் செல்வாக்குடையாதாகவும் மாறும் என எதிர்ப்பார்க்கவில்லை எனத் தெரிவித்தார்.

பல மாற்றங்களுக்கு உள்ளாக்கப்படும்..
 

பல மாற்றங்களுக்கு உள்ளாக்கப்படும்..

"இதை செய்யக்கூடியவர்கள் நாங்களாக இருப்போம் என எப்போதும் தோன்றியதில்லை" என அவர் தெரிவித்தார். அது முதல், ஃபேஸ்புக் மற்றும் அதன் வர்த்தகங்கள், ஒரு பொது நிறுவனமாக உருமாற்றம் பெற்று பல்வேறு மாற்றங்களுக்குள்ளானது என அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

வருமானம்..

வருமானம்..

மொபைல் வாடிக்கையாளர் சந்தையில் செயலாற்ற சற்று தாமதமானாலும், தங்களுடைய விளம்பர வருமானத்தில் பாதிக்கும் மேல் மொபைல் உபயோகிப்பாளர்கள் மூலம் கிடைப்பதாக அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Facebook set to celebrate 10th birthday amid challenges to build user base

Facebook - with more than 1.2 billion users worldwide - is celebrating its 10th birthday, the company stock price hits high.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X