வங்கித்துறை பங்குகளில் முதலீடு செய்யலாமா?? வேண்டாமா??

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: சமீப காலமாக பங்கு முதலீட்டாளர்களிடையே வங்கிதுறைப் பங்குகள் சிறப்பிழந்து காணப்படுகிறது. இதற்கான காரணம் என்னவென்று பார்த்தால் சந்தை நல்ல நிலையில் இருக்கும் போதே பல பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளின் பங்குகள் சரிவை எட்டியது. இதனால் வங்கிதுறையில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் விருப்பம் காட்டாமல் இருந்தனர்.

ஆனால், இப்போதுள்ள சூழ்நிலையில், வங்கித்துறைப் பங்குகளே முதலீட்டிற்கு மிகவும் ஏற்றவையாகக் இருக்கிறது என் சில மூத்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஏன் இந்த திடீர் மாற்றம், இதற்கான காரணங்களை உங்கள் முன்வைக்கிறோம்.

மொத்த விலைக் குறையீட்டெண் சரிந்தது

மொத்த விலைக் குறையீட்டெண் சரிந்தது

நுகர்வோர் விலைக் குறியீட்டெண் பணவீக்கமானது (CPI inflation) குறைந்து கொண்டே வந்து கடந்த இரண்டாண்டுகளில் மிகக்குறைந்த அளவை எட்டியுள்ளது. மொத்த விலைக் குறையீட்டெண் பணவீக்கமானது சரிந்து 5.05 % என்னும் அளவை எட்டியுள்ளது.

இதன் காரணமாக இந்திய ரிசர்வ் வங்கி ஆண்டின் பிற்பகுதியில், வட்டி வீதங்களை (rates) குறைக்க வாய்ப்புள்ளது. இதனால், வங்கித்துறைப் பங்குகளின் மதிப்பு அதிகரிக்கத் துவங்கும்.

 

செயல்படா சொத்துக்கள்

செயல்படா சொத்துக்கள்

சில வங்கிகளின் செயல்பாட்டு முடிவுகளில் மொத்த மற்றும் நிகர செயல்படா சொத்துக்கள் (NPAs) மிகுந்து காணப்படுகின்றன. ஆனால் இவற்றின் நிலை மிகவும் மோசமானதாகிவிடவில்லை. சில வங்கிகளில் இவற்றின் நிலையானது இக்காலாண்டில் மேம்பட்டு காணப்படுகிறது. செயல்படா சொத்துக்கள் வசூலாகி, அளவு குறையும்போது, வங்கித்துறை பங்குகளின் மதிப்பும் அதிகரிக்கும்.

பொருளாதாரம் சார்ந்த பங்குகள்

பொருளாதாரம் சார்ந்த பங்குகள்

நரேந்திர மோடியின் தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சியானது மத்தியில் அமையும் நிலைவந்தால், தகவல் தொழில்நுட்பம், மற்றும் மருந்து நிறுவனங்களின் பங்குகளைவிட வங்கித்துறைப் பங்குகளின் மதிப்பு அதிகமாக உயர்வதற்கு வாய்ப்புள்ளது.

ஆட்சி மாற்றம்

ஆட்சி மாற்றம்

நரேந்திர மோடி தனது கொள்கை முடிவுகளின் மூலம், பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்வார் என்ற நம்பிக்கையும் அதனால் வங்கித்துறைப் பங்குகள் அதிக வளர்ச்சிகாணும் என்ற நம்பிக்கையுமே காரணம்.

மிகக்குறைவான விலை

மிகக்குறைவான விலை

பெரும்பாலான வங்கித் துறை பங்குகள் தற்போது மிகக்குறைவான விலைக்குக் கிடைக்கின்றன. உதாரணமாக பொதுத்துறை வங்கிப் பங்குகள், புத்தக மதிப்பில் பாதி விலைக்குக் கிடைக்கின்றன. ஒரு சில வங்கிப் பங்குகளின் பங்கு ஈவுத்தொகை மதிப்பு 7% ஆக அதிகரித்து உள்ளது. மிகச்சிறந்த தனியார் வங்கியான 'யெஸ் பேங்க்' கின் பங்கு ஒன்றின் P/E விகிதமானது 6 மடங்குதான் உள்ளது.

பொருளாதார வளர்ச்சி = வங்கித் துறை வளர்ச்சி

பொருளாதார வளர்ச்சி = வங்கித் துறை வளர்ச்சி

தற்போது பொருளாதார வளர்ச்சியானது மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்பதனால், பங்குகளின் மதிப்பு மிகவும் அடிமட்டத்தில் கிடப்பதாகக் கொண்டால், இந்நிலை தலைகீழாக மாறும்போது, முதலில் ஊட்டம் பெற்று மதிப்பு உயரப்போவது வங்கித்துறைப் பங்குகளே. எனவே வங்கித்துறைப் பங்குகளில் கவனம் செலுத்தி, முதலீடு செய்யத் தொடங்குங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 reasons why banking stocks could be a good bet

Banking stocks are out of favour with investors, with several PSU and private sector banking stocks languishing for the last several months. But, these stocks can be an excellent bet at the current levels and here is why.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X