மல்டி-பிராண்ட் சில்லறை வர்த்தகத்திற்கு செக்: நிர்மலா சீதாராமன்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் உட்பட வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களுக்கு சாதகமாக, மல்டி பிராண்ட் சில்லறை வர்த்தகத் துறையில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம் என்ற தேர்தலுக்கு முந்தைய உறுதிமொழியை தளர்த்துவதில்லை என்ற முடிவுடன் பிஜேபி தலைமையிலான மத்திய அரசு உள்ளது.

 

'தற்போது, கட்சியின் கொள்கையில் மிகவும் தெளிவாக உள்ளோம். நடுத்தர மற்றும் சிறு வியாபாரிகள் இதனை (மல்டி பிராண்டு சில்லறை வணிகம்) எதிர்கொள்ளத் தயாராக இல்லாத நிலையில், கதவை திறந்து விடுவது நல்ல தீர்மானமாக இருக்காது. எனவே, உடனடியாக நேரடி அந்நிய முதலீட்டுக்காக அனுமதிக்கப்பட்டால், அவர்கள் பாதிக்கப்படலாம்', என வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் திரு.நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

வேலை வாய்ப்பு உருவாக்கம்

வேலை வாய்ப்பு உருவாக்கம்

திறனுள்ள மற்றும் திறனற்றவர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்கவும் மற்றும் ஏற்றுமதியை வளர்க்கவும் தேவையான கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

ஏற்றுமதி

ஏற்றுமதி

கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகளாவிய பொருளாதாரம் மந்தமாக இருந்ததால் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைந்து விட்டது.

மல்டி பிராண்ட் சில்லறை வர்த்தகம்

மல்டி பிராண்ட் சில்லறை வர்த்தகம்

பாஜக மல்டி பிராண்ட் சில்லறை வர்த்தகத் துறையில் 51 சதவீதம் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிப்பது தொடர்பாக கொண்டுள்ள தற்போதைய நிலையை மாற்ற மாட்டார்கள் என்று வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகமும் மற்றும் தொழில் துறையும் யூகம் கொண்டுள்ளன.

 வர்த்தக பங்குதாரர்களின் நெருக்கடிகள்
 

வர்த்தக பங்குதாரர்களின் நெருக்கடிகள்

மேலும், வால்மார்ட், டெஸ்கோ மற்றும் கேர்ரேபோர் போன்ற அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நிறுவனங்கள் இந்திய சந்தையில் நுழைய நேரம் பார்த்துக் கொண்டுள்ளதால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய வர்த்தக பங்குதாரர்கள், நேரடி அந்நிய முதலீட்டைப் பற்றிய கொள்கையை அரச மாற்றிக் கொள்ள வேண்டும் என நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

தப்பித்த டெஸ்கோ

தப்பித்த டெஸ்கோ

பிரட்டன் நிறுவனமான டெஸ்கோ மட்டுமே, டாடா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் நுழையப் போவதாக தன்னுடைய திட்டங்களை வெளியிட்டுள்ளது. ஆனால், புதிய அரசாங்கத்தின் மனதில் என்ன உள்ளது என்று தெரியும் வரை இந்த திட்டத்தை செயல்படுத்துவதில்லை என்று இந்நிறுவனம் உறுதியாக உள்ளது.

தேர்தல் வாக்குறுதி

தேர்தல் வாக்குறுதி

பிஜேபி-யின் தேர்தல் வாக்குறுதிகளில் மல்டி-பிராண்ட் சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம் என்று குறிப்பிடப்பட்டிருப்பது தான் இதில் ஆர்வமூட்டும் விஷயமாகும்.

சிறப்பான நிபுணத்துவம்

சிறப்பான நிபுணத்துவம்

'மல்டி-பிராண்டு துறையில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்கவில்லையென்றாலும், எங்கெல்லாம் வேலைகளையும், கட்டுமானம் மற்றும் சிறந்த தொழில்நுட்பம் மற்றும் சிறப்பான நிபுணத்துவங்களைப் பெற வேண்டிய தேவை உள்ளதோ அங்கெல்லாம் அனுமதிக்கலாம்', என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய துறைகள்

முக்கிய துறைகள்

இரயில்வே, மின் வணிகள் மற்றும் கட்டுமானத் துறையில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிப்பது தொடர்பான விஷயங்களுக்கு பதிலளிக்கைளில், அரசாங்கம் சீரமைக்கும் பாணியில் நேரடி அந்நிய முதலீட்டை பல்வேறு துறைகளிலும் அளிக்க நினைக்கும் என்று திருமதி. நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

இவர்களை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இதை கிளிக் செய்யவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

No FDI in multi-brand retail for now

The BJP-led Government at the Centre seems determined to stick to its pre-poll promise of not allowing foreign direct investment in the multi-brand retail sector — a move that may not find favour with its foreign trade partners, including the US and the EU.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X