குறைந்த பங்கு முதலீட்டில் நிறைய லாபம் பெற வேண்டுமா?? அப்ப இத படிங்க..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: ப்ளூ சிப் பங்குகளில் முதலீடு செய்ய வேண்டுமா அல்லது விலை குறைவான பங்குகளில் முதலீடு செய்ய வேண்டுமா? இந்த கேள்வி தான் பல முதலீட்டாளர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தும். அழி தன்மையின் பயத்தினால் குறைந்த விலை பங்குகளில் முதலீடு செய்ய சிலர் தயங்குவார்கள். கண்டிப்பாக பலவீனமான இதயங்களுக்கு ஏற்றது அல்ல இவ்வகை பங்குகள்.

ஆனால் ப்ளூ சிப் பங்குகளை வாங்குவதை விட குறைந்த விலை பங்குகளை வாங்குவதில் பல நன்மைகள் அடங்கியுள்ளது. புதிதாக முதலீடு செய்பவர்களுக்கு குறைந்த விலை பங்குகள் அனுபவத்தை கற்றுக் கொடுக்கும். புதிதாக சந்தையில் இறங்கியவர்கள் அதிலுள்ள நெளிவு சுழிவுகளை கற்றுக் கொள்வதற்கு முன் பல தவறுகள் செய்ய வாய்ப்பு உள்ளது.

அதனால் குறைந்த விலை பங்குகளில் முதலீடு செய்தால் பெரிய நஷ்டத்தில் இருந்து தப்பிக்கலாம். மேலும் ப்ளூ சிப் பங்குகளில் முதலீடு செய்யும் வசதி இல்லாதவர்களுக்கு கதவை திறந்துள்ளது இந்த குறைந்த விலை பங்குகள். சில நிறுவனங்களில் முதலீடு செய்தால் லாபம் அதிகளவில் இல்லை என்றாலும் நஷ்டம் ஆகாது. இத்தகைய நிறுவனங்களில் முதலீடு செய்தால் நம் முதலீட்டுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை.

குறைந்த விலையில் நம்பகமான நிறுவனஙகளில் முதலீடு செய்ய அனைவருக்கும் ஆசை தான் ஆனால் இத்தகையை நிறுவனங்களை கண்டுபிடிப்பது தான் கடினம். உங்களின் மனநிலையை அறிந்த நாங்கள் 10 சிறந்த நிறுவனங்களை இங்கே கொடுத்துள்ளோம்.

அலகாபாத் வங்கி

அலகாபாத் வங்கி

இந்தியாவில் உள்ள முக்கியமான பொது துறை வங்கிகளில் ஒன்றாக விளங்கும் அலஹாபாத் வங்கி, NSE மற்றும் BSE என இரண்டு பங்குச் சந்தையிலும் பட்டியலிடப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 7,65,874 பங்குகள் வாங்கவும் விற்கவும் படுகிறது. அதனால் எளிதில் பணமாக்கக்கூடிய தன்மையை பற்றி கவலை கொள்ள தேவையில்லை. இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 78ரூபாய்.

எஸ்ஸல் ப்ரோபேக் லிமிடெட்

எஸ்ஸல் ப்ரோபேக் லிமிடெட்

எஸ்ஸல் ப்ரோபேக் என்பது 33 சதவீத சந்தை பங்கை கொண்டுள்ள, உலகத்தின் மிகப்பெரிய லாமினேடட் ட்யூப் தயாரிப்பு நிறுவனமாகும். NSE மற்றும் BSE என இரண்டு பங்குச் சந்தையிலும் இந்நிறுவனம் பட்டியலிடப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு (30 நாளாக கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது) சராசரியாக 50,658 பங்குகள் வணிகத்தில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 49.40ரூபாய்.

ஆந்திரா வங்கி

ஆந்திரா வங்கி

1923 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆந்திரா வங்கி, தங்களின் வாடிக்கையாளர்களுக்கு பல வித வங்கி சேவைகளை அளித்து வருகிறது. சராசரியாக ஒரு நாளைக்கு 1,70,269 பங்குகள் வணிகத்தில் ஈடுபடுவதால், ஆரோக்கியமான வணிகத்தை கொண்டுள்ளது இந்த வங்கி. இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 55.35ரூபாய்.

பாம்பே டையிங்

பாம்பே டையிங்

பாம்பே டையிங் மற்றும் உற்பத்தி நிறுவனம் இந்தியாவில் உள்ள பழமையான ஆடைவகை தயாரிப்பாளர்களில் ஒன்றாவர். அதன் முதல் கடையை 1879-ஆம் ஆண்டு நிறுவியது. ஒரு நாளைக்கு சராசரியாக 1,48,953 பங்குகள் வாங்கவும் விற்கவும் படுகிறது. இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 57.45ரூபாய்.

நியூ டெல்லி டெலிவிஷன் (NDTV)

நியூ டெல்லி டெலிவிஷன் (NDTV)

நியூ டெல்லி டெலிவிஷன் என்பது செய்திகள், அன்றாட நிகழ்வுகள் மற்றும் கேளிக்கைகளை கையாளும் ஒரு தனியார் அலை பரப்புதல் நிறுவனமாகும். NSE மற்றும் BSE என இரண்டு பங்குச் சந்தையிலும் பட்டியலிடப்பட்டுள்ளது இது.ஒரு நாளைக்கு சராசரியாக 38,713 பங்குகள் வணிகத்தில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 71.95ரூபாய்.

பேண்டலூன் ரீடையில் இந்தியா

பேண்டலூன் ரீடையில் இந்தியா

பேண்டலூன் ரீடையில் இந்தியா நிறுவனம் மிகவும் பிரபலமான ஆடை தயாரிப்பாளர் மற்றும் சில்லறை விற்பனையாளர். அதன் சந்தை மதிப்பு 2003.19 கோடியாக உள்ளதால், அதன் அழி தன்மை மீது கவலை கொள்ள தேவையில்லை. தினமும் 9,42,830 பங்குகள் என அதிகளவில் வர்த்தகம் நடப்பதால் எளிதில் பணமாக்கக்கூடிய தன்மை அதிகமாக உள்ளது. இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 36.15ரூபாய்.

ரிலையன்ஸ் ப்ராட்கேஸ்ட் நெட்வொர்க்

ரிலையன்ஸ் ப்ராட்கேஸ்ட் நெட்வொர்க்

முன்பு ரிலையன்ஸ் மீடியா வேர்ல்ட் லிமிடெட் என்றழைக்கப்பட்ட, ரிலையன்ஸ் ப்ராட்கேஸ்ட் நெட்வொர்க், அலை பரப்புதல் சேவையில் ஈடுபட்டுள்ளது. NSE மற்றும் BSE என இரண்டு பங்குச் சந்தையிலும் பட்டியலிடப்பட்டுள்ளது இது. தினமும் 19,201 பங்குகள் வர்த்தகமாவதால் எளிதில் பணமாக்கக்கூடிய தன்மை போதுமானதாக உள்ளது. அதன் முதலீடு 510.08 கோடியாக உள்ளது. இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 58.70ரூபாய்.

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்பது உலகத்தில் உள்ள மிகப்பெரிய பவர் ட்ரான்ஸ்மிஷன் யூடிலிடிகளில் ஒன்றாகும். இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 96.45ரூபாய்.

முத்தூட் கேபிடல் சர்விசஸ்

முத்தூட் கேபிடல் சர்விசஸ்

1994-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட முத்தூட் கேபிடல் சர்விசஸ், வங்கியல்லாத நிது நிறுவனமாகும் (NBFC). கார்ப்பரேட் மற்றும் சில்லறை வாடிக்கையாளர்களுக்கு நிதி அளித்திடும் இந்நிறுவனம். BSE பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது இது. சராசரியாக 4256 பங்குகள் வர்த்தகத்தில் ஈடுபடுகிறது. ஒரு பங்கிற்கு 18.32 நேர்மறையான வருவாயை ஈட்டி தருகிறது இந்த பங்கு. இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 82.00ரூபாய்.

ஸ்டீல் அதாரிட்டி ஆப் இந்தியா (SAIL)

ஸ்டீல் அதாரிட்டி ஆப் இந்தியா (SAIL)

ஸ்டீல் அதாரிட்டி ஆப் இந்தியா (SAIL) என்பது மஹாரத்னா அந்தஸ்த்தை பெற்ற ஒரு பொது துறை நிறுவனமாகும். இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டீல் உற்பத்தியாளர்கள் இவர்கள். சராரியாக 3,04,787 பங்குகள் வர்த்தகத்தில் ஈடுபடவதால், அதனை விற்கப் போகும் போது, யார் வாங்குவார்கள் என்ற கவலை கொள்ள தேவையில்லை. இதனை வாங்குவதற்கும் இது பொருந்தும். இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 63.45ரூபாய்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

The Best Stocks To Invest Under 100

Should you invest in blue chip stocks or cheap stocks? That’s a question that haunts many investors. Some people tend to avoid buying low priced stocks in fear of volatility. Obviously, these are not for the faint hearted.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X