இன்போசிஸ் நிறுவனத்திற்கு பாய் பாய் சொன்ன அடுத்த அதிகாரி!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: இந்தியாவின் சாப்ட்வோர் துறையில் மிகப்பெரிய இடத்தில் இருக்கும் இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து கடந்த சில மாதங்களாக பல உயர் அதிகாரிகள் வெளியேறி நிறுவனத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். இந்நிலையில் மற்றும் ஒரு உயர் அதிகாரி நிறுவனத்தை விட்டு வெளியேறுகிறார்.

 

இந்நிறுவனத்தின் தலைமை இணக்க அதிகாரியான (chief compliance officer) நித்தியானந்தன் ராதகிருஷ்ணன் இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறுகிறார். இவர் இந்நிறுவனத்தின் வெளிநாட்டு வர்த்தகத்தின் சட்டதிட்டங்களில் அதிகம் பங்கு கொண்டவர், மேலும் இவர் இந்நிறுவனத்தின் நிர்வாக குழுவில் மிகவும் முக்கிய பொறுப்புகளில் உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

புதிய ஆள்

புதிய ஆள்

இதுகுறித்து இந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில் நித்தியானந்தன் ராதகிருஷ்ணன் பதவியில் இவர் முளையாக செயல்பட்ட பரவதீசம் கஞ்சிநாதம் இப்பதவியில் செயல்படுவார் என செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். மேலும் பரவதீசம் கஞ்சிநாதம் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் செயல்படுவார் எனவும் அவர் தெரிவித்தார்.

பரவதீசம் கஞ்சிநாதம்

பரவதீசம் கஞ்சிநாதம்

கஞ்சிநாதம் இன்போசிஸ் நிறுவனத்தின் நிர்வாக குழுவில் இடம்பெற உள்ளார். இந்த குழு நிறுவனத்தின் முக்கிய முடிவுகள் எடுக்கும் ஒரு உயர்வான குழுவாகும். தற்போது இக்குழு ஒழுங்குமுறை இணக்கத்தை கவணித்து கொண்டுவருகிறது.

முக்கிய தொடர்பு

முக்கிய தொடர்பு

இன்போசிஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் நிறுவனத்தின் உயர் நிர்வாக குழுவிற்கு இடையில் செயல்படும் முக்கிய அதிகாரியாக செயல்படுவார். இப்படம் இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக குழு.

இன்போசிஸ்
 

இன்போசிஸ்

இந்நிறுவனத்தில் இருந்து தொடர்ந்து பல உயர் அதிகாரிகள் வெளியேறி வருகின்றனர் இதற்கு காரணம் நிர்வாகமா?? அல்லது நிறுவனத்தின் நிலையற்ற செயல்பாடா??. நிறுவனத்தின் செயல்பாடு சரிவு பாதையை நோக்கி செல்வதால் இந்த அதிகாரிகள் நிறுவனத்தின் எதிர்காலத்தை கணித்து வெளியேறுகின்றனரா என்பது புலன்படாத ஒரு விஷயமாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys chief compliance officer Nithyanandan Radhakrishnan quits

IT major Infosys saw another high-profile exit with the resignation of its chief compliance officer Nithyanandan Radhakrishnan. The former executive council member is set to fly solo as an independent consultant on international legal matters.
Story first published: Saturday, April 19, 2014, 14:21 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X