சீனாவில் புதிதாக 5 தனியார் வங்கிகள் திறப்பு!! அலைமோதும் பங்குதாரர்கள்..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெய்ஜிங்:சீனாவில் சோதனை கட்டமாக ஜந்து தனியார் வங்கிகளை திறக்க அந்நாட்டின் வங்கி கட்டுப்பாட்டு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சோதனை சரியாக அமைந்தால் நாடு முழுவதும் தனியார் வங்கிகள் அமைக்க வங்கி கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது.

 

முதற்கட்டமாக டியான்ஜின், ஷாங்காய், ஜேஜியாங் மாகாணம் மற்றும் குவாங்டாங் மாகாணத்தில், ஷாங் ஃபூலின் பகுதிகளில் வங்கிகள் அமைக்க சீன வங்கி ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைலவர் ஷாங், வருடாந்த பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

10 நிறுவனங்கள்

10 நிறுவனங்கள்

சீனாவில் தனியார் வங்கிகள் அமைக்கும் பணியில் சுமார் பத்து நிறுவனங்கள் களம் இறங்கியுள்ளது, இதில் இண்டர்நெட் தொழில்நுட்ப நிறுவனமான அலிபாபா மற்றும் டென்சென்ட் நிறுவனமும் அடக்கம் சீன வங்கி ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் ஷாங் அவர்கள் தெரிவித்தார்.

பங்குதாரர்களின் பட்டியல்

பங்குதாரர்களின் பட்டியல்

மேலும் அவர் இத்தனியார் வங்கிகளின் பங்குதாரர்களை விசாரணைக்கு பின் அறிவிக்கப்படும் எனவும் இவர் தெரிவித்தார்.

 2 முதலீட்டாளர்கள்

2 முதலீட்டாளர்கள்

ஒவ்வொரு தனியார் வங்கியும் குறைந்தபட்சம் 2 முதலீட்டாளர்களை கொண்டு செயல்படும் என அவர் தெரிவித்தார். இதுவரை சீன வங்கி ஒழுங்குமுறை ஆணையம் வங்கிகள் அமைக்கப்படும் நாள் தெரிவிக்கவில்லை

லட்சிய சீர்திருத்தம்
 

லட்சிய சீர்திருத்தம்

சீனாவில் தனியார் வங்கிகள் திறப்பது சீன அரசின் ஒரு லட்சிய சீர்திருத்தம் என நவம்பர் மாதத்தில் நடந்த கம்யூனிஸ்டு பார்டி ஆஃப் சீனா நடத்திய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த தனியார் வங்கிகள் சீனா முழுவதும் தொடர் சங்கிலியாக திறக்கப்படும் எனவும், இத்தகைய வங்கி தொடர் சங்கிலி நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் என தெரிவிக்கப்பட்டது.

 சட்டதிட்டங்கள்

சட்டதிட்டங்கள்

தற்போது இருக்கும் அரசு வங்கிகளின் அத்தனை சட்டதிட்டங்களும் இப்புதிய தனியார் வங்கிளுக்கும் பொருந்தும் என சீன வங்கி ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் ஷாங் தெரிவித்தாக சீன அரசின் பத்திரிக்கை வெளியிடான சின்குவா தெரிவித்தது.

அபயங்களும், வலிமையும்

அபயங்களும், வலிமையும்

மேலும் அவர் தனியார் வங்கிப் பாங்குதாரர்களின் அபயங்களையும், வலிமையும் மிகுந்த எச்சரிக்கையுடன் விசாரணை செய்ப்படும் என் இந்த பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China to set up five private banks on trial basis

China will set up five private banks on a trial basis before the practice is extended to more places, the chief of the country’s banking regulator said on Tuesday.
Story first published: Tuesday, March 11, 2014, 13:12 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X