இனி இவர்களுக்கும் வாரத்தில் 2 நாள் லீவ்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவில் மிகப்பெரிய தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், தனது பணியாளர்களின் நலன் கருதி, நிறுவனத்தின் உற்பத்தி திறன் பாதிக்காத வகையில் வேலை நேரத்தை மாற்றியமைத்து வாரத்தில் 5 வேலை நாட்களாக குறைந்துள்ளது. இதற்கு முன் இந்நிறுவனத்தின் பணியாளர்கள் வார்த்தில் 6 நாட்கள் வேலை செய்து வந்தது குறிப்பிடதக்கது.

 

இதே நேரத்தில் மேற்கத்திய நாடுகளில் உள்ள நிறுவனங்களில், நிறுவன வேலைநாட்களை 3 நாளாக குறைக்க முடிவு செய்துள்ளனர். இத்திட்டத்தை முன்னணி தொழில் அதிபர்களும் ஆதரிக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது. பொதுவாக இந்தியாவும் சரி, இந்திய மக்களும் சரி புதிய மாற்றத்தை ஏற்றுக்கொள்ள தயங்குபவர்கள். இத்தகைய 3 நாள் திட்டம் இந்தியாவில் எப்போது வரும்.

3 நாள் திட்டம் இந்தியாவில் வரும்போது வரும்.. ரிலையன்ஸ் நிறுவனத்தில் செய்த புதிய மாற்றத்தை பற்றி இப்போது பார்போம்.

வேலை நேரம்...

வேலை நேரம்...

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்களில் வாரத்தில் 6 வேலைநாட்களாக இருந்ததை தற்போது 5 நாட்களாக குறைத்துள்ளது. இதனால் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறன் குறையுமா என்றால் இல்லை. நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் பணியாளர்களின் மன நிலையை கருத்தில் கொண்டு இந்நிறுவனம் வேலை நேரத்தை 7.5 மணிநேரத்தில் இருந்து 9 மணிநேரமாக உயர்த்தியுள்ளது. இதனால் 45 வார பணி நேரத்தில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது என இந்நிறுவனத்தின் உயர் மணிதவள அதிகாரி பிரபீர் ஜா தெரிவித்தார்.

மாற்றம் வளர்ச்சியை தரும்....

மாற்றம் வளர்ச்சியை தரும்....

இத்தகைய மாற்றும் நிறுவன பணியாளர்களுக்கு ஒரு புதிய உற்சாகத்தை அளிக்கும், இதனால் உற்பத்தி திறன் மற்றும் அளவு கண்டிப்பாக உயரும் எந ஏதிர்பார்க்கிறோம் எனவும் அவர் தெரிவித்தார். இந்த 5 நாள் வேலை திட்டம் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து நிறுவனத்தில் பல பிரிவுகள் செயல்படுத்தபட்டு வருகின்றன, ஆனால் இப்போது தான் இக்குழுமத்தின் அனைத்து துறை நிறுவனங்களிலும் செயல்படுத்தபட்டுள்ளது. இனி ரிலையன்ஸ் நிறுவனத்தின் பணிபுரியும் எல்லா பணியாளர்களுக்கும் வாரத்தில் 2 நாள் லீவ்...

முக்கிய பணியாளர்கள்
 

முக்கிய பணியாளர்கள்

இந்த முயற்சி நிறுவனத்தின் கடைநிலை ஊழியர்களுக்கு பயன்படும் விதமாக இருந்தாலும், இத்திட்டத்தை அமலுக்கும் கொண்டு வந்ததன் முக்கிய காரணம் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பணியாளர்களை நிறுவனத்தின் தக்க வைத்துக்கொள்ள எடுக்கப்பட்ட முடிவு என்பது குறிப்பிடதக்கது. மேலும் இத்திட்டம் புதிய பணியாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும் இருக்கும்.

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ

இக்குழுமத்தில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் உயர் அதிகாரி தான் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார் என்று பிரபீர் ஜா தெரிவித்தார்.

பிரிட்டிஷ் பெட்ரோலியம்

பிரிட்டிஷ் பெட்ரோலியம்

ரிலையன்ஸ நிறுவனம் தனது நிறுவநத்தின் மனிதவள திட்டங்களை மேம்பாடுத்த பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்துடன் கடந்த 3 வருடத்திற்கு முன்பு ஒரு ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த விஷயத்தை இக்குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி நிறுவந காலாண்டு அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RIL implements five-day week policy to retain top staff

Reliance Industries (RIL) has implemented five-day work weeks from the earlier six days, as the oil-to-telecom conglomerate aims to retain senior and overseas executives and synchronises HR policies with those of partner BP Plc. 
Story first published: Wednesday, August 20, 2014, 11:52 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X