குஜராத் நிறுவன பங்குகள் திடீர் உயர்வு!! யார் காரணம்..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: கடந்த சில மாதங்களாக குஜராத்தைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கு சந்தையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் புதிய முதலீட்டாளர்கள் மிகவும் ஆர்வமுடன் குஜராத் நிறுவனங்களின் மீது முதலீடு செய்து வருகின்றனர்.

இதில் குறிப்பாக அதானி குழும நிறுவனப் பங்குகள் கடந்த வாரம் மிகப்பெரும் உயர்வை அடைந்ததைத் தொடர்ந்து, தற்போது அம்மாநிலத்திலுள்ள பிற நிறுவனங்களின் பங்குகளும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அடுத்த பிரதமராக ஆவர் என்ற எதிர்பார்ப்பில் உயரத்தொடங்கியுள்ளன.

குஜராத் கேஸ் நிறுவனம்

குஜராத் கேஸ் நிறுவனம்

கடந்த வெள்ளியன்று குஜராத் கேஸ் நிறுவனப் பங்குகள் அதிரடியாக 20 சதவிகிதம் உயர்ந்ததுடன் அதன் பங்குகள் மேல் நிலையில் மூடப்பட்டு, கவுண்டரில் வாங்குபவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது.

எரிவாயு விநியோகம்

எரிவாயு விநியோகம்

இந்த நிறுவனம் குழாய்கள் மூலமாக எரிவாயுவை சுமார் 413,000 சில்லரை வியாபாரிகளுக்கும், இயற்கை எரிவாயுவை சுமார் 200,000 வாடிக்கையாளர்களுக்கும் வழங்குகிறது.

4 சதவிகித உயர்வு

4 சதவிகித உயர்வு

குஜராத் கனிம வளர்ச்சி நிறுவனமும் 4 சதவிகித உயர்வுடனும் குஜராத் மரபுசாரா எரிசக்தி நிறுவனம் 3 சதவிகித உயர்வுடனும் இந்த வரிசையில் சேர்ந்துள்ளன.

 அதானி குழுமம்

அதானி குழுமம்

அதானி என்டர்பிரைசஸ் பங்குகள் ஏப்ரல் 7 ஆம் தேதி 373 ரூபாயிலிருந்து ஏப்ரல் 11 ஆம் தேதி 437 ரூபாயாக உயர்ந்தது. அதானி பவர் மற்றும் அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட பிற அதானி குழும நிறுவனங்களின் நிலையும் இதேதான். பெரும்பாலான இந்தப் பங்குகளின் மதிப்பு உயர்வைக் கண்டதுடன் மேலும் இவற்றை வாங்க ஊக்குவிக்கும் வகையில் அமைந்தன.

என்ன காரணம்..

என்ன காரணம்..

ஏன் இந்த திடீர் உயர்வு? முதலீட்டாளர் மற்றும் பங்குசந்தை வல்லுனர்கள் கூறும் ஒரே பதில் நேமோ தான். நரேந்திர மோடி என்ற குஜராத்தியரை பிரதமராகப் பெறப்போகிறது என்ற நம்பிக்கை இந்தப் பங்குகளின் மதிப்பு உயர காரணமாக அமைந்தது என கூறினார்கள்.

மோடி

மோடி

மோடி பிரதமரானால் இந்த நிறுவனங்கள் எவ்வாறு பயனடையும் என்பது தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். பங்கு வர்த்தகம் செய்வோர் தாங்கள் இந்த தருணத்தை பயன்படுத்த ஒரு பிரகாசமான வாய்ப்பைப் பெற்றுள்ளனர் என்பதே உண்மை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How Gujarat based company stocks are riding high on the Modi wave?

After the Gujarat based Adani Group of companies rallying to phenomenal highs in the past few weeks, it's now time for other Gujarat based company stocks to rally on hopes that Gujarat Chief Minister, Narendra Modi would be anointed Prime Minister in May.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X