புதிய முதலீட்டாளரை தேடும் ஹெச்சிஎல்!! மறுக்கும் ஷிவ் நாடார்..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ஹெச்சிஎல் குழுமத்தின் அங்கமாக திகழும் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் 10 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை வாங்க ஒரு சிறந்த முதலீட்டாளரை அந்நிறுவனத் தலைவர் ஷிவ் நாடார் தேடுவதாக வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை செய்தி வெளியிட்டு இருந்தது. இச்செய்தி ஐடி துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பங்கு முதலீட்டாளர்கள் மத்தியில் பீதியை கிளப்பியது.

இது குறித்து ஹெச்சிஎல் குழுமத்தின் நிர்வாகிகளை அனுகியபோது, "ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தை பற்றி வெளியேறும் செய்திகளை ஹெச்சிஎல் கார்போரேஷன் முற்றிலுமாக மறுக்கிறது" என அந்நிறுவன செய்திக்குறிப்புத் தெரிவிக்கிறது.

62% பங்குகள்

62% பங்குகள்

நிறுவனத் தலைவர் ஷிவ் நாடார் ஏறக்குறைய 62 சதவிகித பங்குகளை இந்தியாவின் நான்காவது பெரும் தகவல் தொழில்நுட்பச் சேவைகள் கூட்டு நிறுவனமான ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தில் வைத்துள்ளார்.

வங்கி உதவி

வங்கி உதவி

அவர் இந்த பங்கு விற்பனைக்காக வங்கிகளை இன்னும் நாடவில்லை எனவும் இருவர் இதைப்பற்றிய விவரமளித்துள்ளதாகவும் அந்த செய்தி அறிக்கைக் கூறியது.

16.6 பில்லியன் டாலர்

16.6 பில்லியன் டாலர்

தேசிய பங்குச்சந்தையில் 16.6 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனப் பங்குகள் 12.4 சதவிகிதம் உயர்ந்து 1,543.30 என்ற விலையில் பங்குகள் விற்கப்படுகிறது.

பங்கு சந்தை நிலவரம்
 

பங்கு சந்தை நிலவரம்

கடந்த ஒரு வருட காலத்தில் ஹெச்சிஎல் நிறுவனத்தின் பங்கு பன்மடங்கு உயர்ந்துள்ளது, மேலும் இந்நிறுவனத்தின் லாப விகிதமும் தொடர்ந்து உயர்ந்த வண்ணமே உள்ளது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் மத்தியில் ஹெச்சிஎல் நிறுவனத்தின் மதிப்பு அதிகரித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

HCL denies report of founder seeking buyer for $10 bln stake

HCL Corp, the holding company for HCL Technologies, denied a Wall Street Journal report that said its founder Shiv Nadar was seeking potential buyers for his $10 billion stake in the company.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X