ஐடி மற்றும் பீபிஓ துறையில் "வேலைவாய்ப்பு" 20% அதிகரிப்பு!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் வேலைவாய்ப்பு மற்றும் ஆட்சேர்ப்பு அதிகரித்துள்ளதாக வேலைவாய்ப்பு இணைதள நிறுவனமான நாக்ரி தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கடந்த ஜூலை மாதம் ஐடி மற்றும் பீபிஒ துறையில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும் தெரவித்துள்ளது.

 

மேலும் இந்த அறிக்கையில் ஜூன் மாதத்திற்கான ஜாப் இண்டக்ஸ் ஒப்பிடுகையில் ஜூலை மாதத்தில் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டு இருந்தது. பொதுவாக இத்தகைய வலைதளங்களில் ஐடி துறை வேலைவாய்ப்புகளே அதிகளவில் இருக்கும். மேலும் இந்தியாவில் மொத்த உற்பத்தி குறைந்திருக்கும் நிலையில் மற்ற துறைகளில் வேலைவாய்ப்பு மற்றும் ஆட்சேர்ப்பு எப்படி இருக்கிறது என்பதை இப்போது பார்போம்.

(READ: 6 reasons to buy Gold ETFs in place of physical gold)

ஐடி துறைக்கு பிரகாசமான வாய்ப்புகள்!!!

ஐடி துறைக்கு பிரகாசமான வாய்ப்புகள்!!!

இந்நிறுவனத்தின் கணிப்புகளின் படி அடுத்து சில மாதங்களில் ஐடி துறையில் அதிகப்படியான வேலைவாய்ப்பு உருவாக்கும் நிலை இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் முக்கிய ஐடி நிறுவனங்கள் காலியான இடங்கள் மற்றும் மனிதவள தேவைகளை பூர்த்தி செய்ய ஆட்சேர்ப்பை முடுக்கிவிட்டுள்ளதாக தெரிகிறது.

மந்தமான நிலை

மந்தமான நிலை

மேலும் இந்தியாவில் கடந்த சில மாதங்களாக மந்தமாக இருந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கை தற்போது மீண்டு வருகிறது. அடுத்த ஆறு மாதங்களில் இந்தியாவில் அதிகப்படியான வேலைவாய்ப்பு உருவாக்கும், குறிப்பாக பீபிஓ துறையில் அளவிற்கு அதிகநமாக வேலைவாய்ப்புகள் உருவாகும் என நாக்ரி நிறுவனத்தின் சீஇஓ ஹித்தேஷ் ஓபராய் தெரிவித்துள்ளார்.

ஐடி துறையை தவிற...
 

ஐடி துறையை தவிற...

மேலும் ஐடி துறையை தவிற வங்கியியல், டெலிகாம் மற்றும் உற்பத்தி துறையில் ஜூலை மாதம் வேலைவாய்ப்பு அதிகரிக்க துவங்கியுள்ளது. ஆனால் ஜூலை மற்றும் இன்சூரன்ஸ் துறையில் வேலைவாய்ப்பு அதிகளவில் குறைந்துள்ளது வருத்தத்தை அளிக்கிறது எனவும் ஓபராய் தெரிவித்தார்.

இந்திய நகரங்கள்

இந்திய நகரங்கள்

இந்தியாவில் அதிக வேலைவாய்ப்பு அளித்த மாநிலங்களில் பூனே 31 சதவீதத்தை பெற்றுள்ளது, அதேபோல் ஹைதெராபாத் மற்றும் சென்னை தலா 27 சதவீதம் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளது. அதேபோல் டெல்லி மற்றும் பெங்களுரூ 25 சதவீதம், மும்பை 17 சதவீதம் மற்றும் கொல்கத்தா 5 சதவீதம் பெற்றுள்ளதாக நாக்ரி தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Hiring activity rises 20% in July: Naukri

Hiring landscape in the country is showing signs of improvement as recruitment activity registered 20 per cent rise in July, led by the IT and BPO sector, says a report.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X