நிதி நெருக்கடி.. ஆட்குறைப்பு.. கனடா பிராட்காஸ்டிங் கார்போரேஷன்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கனடா: கனடா நாட்டின் ஒளிபரப்பு நிறுவனமான கனடா பிராட்காஸ்டிங் கார்போரேஷன், (சிபிசி) கடும் நிதி நெருக்கடிகளைச் சந்தித்து வரும் நிலையில் தன் பணியாளர்கள் சுமார் 600 பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்து அதன் மூலம் சுமார் 130 முதல் 150 மில்லியன் டாலர்களை மிச்சப்படுத்தவுள்ளதாக அதனை கண்காணித்துவரும் ஒரு தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது.

 

ஃப்ரண்ட்ஸ் ஆப் கனடியன் ப்ராட்காஸ்டிங் என்ற அமைப்பின் செய்தித் தொடர்பாளர் இயான் மோரிசன் இதுகுறித்துத் தெரிவிக்கையில், சிபிசி நிறுவனத்தின் அனைத்து பணியாளர்களின் கூட்டமொன்றை கூட்டவுள்ளதாகவும், அதுகுறித்த தகவல்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லையென்றாலும், மேற்கூறிய பணியாளர் எண்ணிக்கை அந்த நிறுவனத்தில் உள்ள சில உயர்மட்ட அதிகாரிகள் மூலமாக தனக்குக் கிடைத்த உறுதியான தகவல் எனவும் அவர் தெரிவித்தார்.

விளையாட்டுத் துறைச்சேவை

விளையாட்டுத் துறைச்சேவை

அந்த தன்னார்வ அமைப்பின் கூற்றுப்படி, விளையாட்டுத் துறைச்சேவை நிறுத்தப்படவுள்ளதாகவும் இந்த நடவடிக்கை ஆங்கில மற்றும் ஃப்ரென்சு சேவைகளை பாதிப்பதுடன் ஆங்கிலச் சேவைகள் இருமடங்கு பாதிப்படையும்.

இழப்பு

இழப்பு

சிபிசி ஹாக்கி நைட் என்ற போட்டிகளின் இந்த ஒளிபரப்பை இழக்கும் அதே வேளையில், ரோஜர்ஸ் கம்யுனிகேஷன்ஸ் நிறுவனம் அந்த பொறுப்பை கடந்த நவம்பர் மாதம் முதல் சுமார் 5.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள 12 ஆண்டு ஒப்பந்தத்தின் படி ஏற்று நடத்தும்.

விளம்பர வருமானம் கட்

விளம்பர வருமானம் கட்

சிபிசி அந்த நிகழ்ச்சியை சனிக்கிழமை இரவுகளில் ஒளிபரப்புவதோடு குறிப்பிட்ட சில போட்டிகளின் ஒளிபரப்பையும் அடுத்த 4 வருடங்களுக்கு ஒளிபரப்பும். ஆனால் இதில் விளம்பர வருமான எதுவும் இருக்காது.

நிதி நெருக்கிடி
 

நிதி நெருக்கிடி

இந்த ஹாக்கிப் போட்டிகளை இழப்பது ஒருபுறமிருந்தாலும், அந்த நிறுவன நிர்வாகம் தேசிய ஹாக்கி லீக் போட்டிகளின் உரிமை இழப்பினை ஈடுசெய்ய தயார் நிலையில் இல்லை, மேலும் 2012 ஆம் ஆண்டின் அரசு பட்ஜெட்டில் அறிவித்த சிக்கன நடவடிக்கைகளின் முழுவீச்சினால் ஏற்பட்ட பாதிப்பும் இந்த நிலைக்கு முக்கிய காரணம் என தான் நம்புவதாக மோரிசன் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

CBC may cut roughly 600 positions on Thursday, lobby group says

The Canadian Broadcasting Corporation could be facing layoffs in the range of 600 positions as it grapples with a financial shortfall of $130-million to $150-million, according to a lobby group that watches the national broadcaster closely.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X