40 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை மறுகொள்முதல் செய்த ஆப்பிள் நிறுவனம்..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நியூயார்க்: ஆப்பிள் நிறுவனத்தின் 2014ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டின் முடிவுகள் கவலையளிக்கக் கூடிய முடிவுகளையடுத்து தான் வெளியிட்ட பங்குகளில் 11 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பங்குகளைத் திரும்ப பெற்றுள்ளது. இத்தகவலை அந்நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் தெரிவித்தாக வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

 

அந்த நிறுவனத்தின் காலாண்டு நிதிநிலை முடிவுகள் அறிவிக்கப்பட்ட மறுநாளே அதன் பங்குகள் 8 சதவிகிதம் குறைந்தது ஆச்சர்யத்தை அளிப்பதாக அந்நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் அந்த இதழுக்கு அளித்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

விடுமுறைகளில் எதிர்பார்த்ததை விட குறைந்த அளவு ஐபோன்கள் விற்பனை மற்றும் குறைந்த வருமான எதிர்நோக்கு ஆகியவை உலக சந்தையின் மந்த நிலை மற்றும் குறைந்த சீன வர்த்தகம் போன்ற அச்சங்கள் பங்கு சரிவுக்கு வித்திட்டன.

40 பில்லியன் டாலர்

40 பில்லியன் டாலர்

சமீபத்திய பங்கு பரிவர்தனை மூலம் கடந்த 12 மாதங்களில் ஆப்பிள் நிறுவனம் மொத்தம் 40 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளது. இது ஒரு வரலாற்று சாதனை என டிம் குக் தெரிவித்ததாக அந்த இதழ் தெரிவித்தது.

கம்பீரமான பேச்சு

கம்பீரமான பேச்சு

"இது ஆப்பிள் நிறுவனம் விடும் சவால். இது நாங்கள் என்ன செய்கிறோம், என்ன செய்யவிருக்கிறோம் என்பதில் எங்களுக்குள்ள உறுதியைக் குறிக்கிறது. நாங்கள் சொல்வது மட்டுமல்ல செய்தும் காண்பிக்கிறோம்" என்றார் டிம் குக்.

60 பில்லயன் டாலர் இலக்கு

60 பில்லயன் டாலர் இலக்கு

இந்த பங்குக் கொள்முதல், ஏற்கனவே அந்நிறுவனம் அறிவித்த 60 பில்லியன் டாலர் பங்குகளை மறுகொள்முதல் செய்யும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

பங்கு ஆதாயம்
 

பங்கு ஆதாயம்

இந்த முடிவின் கீழ் கடந்த டிசம்பர் வரையிலான காலாண்டில், ஆப்பிள் 7.7 பில்லியன் டாலர் தொகையை தன் பங்குதாரர்களுக்கு பங்காதாயமாகவும் திரும்பப்பெறும் தொகையாகவும் வழங்கி, சமீபத்திய கொள்முதல் நீங்கலாக சுமார் 43 பில்லியன் டாலர் அளவிற்கு முதலீடுகளை திரும்ப வழங்கியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் இது தொடர்பான மேலும் சில தகவல்களை மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக டிம் குக் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Apple buys back $14 billion of its stock

Apple Inc has repurchased $14 billion worth of its stock in the last two weeks after disappointing first-quarter (Q1) results, The Wall Street Journal reported quoting chief executive officer (CEO) Tim Cook.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X